விளாத்திக்குளம் சுவாமிகள்

From Tamil Wiki
Revision as of 00:19, 2 October 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "விளாத்திக்குளம் சுவாமிகள் ( ) == பிறப்பு, கல்வி == முன்னோர் காடல்குடி குறுநிலமன்னர்களின் மரபில் பிறந்தவர் விளாத்திக்குளம் சுவாமிகள். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

விளாத்திக்குளம் சுவாமிகள் ( )

பிறப்பு, கல்வி

முன்னோர்

காடல்குடி குறுநிலமன்னர்களின் மரபில் பிறந்தவர் விளாத்திக்குளம் சுவாமிகள். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் தாயார் ஆறுமுகத்தாய் அம்மாளின் உடன்பிறந்த சகோதரியான சண்முகத்தாய் அம்மாள் காடல்குடி சிற்றரசர் வீரகஞ்செய பாண்டியனை மணந்தார். 16 அக்டோபர் 1799ல் வீரபாண்டிய கட்டப்பொம்மனும் வீரகஞ்செய பாண்டியனும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தூக்கில் போடப்பட்டு இறந்தனர். வீரகஞ்செய பாண்டியனுக்கும் சண்முகத்தாய் அம்மாளுக்கும் லவவீரகஞ்செய பாண்டியன், குசலவீரகஞ்செய பாண்டியன் என இரு மகன்கள். குசலவீரகஞ்செய பாண்டியன் 12 அக்டோபர் 1801ல் ஆங்கிலேய அரசால் மருது சகோதரர்களுடன் தூக்கிலிடப்பட்டார். குசலவீரகஞ்செய பாண்டியனின் மனைவி வெள்ளையம்மாளுக்கு வீரகஞ்செய பாண்டியனுக்கும் அவர் மனைவி சுப்புலட்சுமிக்கும் வீர்கஞ்செய சாலை துரைபாண்டியன் என்னும் மகன்.

வீரகஞ்செய சாலை துரைப்பாண்டியனுக்கும் ஜக்கம்மாளுக்கும் மல்லம்மாள் என்னும் மகளும் சோமசுந்தர ஜெகவீரகஞ்செய பாண்டியன் என்னும் மகனும் பிறாந்தனர். சோமசுந்தர ஜெகவீரகஞ்செய பாண்டியனுக்கும் கோவம்மாள் என்னும் பாக்கியலட்சுமிக்கும் ஐந்து குழந்தைகளில் ஒருவராக பிறந்தார் விளாத்திக்குளம் சுவாமிகள்.

பெற்றோர்

விளாத்திக்குளம் சுவாமிகளின் இயற்பெயர் நல்லப்பசாமி பாண்டியன். சோமசுந்தர ஜெகவீரகஞ்செய பாண்டியன் - பாக்கியலட்சுமி இணையருக்கு 24 ஏப்ரல் 1889 ல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், காடல்குடி கிராமத்தில் விளாத்திக்குளம் சுவாமிகள் பிறந்தார்.

கல்வி

ஆங்கிலேய அரசை எதிர்த்து போரிட்டமையால் காடல்குடியில் இருந்த அவர்களின் அரண்மனை அரசால் தகர்க்கபப்ட்டது. ஆகவே அவர்கள் தங்கள் பாளையத்துக்கு உட்பட்ட விளாத்திக்குளத்தில் குடியேறினர்.