வள்ளுவர்கள் (நூல்)

From Tamil Wiki
Revision as of 17:18, 2 September 2022 by Siva Angammal (talk | contribs)
வள்ளுவர்கள்

வள்ளுவர்கள் என்னும் நூல் சு. சண்முகசுந்தரம் இயற்றியது. திருவள்ளுவரைப் பற்றி வழங்கப்படும் பல்வேறு கதைகளைத் தொகுத்துக் கூறுகிறது இந்நூல்.

ஆசிரியர் குறிப்பு

வள்ளுவர்கள் என்னும் நூலின் ஆசிரியர்   சு. சண்முகசுந்தரம்  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கால்கரை எனும் கிராமத்தில் 1949-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் நாள் பிறந்தார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் 20 நூல்களை எழுதியுள்ளார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளும், ஐந்து நாவல்களும், 25 ஆய்வு நூல்களும், தமிழ்த் திரைப்படம், தமிழ் இலக்கியம் தொடர்பாக எழுதியுள்ளார். இவர் காவ்யா பதிப்பகம் எனும் பெயரில் நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

நூல் பொருண்மை

  திருவள்ளுவர் பிறந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. பொ.யு.மு. 51- ஆண்டை திருவள்ளுவர் ஆண்டு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திருவள்ளுவர் பிறப்பு, பிறந்த இடம், மனைவி, பிள்ளை போன்ற ஒவ்வொன்றிற்கும் பல்வேறு கதைகள் வழங்கி வருகின்றன. அக்கதைகளை தொகுத்து அளிப்பதாக 'வள்ளுவர்கள்' என்னும் இந்நூல் அமைந்துள்ளது.

நூல் அமைப்பு

வள்ளுவர்கள் நூல் கீழ்காணும் நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது;

  • கதை விபரங்கள்
  • கதைகளுக்கான களங்களும் சில காரணங்களும்
  • ஸ்டரக்சுரலிச பார்வையில் வள்ளுவர் கதைகள்
  • கதைகளுக்குப் பின்னர் உருவான சில விளைவுகள்

கதை விபரங்கள்

இந்தப் பகுதியில் கீழ்காணும் நான்கு வகைமைகளில்  கதைகள் இடம் பெற்றுள்ளன;

பிறப்புக் கதைகள்
  • பிரம்மாவின் அவதாரம் (2)
  • பிரம்மாவின் வாரிசு
  • அரச வாரிசு (2)
  • பிராமண வாரிசு
  • வேளாளர் வாரிசு
  • சமண வாரிசு
வள்ளுவர்கள்
வள்ளுவர் பெருமை கூறும் கதைகள்
  • வேதாளத்தை வென்ற கதை
  • திருவள்ளுவரும் இடைக்காடரும் சந்தித்த கதை
  • சங்கப் புலவர்கள் செருக்கடங்கிய கதை
  • பொறுமை பற்றிய கதை
  • சிவ - சக்தி நடனமாடிய கதை
  • சீத்தலை சாத்தனாரின் கதை
  • வள்ளுவர் பருத்தி ஆடை நெய்த கதை
வாசுகிக் கதைகள்
  • மணலைச் சோறாக்கிய கதை
  • கொங்கண முனிவரின் கதை
  • அந்தரத்தில் தண்ணீர்க்குடம் நின்ற கதை
  • உலக்கை நின்ற கதை
  • பழைய சோற்றினிலே ஆவி வந்த கதை
  • கிண்ணம் தண்ணீர் ஊசி கேட்ட கதை
ஏலேலசிங்கன் கதைகள்
  • குழந்தை வரம் கொடுத்த கதை
  • நெல் கொடுத்த கதை
  • பொன் போட்ட கதை
  • கப்பலை கரைக்கு இழுத்த கதை
  • ஆற்றைக் கடந்த கதை
  • மரமேறி தொங்கிய கதை

கதைகளுக்கான களங்களும் சில காரணங்களும்

இப்பகுதியில் கர்ண பரம்பரைக் கதைகள் போலவும் நாடோடிக் கதைகள் போலவும் அமைந்துள்ள வள்ளுவரைப் பற்றிய கதைகளுக்கான களங்களையும் அவை உருவானதற்கான காரணத்தையும் ஆராயப்பட்டுள்ளன.

ஸ்டரக்சுரலிச பார்வையில் வள்ளுவர் கதைகள்

வள்ளுவர் கதைகளை அமைப்பியல் ஆய்வுக்குட்படுத்தி அதன் பொதுத் தன்மைகளை ஆராய்கிறது வள்ளுவர்கள் நூலின் இந்தப்பகுதி.

கதைகளுக்குப் பின்னர் உருவான சில விளைவுகள்

வள்ளுவரின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான கதைகள் நாடகங்களைப் பற்றியும் திருவள்ளுவருக்கு உருவாக்கப்பட்ட சிலைகள் மற்றும் சித்திரங்கள் குறித்தும் இப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன.

முக்கியத்துவம்

பல்வேறு வகைகளில் வழங்கப்பட்டு வந்த திருவள்ளுவர் பற்றிய கதைகளை ஒரே நூலில் தொகுத்த வகையில் வள்ளுவர்கள் நூல் முக்கியத்துவம் பெறுகிறது.

உசாத்துணை

வள்ளுவர்கள், டாக்டர் சு. சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு (1985)