under review

ஷேக் சின்ன மௌலா: Difference between revisions

From Tamil Wiki
(ஷேக் சின்ன மௌலா - முதல் வரைவு)
 
mNo edit summary
Line 44: Line 44:
* ஷேக் சின்ன மௌலா [https://www.youtube.com/watch?v=jxEq_kCBKQ0 நாதஸ்வர இசை - தியாகராஜ கீர்த்தனைகள்]
* ஷேக் சின்ன மௌலா [https://www.youtube.com/watch?v=jxEq_kCBKQ0 நாதஸ்வர இசை - தியாகராஜ கீர்த்தனைகள்]
* [https://www.youtube.com/watch?v=qLAQKDw4gCk மங்கல வாத்யம் - வாணி ரெக்கார்டிங்]
* [https://www.youtube.com/watch?v=qLAQKDw4gCk மங்கல வாத்யம் - வாணி ரெக்கார்டிங்]
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]

Revision as of 19:25, 11 August 2022

ஷேக் சின்ன மௌலா (மே 12, 1929 - ஏப்ரல் 13, 1999) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

இன்றைய ஆந்திர மாநிலத்தில் ஓங்கோலுக்கு அருகில் கரவதி என்னும் கிராமத்தில் மே 12, 1929 அன்று ஷேக் காஸிம் ஸாஹிப் என்ற நாதஸ்வரக் கலைஞருக்கும் பீபீஜான் என்பவருக்கும் ஷேக் சின்ன மௌலா பிறந்தார். இவரது தந்தை வழி தாத்தா ஷேக் அப்துல்லா சாஹிப்பும் ஒரு நாதஸ்வரக் கலைஞர். அவருடைய இரண்டு மகன்களும் (ஷேக் மதார் சாஹிப், ஷேக் காஸிம் ஸாஹிப்) சிலகலூரிப்பேட்டை பெத்த மௌலா ஸாஹிப்பின் சீடர்கள்.

இளமையில் திருவாவடுதுரை டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் இசைத்தட்டுக்களைக் கேட்டு தானும் நாதஸ்வரம் பயில சின்ன மௌலா ஆர்வம் கொண்டார். பெரிய தகப்பனார் ஷேக் மதார் சாஹிப்பிடம் நாதஸ்வரப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் ஷேக் ஆதம் சாஹிப்பிடம் சில காலம் பயின்று கச்சேரிகள் செய்யத் தொடங்கினார். பின்னர் தஞ்சைப் பாணி இசையைக் கற்றுக் கொள்ள விரும்பி நாச்சியார்கோவில் துரைக்கண்ணுப் பிள்ளையிடம் சில ஆண்டுகள் மேற்பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

ஷேக் சின்ன மௌலா பீபீஜான் (தாயின் பெயரேதான்) என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஜான்பீவி என்று ஒரு மகள், அவர் ஷேக் சுபான்சாஹிபை மணந்தார். ஜான்பீவிக்கு மஸ்தான், காஸிம், பாபு, சின்ன காஸிம், அலி சாஹிப் என்ற ஐந்து மகன்களும் நூர்ஜஹான் என்றொரு மகளும் பிறந்தனர். இவர்களில் காஸிம், பாபு இருவரும் சின்ன மௌலானாவுடன் நாதஸ்வரம் வாசித்து பின்னர் இணையராக வாசித்து வருகின்றனர்.

இசைப்பணி

ஷேக் சின்ன மௌலா 1960ல் தமிழகத்தில் சேலத்தில் முதல் இசை நிகழ்ச்சியில் வாசித்தார். பின்னர் தொடர்ந்து தமிழகத்தில் வாய்ப்புகள் வரவே, திருச்சி அருகே திருவரங்கத்தில் குடியேறினார். சின்ன மௌலா ரங்கநாதர் மேல் மிகுந்த பக்தி கொண்டவர்.

ஷேக் சின்ன மௌலா பாடல்களை சாஹித்யமாகக் கற்றுக் கொண்ட பின்னரே நாதஸ்வரத்தில் வாசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். இவரது வாசிப்பில் பிருகாக்கள் புகழ் மிக்கவை. இந்தியா தவிர இலங்கை, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகளில் வாசித்தார்.

மாணவர்கள்

ஷேக் சின்ன மௌலா 1982ல் ‘சாரதா நாதஸ்வர சங்கீத ஆசிரமம்’ என்ற பெயரில் ஒரு நாதஸ்வரப் பயிற்சிப் பள்ளியை ஸ்ரீரங்கத்தில் தொடங்கினார். அங்கு பயின்ற மாணவர்களில் முக்கியமான சிலர்:

  • ஷேக் மஹபூப் சுபானீ
  • காலிஷாபி மஹபூப்
  • ஷேக் அப்துல்லா
  • காசிம் (மகன்)
  • பாபு (மகன்)

விருதுகள்

  • கலைமாமணி (1976)
  • பத்மஸ்ரீ (1977)
  • சங்கீத நாடக அகாதெமி விருது (1977)
  • கௌரவ டாக்டர் பட்டம் (1985) - ஆந்திரப் பல்கலைகழகம்
  • இசைப் பேரறிஞர் (1993) - தமிழிசைச் சங்கம்
  • சங்கீத ரத்னா மைசூர் சௌடய்யா தேசிய விருது (1995)
  • சங்கீத கலாநிதி (1998) - சென்னை மியூசிக் அகாதெமி

மறைவு

ஷேக் சின்ன மௌலா ஏப்ரல் 13, 1999ல் ஸ்ரீரங்கத்தில் மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

வெளி இணைப்புகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.