being created

யூமா வாசுகி: Difference between revisions

From Tamil Wiki
Line 3: Line 3:
யூமா வாசுகியின் இயற்பெயர் தி. மாரிமுத்து. யூமா வாசுகி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஜூன் 23, 1966-ல் பிறந்தார். கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றார்.  

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
யூமா வாசுகி ”தோழமை இருள்”, ”இரவுகளின் நிழற்படம்”, ”அமுத பருவம்”, ”வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு” ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். ”உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைத் தொகுப்பும், ”ரத்த உறவு”, ”மஞ்சள் வெயில்” ஆகிய நாவல்களும் எழுதியுள்ளார்.  
யூமா வாசுகி ”தோழமை இருள்”, ”இரவுகளின் நிழற்படம்”, ”அமுத பருவம்”, ”வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு” ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். ”உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைத் தொகுப்பும், ”ரத்த உறவு”, ”மஞ்சள் வெயில்” ஆகிய நாவல்களும் எழுதியுள்ளார். குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு ”சாத்தானும் சிறுமியும்” எனும் நூலாக வெளியானது.
 
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
”நவீனத்தமிழ்க்கவிதையில் ஒலிநயம், கட்டற்ற பித்துநிலை, சொற்கோவைகளின் புதுமை காரணமாக மிகவும் கவனிக்கப்பட்டவை யூமா வாசுகியின் கவிதைகள். இவருடைய முதல்நாவல் ‘ரத்த உறவு’ குடும்ப உறவுகளிலுள்ள வன்முறையையும் கனிவையும் சித்தரிப்பது. தமிழில் பெரிதும் பேசப்பட்ட படைப்பு” என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

Revision as of 12:17, 20 April 2024

யூமா வாசுகி (தி. மாரிமுத்து) (பிறப்பு: ஜூன் 23, 1966) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், சிறுவர் எழுத்தாளர். ஓ.வி. விஜயனின் ”கசாக்கிண்ட இதிகாசம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக 2017-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். நவீனத்தமிழ்க்கவிதையில் ஒலிநயம், கட்டற்ற பித்துநிலை, சொற்கோவைகளின் புதுமை காரணமாக மிகவும் கவனிக்கப்பட்டவை அவருடைய கவிதைகள்.

வாழ்க்கைக் குறிப்பு

யூமா வாசுகியின் இயற்பெயர் தி. மாரிமுத்து. யூமா வாசுகி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஜூன் 23, 1966-ல் பிறந்தார். கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

யூமா வாசுகி ”தோழமை இருள்”, ”இரவுகளின் நிழற்படம்”, ”அமுத பருவம்”, ”வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு” ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். ”உயிர்த்திருத்தல்” எனும் சிறுகதைத் தொகுப்பும், ”ரத்த உறவு”, ”மஞ்சள் வெயில்” ஆகிய நாவல்களும் எழுதியுள்ளார். குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு ”சாத்தானும் சிறுமியும்” எனும் நூலாக வெளியானது.

இலக்கிய இடம்

”நவீனத்தமிழ்க்கவிதையில் ஒலிநயம், கட்டற்ற பித்துநிலை, சொற்கோவைகளின் புதுமை காரணமாக மிகவும் கவனிக்கப்பட்டவை யூமா வாசுகியின் கவிதைகள். இவருடைய முதல்நாவல் ‘ரத்த உறவு’ குடும்ப உறவுகளிலுள்ள வன்முறையையும் கனிவையும் சித்தரிப்பது. தமிழில் பெரிதும் பேசப்பட்ட படைப்பு” என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • ஓ.வி. விஜயனின் ”கசாக்கிண்ட இதிகாசம்” நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக 2017-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
  • "ரத்த உறவு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  • தன்னறம் இலக்கிய விருது: 2021

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு

தோழமை இருள் இரவுகளின் நிழற்படம் அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு யூமா வாசுகி கவிதைகள்

சிறுகதைத் தொகுப்பு
  • உயிர்த்திருத்தல் 2001
  • தூயகண்ணீர் (சிறார் கதை, 2019)
மொழிபெயர்ப்பு
  • சிங்கிஸ் ஐத்மாத்தவின் சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று
  • ஆண்டர்சன் கதைகள்
  • ஜோனதன் ஸ்விஃப்ட்டின்
  • கலிவரின் பயணங்கள்
  • எஸ். சிவதாஸின் ‘மாத்தன் மண்புழுவின் வழக்கு (மலையாளத்திலிருந்து)
  • ஓ.வி. விஜயனின் ‘கஸாக்குகளின் இதிகாசம் (மலையாளத்திலிருந்து)

இணைப்புகள்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.