வேலுச்சாமிப்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Removed certain subtitles and merged contents as per standard)
(நூல்கள் மற்றும் அரங்கேற்றம் மாறுதல்கள்)
Line 1: Line 1:
[[File:வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை.jpg|thumb|212x212px]]
[[File:வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை.jpg|thumb|212x212px]]
வேலுச்சாமிப்பிள்ளை (1854-1926) (மற்ற பெயர்கள்: வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை) என்பவர் வெண்பா செய்யுள்களை விரைவாகவும், இலக்கண சுத்தமாக இயற்றுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் சிதம்பரத்தை அடுத்த தில்லைவிடங்கன் எனும் ஊரில் பிறந்தவர்.
வேலுச்சாமிப்பிள்ளை (1854-1926) (மற்ற பெயர்கள்: வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை) என்பவர் வெண்பா செய்யுள்களை விரைவாகவும், இலக்கண சுத்தமாகவும் இயற்றுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் சிதம்பரத்தை அடுத்த தில்லைவிடங்கன் எனும் ஊரில் பிறந்தார்.


== பிறப்பு மற்றும் கல்வி ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் தமிழ் மூவரில் ஒருவரான [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை] என்பவரின் வழிவந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவருக்கும் சுந்தரம்மாள் என்பவருக்கும் 1854 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார்.  
இவர் தமிழ் மூவரில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை என்பவரின் வழிவந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவருக்கும் சுந்தரம்மாள் என்பவருக்கும் 1854 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார்.  


இவர் சென்னை மில்லர் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார் பின் அங்கு தமிழ் பேராசிரியராக இருந்த இவருடைய உறவினர் சின்னசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். இதன்பின் [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடம்] மூன்று ஆண்டுகள் தமிழ் நூல்களை பாடங்கேட்டார். அதன்பின் அஷ்டாவதனம் சபாபதி முதலியாரின் உதவியுடன் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை|திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம்]] ஐந்து ஆண்டுகள் தமிழ் பயின்றார். இவர் [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89._%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D உ.வே.சாமிநாதையரின்] வகுப்புத்தோழர். பின் திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை மறைந்த பின் சுப்பிரமணிய தேசிகரிடம் சில நூல்கள் பாடங்கேட்டார்.  
இவர் சென்னை மில்லர் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார் பின் அங்கு தமிழ் பேராசிரியராக இருந்த இவருடைய உறவினர் சின்னசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். அதன் பின் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடம் மூன்று ஆண்டுகள் தமிழ் நூல்களை பாடங்கேட்டார். அதன்பின் அஷ்டாவதனம் சபாபதி முதலியாரின் உதவியுடன் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை|திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம்]] ஐந்து ஆண்டுகள் தமிழ் பயின்றார். இவர் உ.வே.சாமிநாதையரின் வகுப்புத்தோழர். திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை மறைந்த பின் சுப்பிரமணிய தேசிகரிடம் சில தமிழ் நூல்களை பாடங்கேட்டார்.  


இவர் தமிழின் மிகவும் சிக்கலான [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE#:~:text=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D. வெண்பா] செய்யுள் வகை மாதிரியை மிக எளிதாகவும், விரைவாகவும் பாடும் திறம் பெற்றிருந்தார். இவரின் திறமையைப்பாராட்டி திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ''வெண்பாப்புலி'' என்ற சிறப்புப் பெயர் அளித்தார்.
இவர் தமிழின் மிகவும் சிக்கலான வெண்பா செய்யுள் வகை மாதிரியை மிக எளிதாகவும், விரைவாகவும் பாடும் திறம் பெற்றிருந்தார். இவரின் திறமையைப் பாராட்டி திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ''வெண்பாப்புலி'' என்ற சிறப்புப் பெயர் அளித்தார்.


== பணி ==
== பணி ==


இவர் சென்னைக்கு குடிபெயர்ந்து பல மாணவர்களுக்கு தமிழ் நூல்களை பாடம் சொல்ல ஆரம்பித்து பின் இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்தரப் பள்ளியில் 1890 ஆண்டு பணியில் அமர்ந்தார். பின் 1920 வரை 30 ஆண்டுகள் தமிழாசிரியராகப் இந்தப்பள்ளியில் பணியாற்றியுள்ளார்.
இவர் சென்னைக்கு குடிபெயர்ந்து பல மாணவர்களுக்கு தமிழ் நூல்களை பாடம் சொல்ல ஆரம்பித்து, பின் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்தரப் பள்ளியில் 1890 ஆம் ஆண்டு தலைமைத் தமிழாசிரியராகப் பணியில் அமர்ந்தார், 1920 வரை 30 ஆண்டுகள் இங்கு பணியாற்றினார்.


== இறப்பு ==
== இறப்பு ==
Line 19: Line 19:
இவர், ''கந்தபுராணத்தை'' 5665 வெண்பாக்களில் பாடியுள்ளார். இந்நூலை மே 22, 1907 இல் காஞ்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றினார்.   
இவர், ''கந்தபுராணத்தை'' 5665 வெண்பாக்களில் பாடியுள்ளார். இந்நூலை மே 22, 1907 இல் காஞ்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றினார்.   


இவர் தேவாரம் பாடப்பெற்ற 32 திருப்பதிகங்களில் ஒன்றான திருக்கச்சூர் ஆலக்கோயிலுக்கு திருக்கச்சூர் ஆலக்கோயில் புராணம் இயற்றி ஏப்ரல் 30, 1923 ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்தார்.  
இவர் தேவாரம் பாடப்பெற்ற 32 சிவப்பதிகளில் ஒன்றான, காஞ்சிபுரத்தின் அருகே உள்ள திருக்கச்சூர் ஆலக்கோயில் என்று அழைக்கப்படும் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு ''திருக்கச்சூர் ஆலக்கோயில் புராணம்'' என்ற நூலை இயற்றி ஏப்ரல் 30, 1923 ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்தார்.  


இவர் இயற்றிய மற்ற நூல்கள்  
இவர் இயற்றிய மற்ற நூல்கள்  
Line 25: Line 25:
*  
*  
*  
*  
* கந்த புராண வெண்பா [5665 வெண்பா]
* திருவேட்டக்குடிப் புராணம்
* திருவேட்டக்குடிப் புராணம்
* தில்லைவிடங்கன் புராணம்
* தில்லைவிடங்கன் புராணம்
* திருக்கச்சூர் ஆலக்கோயில் புராணம்
* தேவார சிவதல புராணம்
* தேவார சிவதல புராணம்
* தேவார வைப்புத்தலக் கட்டளைக் கலித்துறை
* தேவார வைப்புத்தலக் கட்டளைக் கலித்துறை

Revision as of 12:08, 6 March 2022

வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை.jpg

வேலுச்சாமிப்பிள்ளை (1854-1926) (மற்ற பெயர்கள்: வெண்பாப்புலி வேலுச்சாமிப்பிள்ளை) என்பவர் வெண்பா செய்யுள்களை விரைவாகவும், இலக்கண சுத்தமாகவும் இயற்றுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் சிதம்பரத்தை அடுத்த தில்லைவிடங்கன் எனும் ஊரில் பிறந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் தமிழ் மூவரில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை என்பவரின் வழிவந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவருக்கும் சுந்தரம்மாள் என்பவருக்கும் 1854 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார்.

இவர் சென்னை மில்லர் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார் பின் அங்கு தமிழ் பேராசிரியராக இருந்த இவருடைய உறவினர் சின்னசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். அதன் பின் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடம் மூன்று ஆண்டுகள் தமிழ் நூல்களை பாடங்கேட்டார். அதன்பின் அஷ்டாவதனம் சபாபதி முதலியாரின் உதவியுடன் திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் ஐந்து ஆண்டுகள் தமிழ் பயின்றார். இவர் உ.வே.சாமிநாதையரின் வகுப்புத்தோழர். திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை மறைந்த பின் சுப்பிரமணிய தேசிகரிடம் சில தமிழ் நூல்களை பாடங்கேட்டார்.

இவர் தமிழின் மிகவும் சிக்கலான வெண்பா செய்யுள் வகை மாதிரியை மிக எளிதாகவும், விரைவாகவும் பாடும் திறம் பெற்றிருந்தார். இவரின் திறமையைப் பாராட்டி திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வெண்பாப்புலி என்ற சிறப்புப் பெயர் அளித்தார்.

பணி

இவர் சென்னைக்கு குடிபெயர்ந்து பல மாணவர்களுக்கு தமிழ் நூல்களை பாடம் சொல்ல ஆரம்பித்து, பின் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்தரப் பள்ளியில் 1890 ஆம் ஆண்டு தலைமைத் தமிழாசிரியராகப் பணியில் அமர்ந்தார், 1920 வரை 30 ஆண்டுகள் இங்கு பணியாற்றினார்.

இறப்பு

இவர் மே 11, 1926 ஆம் ஆண்டு தமது 72 வது வயதில் மறைந்தார்.

நூல்கள்

இவர், கந்தபுராணத்தை 5665 வெண்பாக்களில் பாடியுள்ளார். இந்நூலை மே 22, 1907 இல் காஞ்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றினார்.

இவர் தேவாரம் பாடப்பெற்ற 32 சிவப்பதிகளில் ஒன்றான, காஞ்சிபுரத்தின் அருகே உள்ள திருக்கச்சூர் ஆலக்கோயில் என்று அழைக்கப்படும் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு திருக்கச்சூர் ஆலக்கோயில் புராணம் என்ற நூலை இயற்றி ஏப்ரல் 30, 1923 ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்தார்.

இவர் இயற்றிய மற்ற நூல்கள்

  • திருவேட்டக்குடிப் புராணம்
  • தில்லைவிடங்கன் புராணம்
  • தேவார சிவதல புராணம்
  • தேவார வைப்புத்தலக் கட்டளைக் கலித்துறை
  • திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி

உசாத்துணை