லக்ஷ்மி மணிவண்ணன்

From Tamil Wiki
Revision as of 14:15, 20 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "லக்ஷ்மி மணிவண்ணன் (அ.மணிவண்ணன்) (லட்சுமி மணிவண்ணன்) ( 23- நவம்பர் 1969)தமிழில் கவிதைகளும் இலக்கியவிமர்சனக் கட்டுரைகளும் அரசியல் சமூகவிமர்சனங்களும் எழுதிவரும் எழுத்தாளர்.கன்யாகுமர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

லக்ஷ்மி மணிவண்ணன் (அ.மணிவண்ணன்) (லட்சுமி மணிவண்ணன்) ( 23- நவம்பர் 1969)தமிழில் கவிதைகளும் இலக்கியவிமர்சனக் கட்டுரைகளும் அரசியல் சமூகவிமர்சனங்களும் எழுதிவரும் எழுத்தாளர்.கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுந்தர ராமசாமியின் மாணவராக இலக்கியத்துக்குள் நுழைந்தவர்.

பிறப்பு, கல்வி

கன்யாகுமரிமாவட்டத்தில் பனங்கொட்டான் விளை (பள்ளம்- அஞ்சல்) என்னும் ஊரில் 23- நவம்பர் 1969 அன்று ஆ.அய்யாக்கண்  எஸ்.பாக்கிய லட்சுமி ஆகியோருக்கு பிறந்தார். தொடக்கக் கல்வி நாகர்கோயில் டதி தொடக்கப்பள்ளி. உயர்நிலை,மேல்நிலை கல்வி  எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி நாகர்கோவில். பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பொறியியல் படிக்க சேர்ந்தார். முடிக்கவில்லை

தனிவாழ்க்கை

ஆசிரியையாக பணியாற்றிய லக்ஷ்மி மணிவண்ணனின் தாய் இளமையிலேயே மறைந்தார். தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய தந்தை மறுமணம் புரிந்துகொண்டார். லக்ஷ்மி மணிவண்ணன் தன் தாய்வழிப்பாட்டியிடமும் உறவினர்களிடமும் வளர்ந்தார். எஸ்.சுதந்திரவல்லியை 02-பிப்ரவடி 1996 அன்று மணந்தார்.  ரிஷி நந்தன் என்னும் மகனும் ரிஷி நாராயணி என்னும் மகளும் உள்ளனர்

இலக்கியவாழ்க்கை

லக்ஷ்மி மணிவண்ணன் இளமையில் வைரமுத்துவின் கவிதைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். தன்முன்னேற்றப் பேச்சுகளை நிகழ்த்தும் மேடைப்பேச்சாளராகவும் அறியப்பட்டார். 1987ல் தினமலர் டி.வி,.ஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்றார். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் உருவாகியது. சி.சொக்கலிங்கம், பொன்னீலன் ஆகியோரின் தொடர்பால் எழுத ஆரம்பித்தார். 1991ல் சிலேட் என்னும் சிற்றிதழை தொடங்கினார்.

36A பள்ளம் என்னும்  சிறுகதை  தன் முதல் இலக்கியப் படைப்பு என லக்ஷ்மி மணிவண்ணன் கருதுகிறார். 1990 ஆண்டு எழுதப்பட்ட இந்தக்கதை புதியபார்வை இதழில் 1993 ஆண்டு வெளியாகியது.   இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என சுந்தர ராமசாமி, காஃப்கா ஆகியோரை குறிப்பிடுகிறார்

இதழியல்

லக்ஷ்மி மணிவண்ணன் 1991 முதல் சிலேட் என்னும் சிற்றிதழை கால இடைவெளிகளுடன் நடத்தி வருகிறார். சிலேட் பிரசுரமாக நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். காலச்சுவடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டபோது அதில் ஆசிரியர்குழுவில் பணியாற்றினார். பின்னர் தமிழ் இணைய இதழில் துணைஆசிரியராக பணியாற்றினார்

விருதுகள்

  • குழந்தைகளுக்கு சாத்தான் ; பெரியவர்களுக்கு கடவுள் - கட்டுரைத் தொகுப்பு - ஆனந்த விகடன் விருது
  • ஓம் சக்தி ஓம் பராசக்தி - கட்டுரைத் தொகுப்பு - பீம ராஜா விருது

நூல் பட்டியல்

சிறுகதை

1 36A பள்ளம் -சிறுகதை

6 சித்திரக் கூடம் - சிறுகதை

வெள்ளைப் பல்லி விவகாரம் - சிறுகதை

கவிதை

சங்கருக்கு கதவற்ற வீடு - கவிதை

வீரலட்சுமி – கவிதை

எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் - கவிதைகள்

அப்பாவைப் புனிதப்படுத்துதல் – கவிதைகள்

கேட்பவரே - கவிதைகள்

கடலொரு பக்கம் வீடொரு பக்கம்

வாடா மலர்

விஜி வரையும் கோலங்கள்

நாவல்

அப்பாவின் வீட்டில் – நாவல்

கட்டுரைகள்

குழந்தைகளுக்கு சாத்தான் ;பெரியவர்களுக்கு கடவுள்

ஓம் சக்தி ஓம் பராசக்தி - கட்டுரைகள்

அரசியல், இலக்கியச் செயல்பாடுகள்

  • சிலேட் சார்பில் கவிதைக்கூட்டங்கள், கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தார்
  • பெருமாள்முருகன் தாக்கப்பட்டபோது இலக்கியவாதிகளின் கருத்துரிமையை முன்வைத்து கண்டனக்கூட்டம் ஒருங்கிணைத்தார்
  • பறக்கையில் நிழல்தங்கல் என்னும்பெயரில் இலக்கியவாதிகள் தங்கி எழுதுவதற்கான இடம் ஒன்றை அமைத்தார்.
  • லட்சுமி மணிவண்ணன் இடதுசாரி அரசியல் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு செயல்பட்டார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குகொண்டார்.
  • ஒற்றை இந்துத்துவ எதிர்ப்பு கருத்தரங்கு போன்ற அரசியல் கூட்டங்களை ஒருங்கிணைத்தார்

உசாத்துணை