under review

ஹமீமா முகைடீன்

From Tamil Wiki
Revision as of 22:16, 16 April 2024 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஹமீமா முகைடீன் (பிறப்பு: மார்ச் 20, 1952) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

ஹமீமா முகைடீன் இலங்கை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைில் மீராலெப்பை, லைலத்தும்மா இணையருக்கு மார்ச் 20, 1952-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது கருவாட்டுக்கல் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கல்முனை மகளிர் வித்தியாலயத்திலும் கல்முனை மத்தியக் கல்லூரியிலும் கற்றார். சம்மாந்துறை கனிஷ்ட தொழில்நுட்பக் கல்லூரியில் வியாபாரக் கற்கை நெறியில் பட்டம் பெற்றார். கலைமாணிப் பட்டம், கல்விமாணிப்பட்டம் ஆகிய பட்டங்களைப் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஹமீமா முகைடீன் கல்முனையைச் சேர்ந்த முகம்மது இப்றாஹிம் முகம்மது முகைடீன் என்பவரை திருமணம் செய்தார். நான்கு பிள்ளைகள். 1979-ல் ஆசிரியர் நியமனம் பெற்றார். தமிழ் பாடத்திற்கான ஆசிரியர் ஆலோசகராகவும் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஹமீமா முகைடீன் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதினார். இவரின் ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, ஆசிரியர் கலாசாலையின் 'கலை அமுது', வானொலி ஆகியவற்றில் வெளிவந்தன. நாடகப் பிரதிகள் எழுதினார். இவரின் நாடகப் பிரதிகள் இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகின.

உசாத்துணை


✅Finalised Page