under review

வயதடைவு: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
 
Line 4: Line 4:
== வயதடைவு இலக்கியப்பொருள் ==
== வயதடைவு இலக்கியப்பொருள் ==
இலக்கியத்தில் வயதடைவு என்பது ஓர் இளைஞன் அல்லது இளம்பெண் தன் குழந்தைப்பருவத்தை வெவ்வேறு நிகழ்வுகள் மற்றும் அனுபவங்கள் வழியாகவும், அவை உருவாக்கும் உணர்வுகள் மற்றும் சிந்தனைகள் வழியாகவும் கடந்து தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை புரிந்துகொண்டு அதை எதிர்கொள்ளச் சித்தமாகும் முறையைச் சித்தரிக்கிறது.  

வயதடைவு நாவல்கள் இலக்கியத்தில் ஏன் முக்கியத்துவம் கொள்கின்றன எனில் சமூகம், பண்பாடு, மானுட உறவுகள் அனைத்தையும் புதிய கோணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்ய இந்தவகை எழுத்து எழுத்தாளனுக்கு உதவுகிறது என்பதனால்தான். வயதடைவு கொள்ளும் கதாபாத்திரம் முற்றிலும் தனக்கே உரிய கோணத்தில் அனைத்தையும் எதிர்கொள்ளும்போதே அப்படைப்புக்கு இலக்கிய இடம் அமைகிறது. பெரும்பாலும் எழுத்தாளர்களின் தனிவாழ்க்கை சார்ந்தவையாகவும் இத்தகைய படைப்புகள் இருக்கும்.

== இலக்கியப்படைப்புகள் ==
== இலக்கியப்படைப்புகள் ==

Latest revision as of 20:17, 12 July 2023

வயதடைவு (Coming of age) ஓர் இளைஞன் அல்லது இளம்பெண் தன் முதிராஇளமைப் பருவத்தில் இருந்து அடுத்தகட்டத்திற்குச் செல்வதைச் சித்தரிக்கும் புனைவு வகை. இது பேசுபொருள் சார்ந்த ஓர் இலக்கிய விமர்சனப் பகுப்பு. சமூகவாழ்க்கையிலும் இது பலவகையிலும் குறிப்பிடப்படுவது என்றாலும் இலக்கியத்திலேயே முதன்மையான பேசுபொருளாக உள்ளது.

வயதடைவு சமூகப்பொருள்

சமூகச் சூழலில் ஒரு சிறுவனோ சிறுமியோ முதிர்ந்த மனிதராக ஆகி சமூக உறுப்பினராகவும், பொறுப்புகளும் கடமைகளும் கொண்டவராகவும் ஆவதற்கு வெவ்வேறு படிநிலைகள் உள்ளன. அந்தணர்களில் பிரம்மச்சரியம் என்னும் கல்விப்பருவம் முடிந்ததும் நிகழும் சடங்குகள் ஓர் இளைஞன் வயதடைவு பெற்றதை குறிப்பிடுகிறது. வெவ்வேறு கலைத்தொழில் குடிகளில் இளைஞர்களை முதியவர்களாக, சமூகச் சபைகளில் உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளும் சடங்குகள் உள்ளன. தமிழ்ச்சூழலில் பெண்கள் முதல் மாதவிடாய் அடைவது வயதுக்கு வருதல் என்று சொல்லப்படுகிறது. உலகமெங்கும் பழங்குடிகளில் வெவ்வேறு சடங்குகள் இதற்காக உள்ளன.

வயதடைவு இலக்கியப்பொருள்

இலக்கியத்தில் வயதடைவு என்பது ஓர் இளைஞன் அல்லது இளம்பெண் தன் குழந்தைப்பருவத்தை வெவ்வேறு நிகழ்வுகள் மற்றும் அனுபவங்கள் வழியாகவும், அவை உருவாக்கும் உணர்வுகள் மற்றும் சிந்தனைகள் வழியாகவும் கடந்து தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை புரிந்துகொண்டு அதை எதிர்கொள்ளச் சித்தமாகும் முறையைச் சித்தரிக்கிறது.

வயதடைவு நாவல்கள் இலக்கியத்தில் ஏன் முக்கியத்துவம் கொள்கின்றன எனில் சமூகம், பண்பாடு, மானுட உறவுகள் அனைத்தையும் புதிய கோணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்ய இந்தவகை எழுத்து எழுத்தாளனுக்கு உதவுகிறது என்பதனால்தான். வயதடைவு கொள்ளும் கதாபாத்திரம் முற்றிலும் தனக்கே உரிய கோணத்தில் அனைத்தையும் எதிர்கொள்ளும்போதே அப்படைப்புக்கு இலக்கிய இடம் அமைகிறது. பெரும்பாலும் எழுத்தாளர்களின் தனிவாழ்க்கை சார்ந்தவையாகவும் இத்தகைய படைப்புகள் இருக்கும்.

இலக்கியப்படைப்புகள்

தமிழிலக்கியத்தில் வயதடைவு நாவல்கள் என்று மதிப்பிடத்தக்க பல ஆக்கங்கள் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன

✅Finalised Page