being created

யூமா வாசுகி

From Tamil Wiki
Revision as of 12:04, 20 April 2024 by Ramya (talk | contribs) (Created page with "யூமா வாசுகி (தி. மாரிமுத்து) (பிறப்பு: ஜூன் 23, 1966) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், சிறுவர் எழுத்தாளர். ஓ.வி. விஜயனின் ”கசாக்கிண்ட இதிகாசம்” நாவலை தமி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

யூமா வாசுகி (தி. மாரிமுத்து) (பிறப்பு: ஜூன் 23, 1966) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், சிறுவர் எழுத்தாளர். ஓ.வி. விஜயனின் ”கசாக்கிண்ட இதிகாசம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக 2017-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

யூமா வாசுகியின் இயற்பெயர் தி. மாரிமுத்து. யூமா வாசுகி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஜூன் 23, 1966-ல் பிறந்தார். கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

யூமா வாசுகி ”தோழமை இருள்”, ”இரவுகளின் நிழற்படம்”, ”அமுத பருவம்”, ”வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு” ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். ”உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைத் தொகுப்பும், ”ரத்த உறவு”, ”மஞ்சள் வெயில்” ஆகிய நாவல்களும் எழுதியுள்ளார்.

விருதுகள்

  • ஓ.வி. விஜயனின் ”கசாக்கிண்ட இதிகாசம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக 2017-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
  • "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  • குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு ”சாத்தானும் சிறுமியும்” எனும் நூலாக வெளியானது.

உசாத்துணை

  • யூமா வாசுகி



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.