வேதநாயகம் சாஸ்திரியார்: Difference between revisions

From Tamil Wiki
(முதல் பத்தி)
Line 14: Line 14:


===== தனிவாழ்க்கை =====
===== தனிவாழ்க்கை =====
இவர் தஞ்சையில் இயங்கி வந்த தத்துவக் கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். இவர் சரபோஜி-IV மன்னரின் அவைப்புலவராக இருந்தார். இவருக்கு சரபோஜி-IV மன்னர் சிலகாலம் மாத ஊதியம் வழங்கி அரண்மனையில் பேணினார்.
இவர் தஞ்சையில் இயங்கி வந்த தத்துவக் கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். இவர் சரபோஜி-IV மன்னரின் அவைப்புலவராக இருந்தார். இவருக்கு சரபோஜி-IV மன்னர் சிலகாலம் மாத ஊதியம் வழங்கி பேணினார்.


===== குடும்பம் =====
===== குடும்பம் =====

Revision as of 20:06, 14 March 2022

நன்றி-கீற்று.காம்

வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864) என்ற இவர் கிருத்துவ தமிழறிஞராக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, கல்வி

இவர் செப்டம்பர் 7, 1774 ஆம் ஆண்டு தேவசகாயம் பிள்ளை, ஞானப்பூ அம்மாள் என்பவர்களுக்கு திருநெல்வேலியில் மகனாகப் பிறந்தார். இவருடன் இரு பெண்கள் உடன் பிறந்தவர்கள்.

இவர் தன்னுடைய 6 வது வயதில் தாயை இழந்து, இவருடைய தாத்தாவின் பாதுகாப்பில் 9 வயதுவரை இருந்தார். பின்னர் இவரின் தந்தை மறுமணம் புரிந்து இவரை அழைத்துக்கொண்டு திருநெல்வேலிக்கு குடிபெயர்ந்தார்.

இவருடைய 5 வது வயதில் இவருடைய தந்தை இவருக்கு ஒரு இலக்கண ஆசிரியர் மூலம் ஆரம்பக்கல்வியை அளித்தார். பின்னர் இவருடைய 9 வது வயதில் புளியங்குடி என்னும் ஊரில் இருந்த ஒரு தமிழாசிரியர் மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். பின்னர் திருநெல்வேலி பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார்.

இவரை தஞ்சையில் வாழ்ந்த ஸ்வார்ட்ஸ் ஐயர் என்ற ஜெர்மானியப் பாதிரியார் திருநெல்வேலியில் பார்த்து இவரின் தந்தையின் சம்மதத்துடன் தஞ்சைக்கு அழைத்துச் சென்று மதப்போதகக் கல்வியை அளித்தார். பின்னர் தரங்கம்பாடி உயர்நிலைப்பள்ளியில் சிலகாலம் படிக்கவைத்தார். இவருக்கு ஸ்வார்ட்ஸ் ஐயர் விவிலியத்தை அளித்து படிக்கச்சொன்னார். இவர் விவிலிய கருத்துகளை அழகான தமிழ் செய்யுள்களில் அமைத்துப் பாடியதைக்கண்ட அவர்கள் இவரை சாஸ்திரியார் என்று சிறப்பு பெயருடன் அழைக்க ஆரம்பித்தனர். இவருடைய வகுப்புத்தோழராக சரபோஜி மன்னர் பயின்றார்.

தனிவாழ்க்கை

இவர் தஞ்சையில் இயங்கி வந்த தத்துவக் கல்வி நிலையத்தில் (Theological Seminary) தலைமை ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். இவர் சரபோஜி-IV மன்னரின் அவைப்புலவராக இருந்தார். இவருக்கு சரபோஜி-IV மன்னர் சிலகாலம் மாத ஊதியம் வழங்கி பேணினார்.

குடும்பம்

இவர் மூன்று முறை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு சில ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் பிறந்தனர்.

பங்களிப்புகள்

இவர் கிருத்தவக் கருத்துகளை ஏற்றி எளிய செய்யுள்களாகவும், பாடல்களாகவும் எழுதினார். இது இவரைப் பெரும் புகழ் பெறச் செய்தது. இவர் சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்று தன் செய்யுள்களை அரங்கேற்றம் செய்தார். இவர் நோவாவின் கப்பல் பாட்டு என்ற நூலை தஞ்சை சரபோஜி மன்னர் அரசவையில் அரங்கேற்றம் செய்தார்.

இவர் சைவ, வைணவ மதங்களைப்போல் கதாகாலட்சேபங்களை, கிருத்தவ சமயக் கருத்துகளை கதாகாலட்சேபமாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தினார்.

வாழ்க்கைக் பதிவுகள்

இவர் தஞ்சை சரபோஜி மன்னரைப் புகழ்ந்து பாடல்கள் புனைந்து அவரிடம் பல பரிசுகள் பெற்றார். இவரை மன்னர் பிரகதீஸ்வரரைப்பற்றி பாடச்சொன்னபோது மறுத்து இயேசுவின் பாடல்களை பாடியதால் மனவருத்தம் உண்டாகி பின்னர் சரிசெய்யப்பட்டது.

மறைவு

இவர் ஜனவரி 24, 1864 ஆம் ஆண்டு, தமது 90 வது வயதில் மறைந்தார்.

படைப்புகள்

இவர் இயற்றிய நூல்கள்

  • பெத்லகேங் குறவஞ்சி
  • ஞானக்கும்மி
  • பரமநீதிப் புராணம்
  • காலவித்தியாசமாலை
  • ஞான ஏத்தப்பாட்டு
  • முன்னுரை
  • மெய்யறிவு
  • ஞானவழி
  • பராபரன் மாலை
  • ஆதியானந்தம்
  • அறிவானந்தம்
  • வத்து நிர்ணயம்
  • சைதன்யத் திறவுகோல்
  • பேரின்பக்காதல்
  • திருச்சபைத் தாலாட்டு
  • பிரலாப ஒப்பாரி
  • நோவாவின் கப்பல் பாட்டு
  • செபமாலை
  • ஞானதிப கீர்த்தனங்கள்
  • தியானப்புலம்பல்
  • ஆரணாதிந்தம்
  • ஞானவுலா
  • ஞான அந்தாதி
  • சாத்திரக் கும்மி
  • குருட்டு வழி
  • விதி விலக்கு
  • கடைசி நியாயத்தீர்ப்பு
  • பத கீர்த்தனை

உசாத்துணை