being created

ஷோபாசக்தி

From Tamil Wiki
Revision as of 23:30, 29 January 2022 by Madhusaml (talk | contribs) (stage template moved)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

ஷோபாசக்தி”( அந்தோனிதாசன் யேசுதாசன்/அன்ரனிதாசன் யேசுதாசன்) ('1944-)

வாழ்க்கைக்குறிப்பு

பிறப்பு, இளமை

அந்தோனிதாசன்(அன்ரனி தாசன்) என்னும் இயற்பெயருடைய ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அல்லைப்பிட்டி என்ற கிராமத்தில் பிரான்சிஸ் யேசுதாசன்-கொலஸ்ரிகா ஜீவராணி இணையருக்கு பிறந்தார். மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் கொண்ட வறிய குடும்பம்.ஷோபா சக்தி தனது பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பை அல்லைப்பிட்டி பராசக்தி வித்யாலயத்தில் 1983 ஆம் ஆண்டு முடித்தார்.

தனி வாழ்க்கை

1983 இல் இலங்கையில் தமிழர்கள் மீதான கருப்பு ஜூலை வன்முறைத் தாக்குதல்களையும் கொலைகளையும் தொடர்ந்து ஷோபாசக்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்ட ஷோபாசக்தி , விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த கவிஞர் நிலாந்தனின் அடியொற்றி கவிதைகள் எழுதலானார். புலிகள் நடத்திய விடுதலைக்காளி தெருக்கூத்தில் (1985) முதன்மைப் பாத்திரமொன்றில் நடித்தார். விடுதலைப் புலிகளின் சிங்களப் பொதுமக்கள் மீதான அணுராதபுரப் படுகொலைகளும் , பிற தமிழ் விடுதலை இயக்கத்தினர் மீதான வன்முறைகளும் , தமிழப் பொதுமக்களின் மீதான சிறிய குற்றங்களுக்குமான கடும் தண்டனைகளும் 1986 இல் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து மனக்கசப்புடன் வெளியேறச் செய்தன.

அதைத் தொடர்ந்து பண்ணைப்பாலத்தில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை கிளப்பிவிட்டதாக விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட ஷோபாசக்தி நீண்ட விசாரணைக்குப் பின் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார். இந்திய அமைதிப்படை 1987 இல் இலங்கையில் தமிழர் பகுதிகளில் நிலைகொண்டிருந்த பொழுது புலிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை துவங்கியபோது ஷோபாசக்தி கொழும்பு தப்பிச் சென்றார். 1900 ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் வெளியேறியதும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போரைத்துவக்கின. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஷோபாசக்தி நான்கு மாதங்களுக்குப் பின்னர் சிங்களத் தோழி ஒருவரின் முயற்சியால் வெளிவந்தார்.

அதனைத் தொடர்ந்து இலங்கையை விட்டு போலிக்கடவுச் சீட்டில் வெளியேறி தாய்லாந்தில் மூன்றரை வருடங்கள் அகதியாக வாழ்ந்தார். ஐ.நா-வின்  ‘அகதிகளிற்கான உயர் ஆணையம்’ ஷோபாசக்தியை அகதியாக ஏற்றுக் கொண்டலும் அதை ஏற்காத தாய்லாந்து அரசு பலமுறை கொடும் சிறையில் அடைத்தது.

பின்னர்,போலிக் கடவுச்சீட்டு மூலம் 1993ம் ஆண்டு பிரான்சை அடைந்தார். அங்கே அவருக்கு அரசியல் தஞ்சம் கிடைக்கப்பெற்றது.1993 முதல் பிரான்சில் இலங்கை அகதியாக வாழ்ந்து வருகிறார்.

குடும்பம்

ஷோபாசக்தி திருமணம் செய்துகொள்ளவில்லை.

பங்களிப்பு

இலக்கிய கலை வாழ்க்கை

ஷோபாசக்தியின் கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் கிறிஸ்துவ தென்மோடிக் கூத்துகளும் அதற்கான மாதக்கணக்கான ஒத்திகையும் அவரது கலை அறிமுகம். 10 வயதிலேயே கூத்துக்களில் நடிக்க வந்துவிட்ட ஷோபாசக்தி , சமூக சிர்திருத்த நாடகங்களில் எழுதி நடிக்க ஆரம்பித்த்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலும் கவிதைகள் எழுதஇனார். பரப்பியல் நாடகங்களில் நடித்தார்.

தாய்லாந்தில் இருக்கும் பொழுது நெற்றிக்கண் என்ற கையெழுத்து – நகல் பத்திரிகையை நடத்தினார். பிரான்ஸில்க்குப் ‘நான்காம் அகிலம்’ என்ற சர்வதேச ட்ராட்ஸிகிய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அங்கு இலக்கிய வாசிப்பினாலும் உரையாடல்களாலும் ஷோபாசக்தி எழுத்தாளராக உருவாகினார். 'நிறப்பிரிகை’ குழுவோடு ஏற்பட்ட தொடர்பால் பின் நவீனத்துவம், தலித்தியம், பெரியாரியம் ஆகியவற்றைக் கற்கத் தொடங்கினார்.

‘சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்’ என்ற பாரதியின் வரியில் இருந்து எடுத்த சிவசக்தி என்றபெயரில் பிரான்ஸில் எழுதத்தொடங்கிய அவர், கடவுள் நம்பிக்கையற்ற தான் தன்னுடைய புனைப்பெயரை மாற்றிக் கொள்ளத் திர்மானித்தார். அவரது பிடித்த நடிகை “ஷோபா” என்றபெயருடன் முந்தைய புனைப்பெயரில் சக்தி என்ற சொல்லை இணைத்து ஷோபாசக்தி என் மாற்றிக்கொண்டார். ஷோபாசக்தி என்கிற பெயரில் அவர் முதல் கதை 1997 இல் அம்மா இதழில் வெளிவந்த ‘எலி வேட்டை’. தொடர்ந்து கட்டுரைகள் , சிறுகதைகள் நாவல்கள் எழுதத் தொடங்கினார். அவரது படைப்புகள் “அம்மா” ,” எக்சில்” உள்ளிட்ட இதழ்களில் வெளியாகின. ஷோபாசக்தியைப் பாதித்த எழுத்தாளர்களென கு.அழகிரிசாமி , ப.சிங்காரம் , எஸ்.பொன்னுத்துரை, சாரு நிவேதிதா, ரமேஷ் ப்ரேம் அவரே குறிப்பிடுகிறார்.

ஷோபாசக்தியின் முதல் நாவல் ’கொரில்லா’ (2001) ஈழப் போராட்ட அரசியலைப் புனைவாக்கிய ப்டைப்பு.

அவரது முதல் நாவலான ”கொரில்லா” (2001) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு குழந்தைப் பருவப் போராளியாக அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது.. கொரில்லா 2008 ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது .

அவரது இரண்டாவது நாவல் ”ம்” (2003) இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் 1983ல் வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. ம் நாவல் 2010 ம் ஆண்டு ஆங்கிலத்தில் Traitor என்ற பெயருடன் மொழிபெயர்க்கப்பட்டது . மலையாளத்தில் இந்த நாவலை மாத்ருபூமி வெளியிட்டது,

ஷோபாசக்தியின் மூன்றாவது நாவல் “Box கதைப்புத்தகம்”(2015) முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றில் யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்தரிக்கும் உபவரலாறாகப் பதியப்பட்டுள்ளது.



இதழியல்

சமூகப் பணிகள்

சமூகப் பணிகள்

இலக்கிய இடம்

படைப்புகள்

நாவல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

  • தேசத்துரோகி (2003)
  • எம்.ஜி.ஆர். கொலை வழக்கு-(2009)
  • கண்டி வீரன் (2014)
  • மூமின்-கருப்புப் பிரதிகள் (2021)

சிறார் நூல்கள்

கட்டுரைத் தொகுப்புகள்

ஆய்வு நூல்

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

  • The MGR Murder Trail (2014, Penguin) (ஆங்கில மொழிபெயர்ப்பு: அனுசியா ராமசுவாமி)
  • Friday et Friday (2018, Zulma, French translation by Faustine Imbert-Vier, Élisabeth Sethupathy and Farhaan Wahab)

திரைப்படங்கள்

விருதுகளும் பரிசுகளும்

கண்டிவீரன் சிறுகதைத் தொகுப்பிற்காக கனடா இலக்கியத்தோட்டம் வழங்கிய சிறந்த புனைவிற்கான விருது(2015)


தீபன் திரைப்படம்- சிறந்த நடிகருக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா(2015)

ஒட்டுமொத்த சிறுகதை பங்களிப்பிற்காக மணல்வீடு இதழ் வழங்கிய "கு.அழகிரிசாமி நினைவு விருது"(2017)




உசாத்துணைகள்