வாணிதாசன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|வாணிதாசன் வாணிதாசன் ( ) தமிழ் மரபுக்கவிஞர்.")
 
No edit summary
Line 1: Line 1:
[[File:Vanidasan.jpg|thumb|வாணிதாசன்]]
[[File:Vanidasan.jpg|thumb|வாணிதாசன்]]
வாணிதாசன் ( ) தமிழ் மரபுக்கவிஞர்.
வாணிதாசன் (1915- ) தமிழ் மரபுக்கவிஞர்.
 
== பிறப்பு, கல்வி ==
பாண்டிச்சேரி அருகே வில்லியனூரில் 22-ஜூலை 1915ஆம் நாள் தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட அரங்க.திருக்காமு, துளசியம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார்.  இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு.  ஏழு வயதில் தாய் மறைந்தார். சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். விலியனூரில் தொடக்கக் கல்வி பெற்றார். அங்கே எல்லப்ப நாயிடு, முத்துக்குமாரசாமிப் பிள்ளை ஆகியோர் தமிழாசிரியர்களாக அமைந்தனர். பாண்டிச்சேரியில் உயர்நிலைப் பள்ளியில் பயில்கலையில் அங்கே ஆசிரியராக பணியாற்றிய பாரதிதாசனிடம் நெருக்கமானார். அதன்வழியாக திராவிட இயக்க ஈடுபாடு உருவானது. பள்ளியில் தமிழும் பிரெஞ்சும் கற்றார். உயர்நிலைப்பள்ளியில் புதுவை மாநிலத்தில் முதல் மாணவராக வென்றார். 1945-ல் சென்னையில் வித்வான் பட்டம் பெற்றார்.
 
== தனிவாழ்க்கை ==
1937 முதல் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். 1946 முதல் பாண்டிச்சேரி கல்வே அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 
== இலக்கியவாழ்க்கை ==
மாணவப்பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கினார். பாரதியின் நினைவு நாளையொட்டி இவர் இயற்றிய ‘பாரதி நாள் இன்றடா’ என்ற இவரது முதல் கவிதை, ‘தமிழன்’ நாளிதழில் 1937ல் வெளிவந்தது. தமிழன்  இதழாசிரியர் இவருக்கு ‘வாணிதாசன்’ என்று பெயர் சூட்டினார். அப்பெயரையே வைத்துக்கொண்டார். திராவிடநாடு இதழில் இவர் எழுதிய விதவைக்கொரு செய்தி என்னும் கவிதை புகழ்பெற்றது.
 
பொன்னி இதழ் [[பாரதிதாசன் பரம்பரை]] என்னும் கவிஞர் பட்டியலை வெளியிட்டபோது அதில் முதன்மையாக இடம்பெற்றார். பாரதிதாசன் இவரை பாராட்டி அறிமுகம் செய்தார்.பொன்னி, காதல், முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் உள்ளிட்ட இதழ்களில் எழுதினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் பயிற்சி பெற்றிருந்தார்.
 
அக்கால மரபுக்கவிஞர்களின் வழக்கப்படி குறுங்காவியங்களை எழுதினார். ‘தமிழச்சி கொடிமுல்லை’, ‘தொடுவானம்’ ஆகிய குறுங்காப்பிய நூல்கள் வெளிவந்தன. தமிழிசையில் ஈடுபாடுகொண்டு எழுதிய இசைப்பாடல்களின் தொகுப்பு ‘தொடுவானம்’ பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு ‘பொங்கல் பரிசு’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  ஏராளமான பாட்டு அரங்கங்களில் இவர் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘பாட்டரங்கப் பாடல்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. 
 
விக்டர் யுகோவால் எழுதப்பட்ட “ஆன்ழெல்லோ“ என்ற நாடகத்தை “காதல் உள்ளம்“ என்று மொழிபெயர்த்தார்.இந்த நாடகம் முழுமையாக “கலைமன்றம்” இதழில் வெளியிடப்பட்டது. மாப்பசானின் கதைகளையும் எமிலிஜோலா, பால்சாக் போன்றோரின் படைப்புகளையும் மொழிபெயர்த்தார்
 
== விருதுகள் ==
பாண்டிச்சேரி அரசு இவருக்கு செவாலியே விருது அளித்தது
 
== மறைவு ==
வாணிதாசன் 7- ஆகஸ்ட்- 1974 ல் 59-வது வயதில் மறைந்தார். -
 
== நினைவகங்கள், வாழ்க்கைவரலாறுகள் ==
பாண்டிச்சேரி அரசு இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசன் பெயரைச் சூட்டியுள்ளது.
 
== நூல்கள் ==
 
== உசாத்துணை ==
[https://kavithai.fandom.com/ta/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%9D வாணிதாசன் சென்னிமலை தண்டாயுதபாணி]

Revision as of 14:51, 14 March 2022

வாணிதாசன்

வாணிதாசன் (1915- ) தமிழ் மரபுக்கவிஞர்.

பிறப்பு, கல்வி

பாண்டிச்சேரி அருகே வில்லியனூரில் 22-ஜூலை 1915ஆம் நாள் தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட அரங்க.திருக்காமு, துளசியம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார்.  இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு. ஏழு வயதில் தாய் மறைந்தார். சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். விலியனூரில் தொடக்கக் கல்வி பெற்றார். அங்கே எல்லப்ப நாயிடு, முத்துக்குமாரசாமிப் பிள்ளை ஆகியோர் தமிழாசிரியர்களாக அமைந்தனர். பாண்டிச்சேரியில் உயர்நிலைப் பள்ளியில் பயில்கலையில் அங்கே ஆசிரியராக பணியாற்றிய பாரதிதாசனிடம் நெருக்கமானார். அதன்வழியாக திராவிட இயக்க ஈடுபாடு உருவானது. பள்ளியில் தமிழும் பிரெஞ்சும் கற்றார். உயர்நிலைப்பள்ளியில் புதுவை மாநிலத்தில் முதல் மாணவராக வென்றார். 1945-ல் சென்னையில் வித்வான் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

1937 முதல் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். 1946 முதல் பாண்டிச்சேரி கல்வே அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கியவாழ்க்கை

மாணவப்பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கினார். பாரதியின் நினைவு நாளையொட்டி இவர் இயற்றிய ‘பாரதி நாள் இன்றடா’ என்ற இவரது முதல் கவிதை, ‘தமிழன்’ நாளிதழில் 1937ல் வெளிவந்தது. தமிழன் இதழாசிரியர் இவருக்கு ‘வாணிதாசன்’ என்று பெயர் சூட்டினார். அப்பெயரையே வைத்துக்கொண்டார். திராவிடநாடு இதழில் இவர் எழுதிய விதவைக்கொரு செய்தி என்னும் கவிதை புகழ்பெற்றது.

பொன்னி இதழ் பாரதிதாசன் பரம்பரை என்னும் கவிஞர் பட்டியலை வெளியிட்டபோது அதில் முதன்மையாக இடம்பெற்றார். பாரதிதாசன் இவரை பாராட்டி அறிமுகம் செய்தார்.பொன்னி, காதல், முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் உள்ளிட்ட இதழ்களில் எழுதினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் பயிற்சி பெற்றிருந்தார்.

அக்கால மரபுக்கவிஞர்களின் வழக்கப்படி குறுங்காவியங்களை எழுதினார். ‘தமிழச்சி கொடிமுல்லை’, ‘தொடுவானம்’ ஆகிய குறுங்காப்பிய நூல்கள் வெளிவந்தன. தமிழிசையில் ஈடுபாடுகொண்டு எழுதிய இசைப்பாடல்களின் தொகுப்பு ‘தொடுவானம்’ பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு ‘பொங்கல் பரிசு’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஏராளமான பாட்டு அரங்கங்களில் இவர் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘பாட்டரங்கப் பாடல்கள்’ என்ற நூலாக வெளிவந்தது.

விக்டர் யுகோவால் எழுதப்பட்ட “ஆன்ழெல்லோ“ என்ற நாடகத்தை “காதல் உள்ளம்“ என்று மொழிபெயர்த்தார்.இந்த நாடகம் முழுமையாக “கலைமன்றம்” இதழில் வெளியிடப்பட்டது. மாப்பசானின் கதைகளையும் எமிலிஜோலா, பால்சாக் போன்றோரின் படைப்புகளையும் மொழிபெயர்த்தார்

விருதுகள்

பாண்டிச்சேரி அரசு இவருக்கு செவாலியே விருது அளித்தது

மறைவு

வாணிதாசன் 7- ஆகஸ்ட்- 1974 ல் 59-வது வயதில் மறைந்தார். -

நினைவகங்கள், வாழ்க்கைவரலாறுகள்

பாண்டிச்சேரி அரசு இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசன் பெயரைச் சூட்டியுள்ளது.

நூல்கள்

உசாத்துணை

வாணிதாசன் சென்னிமலை தண்டாயுதபாணி