being created

வெ. சாமிநாத சர்மா

From Tamil Wiki
Revision as of 00:56, 3 July 2022 by ASN (talk | contribs) (Para Created, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வெ.சாமிநாத சர்மா

தமிழில் உலக நாடுகள், தலைவர்கள் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் வாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தவர் வெ. சாமிநாதசர்மா (வெங்களத்தூர் சாமிநாதசர்மா: 1895-1978) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர்

பிறப்பு, கல்வி

வெ. சாமிநாதசர்மா, ஜூலை 17, 1895ல், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெங்களத்தூர் என்னும் ஊரில், முத்துசாமி ஐயர், பார்வதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பமே பாரம்பரியமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி, சமஸ்கிருதம் என பன்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற குடும்பம் என்பதால் சர்மாவும் இயல்பிலேயே பன்மொழி ஆற்றல் உடையவராய் விளங்கினார். ஆனால் குடும்பச் சூழ்நிலையால் உயர்நிலைப் பள்ளியோடு சர்மாவின் கல்வி முற்றுப் பெற்றது. ஆர்வ மிகுதியால் தாமாகவே பயின்று தனது தகுதிகளை வளர்த்துக் கொண்டார்.

இலக்கிய முயற்சிகள்

நிலவிய தேசிய எழுச்சியும் சுதந்திர உணர்வும் இவரை ஆட்கொண்டன. எழுத்தார்வம் சுடர் விட்டது. பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதி அனுப்ப ஆரம்பித்தார். முதல் கட்டுரை அக்காலத்து இலக்கிய இதழாக விளங்கிய இந்துநேசனில் வெளியானது. தொடர்ந்து மற்றொரு கட்டுரை ‘பிழைக்கும் வழி’ என்ற இதழில் வெளியானது. அதற்குச் சன்மானமும் கிடைத்தது. அந்த ஊக்கத்தால் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

தனி வாழ்க்கை

சுருக்கெழுத்தாளர், ஆயுள் காப்பீட்டுக் கழகப் பணியாளர், கூட்டுறவுத்துறை ஊழியர் என பல பணிகளை மேற்கொண்டார். ஆனால், அவை எதுவுமே அவர் மனதிற்கு நிறைவாக அமையவில்லை. இக்காலக்கட்டத்தில் தான் வெ. சாமிநாதசர்மாவுக்கு மங்களம் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது.

இலக்கிய வாழ்க்கை

தமது எழுத்துக்களை வெளியிடுவதற்கென்றே ஓர் பிரசுர நிறுவனத்தை ஆரம்பித்தார் வெ. சாமிநாதசர்மா. 'செந்தமிழ்ச்சங்கம்' என்னும் அமைப்பை நிறுவிய இவர், அதன் மூலம் 'கௌரி மணி' என்னும் நூலை எழுதி வெளியிட்டார். 1914ல் வெளியான அதுதான் இவரது முதல் நூல்.

இக்காலக்கட்டத்தில் தான் இவருக்கு மங்களம் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. தொடர்ந்து சர்மாவிற்கு திரு.வி.க. ஆசிரியராக இருந்த ‘தேசபக்தன்’ இதழில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அங்கு துணையாசிரியராகச் சேர்ந்தார். பின் திரு.வி.க. ’நவசக்தி’ இதழ் துவங்கியபோது அதிலும் துணையாசிரியராகப் பணி புரிந்தார். 'ஸ்வராஜ்யா' நாளிதழிலும் இரு ஆண்டுகள் துணையாசிரியராகப் பணியாற்றினார். மைசூரில் சிலகாலம் பணியாற்றிய சர்மா, பின் அடையாறு பிரம்மஞான சபை நூல் வெளியீட்டுத் துறையில் பணியாற்றினார்.

பர்மா பயணம்

பர்மாவில் இலக்கிய வாழ்க்கை

பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு

இதழியல் பணிகள்




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.