being created

யூமா வாசுகி: Difference between revisions

From Tamil Wiki
Line 53: Line 53:
* ஸ்ரீராமன் கதைகள்
* ஸ்ரீராமன் கதைகள்
== இணைப்புகள்  ==
== இணைப்புகள்  ==
* யூமா வாசுகி நேர்காணல் - “சகலமும் கவித்துவமாகவே இருக்கின்றன”: ஷங்கர்ராமசுப்ரமணியன்
* [https://www.sirukathaigal.com/tag/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/ யூமா வாசுகி: சிறுகதைகள் டாட் காம்]
* [https://www.sirukathaigal.com/tag/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/ யூமா வாசுகி: சிறுகதைகள் டாட் காம்]
* [https://premil1.blogspot.com/p/blog-page_5.html யூமா வாசுகி கவிதைகள்: yatra]
* [https://premil1.blogspot.com/p/blog-page_5.html யூமா வாசுகி கவிதைகள்: yatra]
Line 58: Line 59:
* [https://www.youtube.com/watch?v=WQHkyDBhoFc&ab_channel=CuckooMovementforChildren தன்னறம் இலக்கிய விருது | எழுத்தாளர் யூமா வாசுகி அனுபவநினைவுகளின் வாழ்வுரையாடல்]
* [https://www.youtube.com/watch?v=WQHkyDBhoFc&ab_channel=CuckooMovementforChildren தன்னறம் இலக்கிய விருது | எழுத்தாளர் யூமா வாசுகி அனுபவநினைவுகளின் வாழ்வுரையாடல்]
* [https://katrilalayumsiraku.blogspot.com/2010/07/blog-post.html யூமா வாசுகியின் இருவேறு உலகம் - ரத்த உறவு, மஞ்சள் வெயில்.]
* [https://katrilalayumsiraku.blogspot.com/2010/07/blog-post.html யூமா வாசுகியின் இருவேறு உலகம் - ரத்த உறவு, மஞ்சள் வெயில்.]
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=8674 யூமா வாசுகி: அரவிந்த் சுவாமிநாதன்: தென்றல்]
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=8674 யூமா வாசுகி: அரவிந்த் சுவாமிநாதன்: தென்றல்]

Revision as of 13:26, 20 April 2024

யூமா வாசுகி (தி. மாரிமுத்து) (பிறப்பு: ஜூன் 23, 1966) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், சிறுவர் இலக்கியப் படைப்பாளர், பதிப்பாளர், இதழாளர். ஓ.வி. விஜயனின் ”கசாக்கிண்ட இதிகாசம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக 2017-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். நவீனத்தமிழ்க்கவிதையில் ஒலிநயம், கட்டற்ற பித்துநிலை, சொற்கோவைகளின் புதுமை காரணமாக மிகவும் கவனிக்கப்பட்டவை அவருடைய கவிதைகள்.

வாழ்க்கைக் குறிப்பு

யூமா வாசுகியின் இயற்பெயர் தி. மாரிமுத்து. யூமா வாசுகி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஜூன் 23, 1966-ல் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றார். உடன்பிறந்தவர்கள் அக்கா வாசுகி, அண்ணன் துரை.

ஓவியம்

யூமா வாசுகி கோட்டோவியங்கள் வரைவதில் கை தேர்ந்தவர். தன் ஓவியங்களைத் தொகுத்து "Marooning Thickets" என்ற நூலாக வெளியிட்டார். “நவீன விருட்சம்” என்ற இதழில் இவரின் ஓவியங்கள் பல வெளியாகின. எழுத்தாளர் இரா. முருகனின் முதல் படைப்பான ”ஒரு கிராமத்துஒ பெண்ணின் தலைப்பிரசவம்” என்ற கவிதை நூலுக்கு கவிதைகளுக்கு ஏற்றவாறு ஓவியங்கள் வரைந்தார்.

இதழியல்

”கணையாழி”, “புதிய பார்வை”, ”சொல்புதிது” ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இருந்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் “துளிர்” இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார். ”மழை” என்ற சிற்றிதழை நடத்தினார். ”குதிரை வீரன்” என்ற இலக்கியச் சிற்றிதழை பத்தாண்டுகளாக நடத்தினார். சுந்தர ராமசாமி, பெருமாள் முருகன், பிரம்மராஜன் ஆகியோரின் படைப்புகள் இதில் வெளியாகின.

இலக்கிய வாழ்க்கை

யூமா வாசுகி “உயிர்த்திருத்தல்” என்ற முதல் கவிதைத்தொகுப்பை தமிழினி வசந்தகுமார் வெளியிட்டார். தொடர்ந்து வெளியான “ரத்த உறவு” நாவல் பாரட்டப்பட்டது. குடும்ப உறவுகளின் குரூரத்தையும் அங்கே இயல்பாக வெளிப்படும் மனித நேயத்தையும், அன்பையும், பாசத்தையும் பேசிய “ரத்த உறவு” நாவல் "Blood Ties" என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. ”தோழமை இருள்”, ”இரவுகளின் நிழற்படம்”, ”அமுத பருவம்”, ”வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு” ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். ”உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைத் தொகுப்பௌ வெளியிட்டார்

”மஞ்சள் வெயில்” என்ற மெல்லிய கவிதை நடையின் எழுதப்பட்ட நாவல் பேசப்பட்டது. தனது சென்னை வாழ்க்கை அனுபவங்களை ”சுதந்திர ஓவியனின் தனிக் குறிப்புகள்” என்ற தலைப்பில் நாவலாக எழுதி வருகிறார்.

மொழிபெயர்ப்புகள்

தஸ்தாயேவ்ஸ்கியின் ”நினைவுக்குறிப்புகள்”, டால்ஸ்டாய் எழுதிய ”நிகிதாவின் இளம்பருவம்”, அல்பேனிய நாவலான ”பெனி எனும் சிறுவம்” ஆகியவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். எஸ். சிவதாஸின் ‘மாத்தன் மண்புழுவின் வழக்கு, ஓ.வி. விஜயனின் ‘கஸாக்குகளின் இதிகாசம், பத்மாலயாவின் “கடல் கடந்த பல்லு”, ஜானு எழுதிய “பூமிக்கு வந்த விருந்தினர்கள்”, பய்யனூர் குஞ்ஞிராமன் எழுதிய ”ஒற்றைக்கால் நண்டு” ஆகியவை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த படைப்புகள். சாகித்ய அகாதமிக்காக ”ஸ்ரீராமன் கதைகள்” என்ற மலையாளச் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.

சிறார் கதைகள்

சிறார் கதைகள் பல எழுதினார். மொழிபெயர்ப்புகள் செய்தார். குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு ”சாத்தானும் சிறுமியும்” எனும் நூலாக வெளியானது. பூக்கதைகள், மின்மினிக்காடு, ஒரு குமிழின் கதை, ஆண்பிள்ளையார் பெண்பிள்ளையார், மரகதநாட்டு மந்திரவாதி, பனிமலை நாடு, ஒட்டகக்கண், வானில் பறவையின் கதை, உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், நிறம் மாறிய காகம், அன்பின் வெற்றி ஆகியவை இவர் எழுதிய குறிப்பிடத்தகுந்த சிறார் கதைகள்.

இலக்கிய இடம்

”நவீனத்தமிழ்க்கவிதையில் ஒலிநயம், கட்டற்ற பித்துநிலை, சொற்கோவைகளின் புதுமை காரணமாக மிகவும் கவனிக்கப்பட்டவை யூமா வாசுகியின் கவிதைகள். இவருடைய முதல்நாவல் ‘ரத்த உறவு’ குடும்ப உறவுகளிலுள்ள வன்முறையையும் கனிவையும் சித்தரிப்பது. தமிழில் பெரிதும் பேசப்பட்ட படைப்பு” என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • ஓ.வி. விஜயனின் ”கசாக்கிண்ட இதிகாசம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக 2017-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
  • "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  • தன்னறம் இலக்கிய விருது: 2021
  • இவரின் மரகத நாட்டு மந்திரவாதி என்ற சிறார் நூலுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருது கிடைத்தது.
  • ”இரவுகளின் நிழற்படம்” கவிதை நூலுக்கு தமிழ்நாடு அரசின் விருது கிடைத்தது
  • என்.சி.பி.எச் வழங்கிய மொழிபெயர்ப்புக்கான தொ.மு.சி. ரகுநாதன் விருது பெற்றார்.
  • ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலுக்கு, 2015-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விகடன் விருது வழங்கப்பட்டது.

ஆவணப்படம்

2021-ல் தன்னறம் இலக்கிய விருது விழாவை ஒட்டி யூமா வாசுகிக்கான ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • உனக்கும் உங்களுக்கும்
  • தோழமை இருள்
  • இரவுகளின் நிழற்படம்
  • அமுதபருவம்
  • வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு
  • யூமா வாசுகி கவிதைகள் (தன்னறம், 2021)
சிறுகதைத் தொகுப்பு
  • உயிர்த்திருத்தல் 2001
  • தூயகண்ணீர் (சிறார் கதை, 2019)

மொழிபெயர்ப்பு

ஆங்கிலத்திலிருந்து தமிழ்
  • சிங்கிஸ் ஐத்மாத்தவின் சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று
  • ஆண்டர்சன் கதைகள்
  • ஜோனதன் ஸ்விஃப்ட்டின்
  • கலிவரின் பயணங்கள்
மலையாளத்திலிருந்து தமிழ்
  • எஸ். சிவதாஸின் ‘மாத்தன் மண்புழுவின் வழக்கு
  • ஓ.வி. விஜயனின் ‘கஸாக்குகளின் இதிகாசம்
  • கடல் கடந்த பல்லு
  • பூமிக்கு வந்த விருந்தினர்கள்
  • ஒற்றைக்கால் நண்டு
  • ஸ்ரீராமன் கதைகள்

இணைப்புகள்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.