ஷோபாசக்தி

From Tamil Wiki

ஷோபாசக்தி”( அந்தோனிதாசன் யேசுதாசன்/அன்ரனிதாசன் யேசுதாசன்) ('1944-)

வாழ்க்கைக்குறிப்பு

பிறப்பு, இளமை

அந்தோனிதாசன்(அன்ரனி தாசன்) என்னும் இயற்பெயருடைய ஷோபாசக்தி 1967 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அல்லைப்பிட்டி என்ற கிராமத்தில் பிரான்சிஸ் யேசுதாசன்-கொலஸ்ரிகா ஜீவராணி இணையருக்கு பிறந்தார். மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் கொண்ட வறிய குடும்பம்.ஷோபா சக்தி தனது பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பை அல்லைப்பிட்டி பராசக்தி வித்யாலயத்தில் 1983 ஆம் ஆண்டு முடித்தார்.

தனி வாழ்க்கை

1983 இல் இலங்கையில் தமிழர்கள் மீதான கருப்பு ஜூலை வன்முறைத் தாக்குதல்களையும் கொலைகளையும் தொடர்ந்து ஷோபாசக்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்ட ஷோபாசக்தி , விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த கவிஞர் நிலாந்தனின் அடியொற்றி கவிதைகள் எழுதலானார். புலிகள் நடத்திய விடுதலைக்காளி தெருக்கூத்தில் (1985) முதன்மைப் பாத்திரமொன்றில் நடித்தார். விடுதலைப் புலிகளின் சிங்களப் பொதுமக்கள் மீதான அணுராதபுரப் படுகொலைகளும் , பிற தமிழ் விடுதலை இயக்கத்தினர் மீதான வன்முறைகளும் , தமிழப் பொதுமக்களின் மீதான சிறிய குற்றங்களுக்குமான கடும் தண்டனைகளும் 1986 இல் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து மனக்கசப்புடன் வெளியேறச் செய்தன.

அதைத் தொடர்ந்து பண்ணைப்பாலத்தில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை கிளப்பிவிட்டதாக விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட ஷோபாசக்தி நீண்ட விசாரணைக்குப் பின் அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார். இந்திய அமைதிப்படை 1987 இல் இலங்கையில் தமிழர் பகுதிகளில் நிலைகொண்டிருந்த பொழுது புலிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை துவங்கியபோது ஷோபாசக்தி கொழும்பு தப்பிச் சென்றார். 1900 ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் வெளியேறியதும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போரைத்துவக்கின. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஷோபாசக்தி நான்கு மாதங்களுக்குப் பின்னர் சிங்களத் தோழி ஒருவரின் முயற்சியால் வெளிவந்தார்.

அதனைத் தொடர்ந்து இலங்கையை விட்டு போலிக்கடவுச் சீட்டில் வெளியேறி தாய்லாந்தில் மூன்றரை வருடங்கள் அகதியாக வாழ்ந்தார். ஐ.நா-வின்  ‘அகதிகளிற்கான உயர் ஆணையம்’ ஷோபாசக்தியை அகதியாக ஏற்றுக் கொண்டலும் அதை ஏற்காத தாய்லாந்து அரசு பலமுறை கொடும் சிறையில் அடைத்தது.

பின்னர்,போலிக் கடவுச்சீட்டு மூலம் 1993ம் ஆண்டு பிரான்சை அடைந்தார். அங்கே அவருக்கு அரசியல் தஞ்சம் கிடைக்கப்பெற்றது.1993 முதல் பிரான்சில் இலங்கை அகதியாக வாழ்ந்து வருகிறார்.

குடும்பம்

ஷோபாசக்தி திருமணம் செய்துகொள்ளவில்லை.

பங்களிப்பு

இலக்கிய பங்களிப்பு

இதழியல்

சமூகப் பணிகள்

சமூகப் பணிகள்

இலக்கிய இடம்

படைப்புகள்

நாவல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

  • தேசத்துரோகி (2003)
  • எம்.ஜி.ஆர். கொலை வழக்கு-(2009)
  • கண்டி வீரன் (2014)
  • மூமின்-கருப்புப் பிரதிகள் (2021)

சிறார் நூல்கள்

கட்டுரைத் தொகுப்புகள்

ஆய்வு நூல்

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

  • The MGR Murder Trail (2014, Penguin) (ஆங்கில மொழிபெயர்ப்பு: அனுசியா ராமசுவாமி)
  • Friday et Friday (2018, Zulma, French translation by Faustine Imbert-Vier, Élisabeth Sethupathy and Farhaan Wahab)

திரைப்படங்கள்

விருதுகளும் பரிசுகளும்

கண்டிவீரன் சிறுகதைத் தொகுப்பிற்காக கனடா இலக்கியத்தோட்டம் வழங்கிய சிறந்த புனைவிற்கான விருது(2015)


தீபன் திரைப்படம்- சிறந்த நடிகருக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா(2015)

ஒட்டுமொத்த சிறுகதை பங்களிப்பிற்காக மணல்வீடு இதழ் வழங்கிய "கு.அழகிரிசாமி நினைவு விருது"(2017)




உசாத்துணைகள்

Template:Stub page