விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

From Tamil Wiki
Revision as of 21:27, 10 January 2022 by Madhusaml (talk | contribs)

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களாலும், அவரது நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பாகும். அவரது குறிப்பிடத்தக்க படைப்பான “விஷ்ணுபுரம்” புதினத்தின் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இதன் தலைமை இடம் தற்போது கோவை. 2009 உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. வி. அரங்கசாமி. இப்போது கோவையை மையமாக்கி செயல்படுகிறது. ஆண்டுதோறும் விஷ்ணுபுரம் இலக்கிய விருதினை வழங்கி வருகிறது.

நோக்கம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சீரிய இலக்கியத்தை பரப்பும் நோக்கம் கொண்டது. நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் கவனப்படுத்துவதும் ஆராய்வதும்தான் இலக்குகள். அதன்பொருட்டு கருத்தரங்கங்களையும் ஆய்வரங்கங்களையும் நடத்துகிறது.

விஷ்ணுபுரம் 2010 முதல் இலக்கியவட்டம் வருடம்தோறும் இலக்கியவிருதுகளை வழங்கிவருகிறது