under review

வேதா கோபாலன்

From Tamil Wiki
Revision as of 10:03, 2 May 2024 by Boobathi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வேதா கோபாலன்
வேதா கோபாலன்

வேதா கோபாலன் ( பிறப்பு: 1956) தமிழ் எழுத்தாளர், இதழாளர். சோதிடர். தமிழில் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதுபவர். குமுதம் இதழில் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

வேதா கோபாலன் 1956-ம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

தனிவாழ்க்கை

வேதா கோபாலனின் கணவர் எழுத்தாளர், இதழாளர் பாமா கோபாலன்.

இதழியல்

வேதா கோபாலன் குமுதம் இதழில் 13 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

சோதிடம்

வேதா கோபாலனின் தந்தை சோதிடர். வேதா கோபாலன் 2000-த்தில் மின்னம்பலம் இதழில் சோதிட வினாவிடை எழுதினார். அதன்பின் சோதிடபலன்கள் சொல்லி வருகிறார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய இதழ்களில் வாரபலன்கள் எழுதி வருகிறார். சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

வேதா கோபாலனின் முதல் சிறுகதை 1980-ல் குமுதத்தில் பிரசுரமானது. ஏறத்தாழ 850 சிறுகதைகள் எழுதியுள்ளார்.1980-ல் முதல் நாவல் மாலைமதி நாவலாகப் பிரசுரமானது. ஐம்பது நாவல்கள் மற்றும் இருபத்தைந்து குறுநாவல்கள் வெளிவந்துள்ளன.

விருதுகள்

வேதா கோபாலன் அமுதசுரபி நாவல் போட்டியில் ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற நாவலுக்காகப் பரிசுபெற்றார்.

இலக்கிய இடம்

வேதா கோபாலன் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர். தமிழ் வார இதழ்களில் பொதுவாசிப்புக்குரிய கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள் எழுதியுள்ளார்

நூல்கள்

ஆன்மிகம்
  • நானறிந்த ஆன்மிகம்
  • ஆன்மிகச் சிறுதுளிகள்
  • பிரமிட்களும் அவை பற்றிய அதிசயங்களும்
  • சிறுவன் பிரகலாதனும் நரசிம்மரும்
பொது
  • வாட்ஸப் எனும் வள்ளல்
  • வாட்ஸப்பில் வந்தவை
  • நான் சந்தித்த பிரபலங்கள்
  • முகநூலில் முகம் பார்க்கிறேன்
சிறுகதை
  • ஐயாயிரம் பிளஸ் ஐநூறு
நாவல்கள்
  • எனக்காகவா பாபு?
  • காலத்துக்கும் நீ வேண்டும்
  • மனதில் அமர்ந்த மயிலே
  • விழிபேசும் மொழி புதிது
  • காதலின் பொன் சங்கிலி
  • என் காதல் சதுரங்கம்
  • எங்கே அந்த ரகசியம்
  • விடியல் வெகுதூரமில்லை
  • நீ வெறும் பெண் தான்
  • புதிய சிறகுகள்
  • எப்படி கொல்வேனடி
  • ஜோடி சேர ஆசை
  • கண்ணக்காட்டு போதும்
  • மறுபடியும் மாளவிகா
  • இது மௌனமான நேரம்
  • உயிர்வரை இனித்தவள்
  • தண்டனை
  • கண்ணாமூச்சி ஏனடி
  • கண்ணே காவ்யா
  • இதுதானா இவன் தானா
  • ஒரு காதலி காதலிக்கவில்லை
  • மீண்டும் காதல்
  • காதல்புயல்
  • வருகிறேன் வீணா
  • என்னுயிரே
  • அழகான ஆவியே
  • காதல்வேண்டாம் கண்மணி
  • ஜோடி சேர ஆசை
  • புதிய சிறகுகள்
  • இனி இது வசந்தகாலம்

உசாத்துணை


✅Finalised Page