under review

விரியூர் நக்கனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 3: Line 3:
விரியூர் நக்கனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். விரியூரில் பிறந்தார், நக்கனார் என்பது பெயர்.
விரியூர் நக்கனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். விரியூரில் பிறந்தார், நக்கனார் என்பது பெயர்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
விரியூர் நக்கனார் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் 332வது பாடலாக உள்ளது. வாகைத்திணைப்பாடல். மூதின்முல்லைத் துறையில் அமைந்த பாடல். மறவரின் போர் வேலைப்பற்றிய பாடல்.
விரியூர் நக்கனார் பாடிய பாடல் ஒன்று [[புறநானூறு|புறநானூற்றில்]] 332-வது பாடலாக உள்ளது. [[வாகைத் திணை]]ப்பாடல். மூதின்முல்லைத் துறையில் அமைந்தது. மறவரின் போர் வேலைப்பற்றிய பாடல்.
===== பாடல் வழி அறியவரும் செய்திகள் =====  
===== பாடல் வழி அறியவரும் செய்திகள் =====  
மறவரின் போர் வேல்: அந்த அணிவகுப்புடன் நீராட்டுவதற்காக இன்னிசை முழங்க யாழிசைப் பண்ணுடன் எடுத்துச் செல்லப்பட்டு நீராட்டப்படும். எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தைக் கண்டபோதே பகைமன்னர் மண்ணெல்லாம் அழுங்கி நடுங்குவர். இது போரில் பகைவேந்தரின் பட்டத்து யானை முகத்தில் பாயும்.
மறவரின் போர் வேல் அணிவகுப்புடன் நீராட்டுவதற்காக இன்னிசை முழங்க யாழிசைப் பண்ணுடன் எடுத்துச் செல்லப்பட்டு நீராட்டப்படும். இந்த ஊர்வலத்தைக் கண்டபோதே பகைமன்னர் அழுங்கி (வருந்தி) நடுங்குவர்.இவ்வேல் போரில் பகைவேந்தரின் பட்டத்து யானை முகத்தில் பாயும்.
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
புறநானூறு: 332 (திணை-வாகை, துறை-மூதின்முல்லை)
புறநானூறு: 332 (திணை-வாகை, துறை-மூதின்முல்லை)
Line 25: Line 25:
* [https://www.tamilvu.org/library/l1280/html/l12802e9.htm விரியூர் நக்கனார்: tamilvu]
* [https://www.tamilvu.org/library/l1280/html/l12802e9.htm விரியூர் நக்கனார்: tamilvu]

{{ready for review}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 23:04, 20 April 2024

விரியூர் நக்கனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

விரியூர் நக்கனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். விரியூரில் பிறந்தார், நக்கனார் என்பது பெயர்.

இலக்கிய வாழ்க்கை

விரியூர் நக்கனார் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் 332-வது பாடலாக உள்ளது. வாகைத் திணைப்பாடல். மூதின்முல்லைத் துறையில் அமைந்தது. மறவரின் போர் வேலைப்பற்றிய பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

மறவரின் போர் வேல் அணிவகுப்புடன் நீராட்டுவதற்காக இன்னிசை முழங்க யாழிசைப் பண்ணுடன் எடுத்துச் செல்லப்பட்டு நீராட்டப்படும். இந்த ஊர்வலத்தைக் கண்டபோதே பகைமன்னர் அழுங்கி (வருந்தி) நடுங்குவர்.இவ்வேல் போரில் பகைவேந்தரின் பட்டத்து யானை முகத்தில் பாயும்.

பாடல் நடை

புறநானூறு: 332 (திணை-வாகை, துறை-மூதின்முல்லை)

பிறர் வேல் போலாதாகி, இவ் ஊர்
மறவன் வேலோ பெருந் தகை உடைத்தே;
இரும் புறம் நீறும் ஆடி, கலந்து இடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
மங்கல மகளிரொடு மாலை சூட்டி,
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப,
தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,
மண் முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,
இருங் கடல் தானை வேந்தர்
பெருங் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.

உசாத்துணை

✅Finalised Page