விஷ்ணுபுரம் சரவணன்: Difference between revisions

From Tamil Wiki
(பிறப்பு கல்வி)
Line 1: Line 1:
விஷ்ணுபுரம் சரவணன் கவிஞர் மற்றும் எழுத்தாளர். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்
விஷ்ணுபுரம் சரவணன் கவிஞர் மற்றும் எழுத்தாளர். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். தனது சொந்த ஊரான விஷ்ணுபுரம் என்பதை முன்னொட்டாகக் கொண்டு விஷ்ணுபுரம் சரவணன் என்கிற பெயரில் எழுதி வருகிறார்.
==பிறப்பு, கல்வி==
==பிறப்பு, கல்வி==
விஷ்ணுபுரம் சரவணன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணுபுரம் என்னும் ஊரில் சிவராமன் கல்யாணி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். தனது ஊரில் தொடக்ககால கல்வியை முடித்தவர் பின்னர் ஊடகவியலில் பட்டயக் கல்வியை நிறைவு செய்தார்.  

==தனிவாழ்க்கை==
==தனிவாழ்க்கை==
விஷ்ணுபுரம் சரவணன் பிரியதர்ஷிணி என்பவரை மணந்தார். தமிழினி என்கிற மகள் இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
பள்ளிக்காலம் தொட்டே கலை இலக்கியப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் கூட்டங்களை ஒருங்கிணைத்தார்.
==இதழியல்==
விஷ்ணுபுரம் சரவணன் ஊடகவியலாளராக சென்னைக்கு இடம் பெயர்ந்தார். தமிழ் ஆழி, விகடன் குழுமம் மற்றும் நியூஸ் தமிழ் உள்ளிட்ட அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் 15 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். சுட்டி விகடனில் உதவி ஆசிரியராகவும் விகடன் தடம் இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் பணியாற்றினார். தற்போது, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் ஊஞ்சல், தேன்சிட்டு ஆகிய மாணவர் இதழ்களின் இணையாசிரியராக உள்ளார்
==இலக்கிய வாழ்க்கை==
விஷ்ணுபுரம் சரவணன் தனது கவிதைகளை தன்னுடைய வலைப்பூவில் பதிவேற்றி வந்தார். ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி என்கிற இவரது கவிதைத் தொகுப்பு 2008 ம் ஆண்டில் வெளியானது. குழந்தைகள் உலகம் சார்ந்து ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். குழந்தை நாடகக் கலைஞர் வேலு சரவணன் மற்றும் கவிஞர் யுமா வாசுகி ஆகியோரின் நட்பின் வாயிலாக சிறார் இலக்கியத்தில் இயங்கத் துவங்கினார். அவ்வகையில் சிறார் இலக்கியத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் ’கயிறு’ என்னும் சிறுகதை நூல் எழுபத்தைந்தாயிரம் பிரதிகள் கடந்து விற்பனையாந்து குறிப்பிடத்தக்கது
சிறாருக்கான கதைகள் தவிர, பெற்றோர் - ஆசிரியருக்கான நூல்களும் எழுதியுள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு கதை எழுதவும் சொல்லவும் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார். ’தி இந்து தமிழ் திசை’ யின் ’மாணவர் எழுத்தாளரே’ எனும் தொடர் எழுதியுள்ளார்
மூத்த படைப்பாளிகளின் சிறார் எழுத்தை தனியாக தமிழ் சிறார் எழுத்தாளர்களை கவனப்படுத்தியுள்ளார். அவ்வகையில், எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதி அச்சில் இல்லாது போன ‘மூன்று பிள்ளைகள்’ மற்றும் ‘காளிவரம்’ ஆகிய நூல்களைப் பற்றி கவனப் படுத்தியதும் அதில் ’மூன்று பிள்ளைகள்’ அச்சு வடிவம் கண்டதும் குறிப்பிடத் தக்ககது.
எழுத்தைத் தாண்டி சிறார் இலக்கியத்தின் தேவை குறித்து தொடர்ச்சியாக உரையாடி வருகிறார்.  சிறார் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் விதமான உருவக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்தச் சங்கத்தை உருவாக்கிய சிலரில் இவரும் ஒருவர் ஆவார்
தமிழ்நாடு அரசு – பள்ளிக்கல்வித் துறை நடத்தும் மாணவர்களுக்கான பிரத்யேக இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
யுமா வாசுகி, வண்ணதாசன், பாமா மாற்றும் ரேவதி உள்ளிட்டோரைத் தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக குறிப்பிட்டுள்ளார்.
==இலக்கிய இடம்==
சிறார் இலக்கியம் பொதுவாக ஒரு கற்பனை உலகை மட்டுமே உருவாக்கி, நிகழ்கால வாழ்வின் உண்மைகளை குழந்தைகளுக்குக் காட்டாமல் மறைக்கும் சாத்தியம் கொண்டிருக்கிறது. அவ்வகையில், சிறார்களுக்கு சமூகத்தைப் பற்றியும் திறந்து காட்டும் எழுத்துக்களாக  விஷ்ணுபுரம் சரவணன் கதைகள் உள்ளன.  சிறார் கதைகளை சிறார் மொழியில் பரப்புரை ஏதுமின்றிச் சொல்பவராக விளங்கிறார்.  அந்த வகையில் தமிழ் சிறார் எழுத்தாளர்கள் வரிசையில் எழுத்தாளர் ரேவதியின் தொடர்ச்சியாக விளங்குகிறார்.
==நூல் பட்டியல்==
=====கவிதைத்தொகுதி=====
ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி (கவிதைத் தொகுப்பு )
=====சிறார் இலக்கியங்கள்=====
வாத்து ராஜா
ஒற்றைச் சிறகு ஓவியா
நீலப்பூ
சிறார் சிறுகதை நூல்கள்
வித்தைக்காரச் சிறுமி
வானத்துடன் டூ
கயிறு (75 ஆயிரம் பிரதிகள் விற்பனை)
சாதனாவின் தோழி
எங்க தெரு
எங்க பூங்கா
உறவுகளுக்கு ஒரு வாழ்த்து
எங்க ஊரு
டிங் டாங்
=====பெற்றோர் ஆசிரியருக்கான நூல்=====
கதை கதையாம் காரணமாம்
குழந்தைகளுக்கு மரியாதை ! – கேள்விகள் - பல கோணங்கள்
வாசிப்புப் பேரியக்கம்

Revision as of 20:28, 23 January 2024

விஷ்ணுபுரம் சரவணன் கவிஞர் மற்றும் எழுத்தாளர். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். தனது சொந்த ஊரான விஷ்ணுபுரம் என்பதை முன்னொட்டாகக் கொண்டு விஷ்ணுபுரம் சரவணன் என்கிற பெயரில் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

விஷ்ணுபுரம் சரவணன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணுபுரம் என்னும் ஊரில் சிவராமன் கல்யாணி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். தனது ஊரில் தொடக்ககால கல்வியை முடித்தவர் பின்னர் ஊடகவியலில் பட்டயக் கல்வியை நிறைவு செய்தார்.

தனிவாழ்க்கை

விஷ்ணுபுரம் சரவணன் பிரியதர்ஷிணி என்பவரை மணந்தார். தமிழினி என்கிற மகள் இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். பள்ளிக்காலம் தொட்டே கலை இலக்கியப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் கூட்டங்களை ஒருங்கிணைத்தார்.

இதழியல்

விஷ்ணுபுரம் சரவணன் ஊடகவியலாளராக சென்னைக்கு இடம் பெயர்ந்தார். தமிழ் ஆழி, விகடன் குழுமம் மற்றும் நியூஸ் தமிழ் உள்ளிட்ட அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் 15 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். சுட்டி விகடனில் உதவி ஆசிரியராகவும் விகடன் தடம் இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் பணியாற்றினார். தற்போது, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் ஊஞ்சல், தேன்சிட்டு ஆகிய மாணவர் இதழ்களின் இணையாசிரியராக உள்ளார்

இலக்கிய வாழ்க்கை

விஷ்ணுபுரம் சரவணன் தனது கவிதைகளை தன்னுடைய வலைப்பூவில் பதிவேற்றி வந்தார். ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி என்கிற இவரது கவிதைத் தொகுப்பு 2008 ம் ஆண்டில் வெளியானது. குழந்தைகள் உலகம் சார்ந்து ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். குழந்தை நாடகக் கலைஞர் வேலு சரவணன் மற்றும் கவிஞர் யுமா வாசுகி ஆகியோரின் நட்பின் வாயிலாக சிறார் இலக்கியத்தில் இயங்கத் துவங்கினார். அவ்வகையில் சிறார் இலக்கியத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் ’கயிறு’ என்னும் சிறுகதை நூல் எழுபத்தைந்தாயிரம் பிரதிகள் கடந்து விற்பனையாந்து குறிப்பிடத்தக்கது

சிறாருக்கான கதைகள் தவிர, பெற்றோர் - ஆசிரியருக்கான நூல்களும் எழுதியுள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு கதை எழுதவும் சொல்லவும் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார். ’தி இந்து தமிழ் திசை’ யின் ’மாணவர் எழுத்தாளரே’ எனும் தொடர் எழுதியுள்ளார்

மூத்த படைப்பாளிகளின் சிறார் எழுத்தை தனியாக தமிழ் சிறார் எழுத்தாளர்களை கவனப்படுத்தியுள்ளார். அவ்வகையில், எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதி அச்சில் இல்லாது போன ‘மூன்று பிள்ளைகள்’ மற்றும் ‘காளிவரம்’ ஆகிய நூல்களைப் பற்றி கவனப் படுத்தியதும் அதில் ’மூன்று பிள்ளைகள்’ அச்சு வடிவம் கண்டதும் குறிப்பிடத் தக்ககது.

எழுத்தைத் தாண்டி சிறார் இலக்கியத்தின் தேவை குறித்து தொடர்ச்சியாக உரையாடி வருகிறார். சிறார் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் விதமான உருவக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்தச் சங்கத்தை உருவாக்கிய சிலரில் இவரும் ஒருவர் ஆவார்

தமிழ்நாடு அரசு – பள்ளிக்கல்வித் துறை நடத்தும் மாணவர்களுக்கான பிரத்யேக இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

யுமா வாசுகி, வண்ணதாசன், பாமா மாற்றும் ரேவதி உள்ளிட்டோரைத் தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக குறிப்பிட்டுள்ளார்.

இலக்கிய இடம்

சிறார் இலக்கியம் பொதுவாக ஒரு கற்பனை உலகை மட்டுமே உருவாக்கி, நிகழ்கால வாழ்வின் உண்மைகளை குழந்தைகளுக்குக் காட்டாமல் மறைக்கும் சாத்தியம் கொண்டிருக்கிறது. அவ்வகையில், சிறார்களுக்கு சமூகத்தைப் பற்றியும் திறந்து காட்டும் எழுத்துக்களாக விஷ்ணுபுரம் சரவணன் கதைகள் உள்ளன. சிறார் கதைகளை சிறார் மொழியில் பரப்புரை ஏதுமின்றிச் சொல்பவராக விளங்கிறார். அந்த வகையில் தமிழ் சிறார் எழுத்தாளர்கள் வரிசையில் எழுத்தாளர் ரேவதியின் தொடர்ச்சியாக விளங்குகிறார்.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுதி

ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி (கவிதைத் தொகுப்பு )

சிறார் இலக்கியங்கள்

வாத்து ராஜா

ஒற்றைச் சிறகு ஓவியா

நீலப்பூ

சிறார் சிறுகதை நூல்கள்

வித்தைக்காரச் சிறுமி

வானத்துடன் டூ

கயிறு (75 ஆயிரம் பிரதிகள் விற்பனை)

சாதனாவின் தோழி

எங்க தெரு

எங்க பூங்கா

உறவுகளுக்கு ஒரு வாழ்த்து

எங்க ஊரு

டிங் டாங்

பெற்றோர் ஆசிரியருக்கான நூல்