வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம்

From Tamil Wiki
Revision as of 17:22, 24 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம் (1905) இலங்கையில் எழுதப்பட்ட முதல் வரலாற்று நாவல் என கருதப்படுகிறது. சி.வை. சின்னப்பிள்ளை இந்நாவலை எழுதினார். === ஆசிரியர் === வீரசிங்கன் நாவலை எழுத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம் (1905) இலங்கையில் எழுதப்பட்ட முதல் வரலாற்று நாவல் என கருதப்படுகிறது. சி.வை. சின்னப்பிள்ளை இந்நாவலை எழுதினார்.

ஆசிரியர்

வீரசிங்கன் நாவலை எழுதிய சி.வை.சின்னப்பள்ளை 1916 ஆம் ஆண்டு விஜயசீலம் என்னும் நாவலை எழுதி வெளியிட்டார். உதிரபாசம், இரத்தின பவானி ஆகிய நாவல்களையும் இவர் எழுதினார். இவர் பதிபாசிரியர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் தம்பி. 1910-ம் ஆண்டுக்கும் 1920-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்து வருட காலத்தில் இலங்கையில் நாவல் வாசிப்பை ஒரு பொதுப்போக்காக ஆக்கியவர் சி.வை.சின்னப்ப பிள்ளை என்று சில்லையூர் செல்வராஜன் சொல்கிறார்

இலக்கிய இடம்

கனக-செந்திநாதன் இந்நாவலை இலங்கையின் இரண்டாவது தமிழ்நாவல் என்றும் முதல் வரலாற்றுநாவல் என்றும் கருதுகிறார். சில்லையூர் செல்வராஜன் அதை ஏற்பதில்லை. வேறு நூல்களும் நடுவில் வெளிவந்தன என்கிறார். தி.த.சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி இதற்கு முன்னரே வெளிவந்தது. ஆனால் அது தமிழகத்துக் கதை. தி.த.சரவணமுத்துப் பிள்ளை இலங்கையைச் சேர்ந்தவர். இந்நாவல் இலங்கையை களமாகக் கொண்ட முதல் வரலாற்றுப் புனைவு