யுவன் சந்திரசேகர்

From Tamil Wiki
Revision as of 19:32, 21 February 2022 by Kavitha (talk | contribs)

This page is being created by User:Kavitha

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகர் (பிறப்பு: டிசம்பர் 14, 1961) தமிழின் பின் நவீனத்துவ அழகியல் கூறுகளை  எழுதிய முக்கியமான படைப்பாளி .எம் .யுவன் என்ற பெயரில் கவிதை தொகுப்புக்களையும், சிறுகதை தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். நாம் அறியாத பல யதார்த்த முகங்கள் உள்ள மாற்று மெய்மை பாடிய கருத்துக்களை யுவனின் படைப்புகளில் காணலாம்.

பிறப்பு, இளமை

ஆர். சந்திரசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட யுவன் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள கரட்டுப்பட்டி என்ற கிராமத்தில் எம் எஸ் ராமநாதன்- பி எஸ் பர்வதம் அம்மாள் தம்பதியினருக்கு  டிசம்பர் 14, 1961-ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை ஐந்தாம் வகுப்பு வரை கரட்டுப்பட்டி; ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளை மேல்நாச்சிகுளம், எட்டாம் வகுப்பை பெரியகுளத்திலும் பயின்றார் . பிறகு பள்ளியிறுதிவரை மதுரை ஷெனாய்நகர் மாநகராட்சிப்  பள்ளியிலும் , வணிகவியல் இளங்களைப் பட்டப்படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரி.படித்தார்.

தனிவாழ்க்கை

ராமநாத வங்கியில் ஊழியராக பணியில் சேர்ந்தார். பின் பாரத ஸ்டேட் வங்கியில் முதுநிலை எழுத்தாளராக பணியாற்றினார். பணி ஓய்விற்குப்பின் சென்னையில் வசிக்கிறார்.

குடும்பம்

ஆகஸ்ட் 8, 1987-ல் உஷா பகவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மகன் அரவிந்தன், மகள் மீரா .

இலக்கிய பங்களிப்பு

கல்லூரியில் படிக்கும்போதே இலக்கியத்தில் நாட்டம் கொண்ட யுவனின் முதல் சிறுகதை கல்லூரி ஆண்டு மலரிலும், சாவி இதழிலும் வெளியானது. ஏழாம் வகுப்புப் படிக்கும்போது தன் தந்தையின் மறைவையொட்டி ஆங்கிலத்தில் முதல் கவிதை எழுதினார்.  பின் முதல்  கவிதைத் தொகுப்பு   'ஒற்றை உலகம் ’ 1996-ல் வெளியானது . எழுத்தாளர்கள் பிரம்மராஜன், சுந்தர ராமசாமி மற்றும் கவிஞர்கள் தேவதச்சன், ஆனந்த் ஆகியோர் அவருக்கு  செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்:

இதழியல்

‘ பன்முகம் ‘ , ‘ உயிர்மை ‘ , ‘ காலச்சுவடு ‘, ‘ சொல்புதிது ‘, ‘ தீராநதி ‘ , ‘ சாம்பல் ‘ , ‘ அகநாழிகை ‘ , ‘ உலகத்தமிழ்.காம் ‘  போன்ற இலக்கிய, இணைய இதழ்களில் யுவனின் கதை, கட்டுரைகள், விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. கனடாவிலிருந்து வெளிவரும்  ‘ காலம் ‘ இதழிலும் கதைகள் எழுதியிருக்கிறார். பிரபல இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.

விருதுகள்

  • 2019-ல் தமிழ் கவிதைகளுக்கான  ஸ்பாரோ இலக்கிய விருது
  • 2011-ல் பயணக்கதை நாவலுக்காக கனடா இலக்கிய தோட்ட விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது

இலக்கிய முக்கியத்துவம்

கதைகளை பல கதைகளின் தொகுப்பாகவும் சுய அனுபவங்களாகவும் சொல்வது, தன்னையே பல ஆளுமைகளாக உருவாக்கி சித்தரிப்பது, வாசகனுடன் நேருக்கு நேர் பேசுவது போன்ற உரையாடல் பாணிகளில் கதையை நகர்த்திச் செல்வது என்று பின் நவீனத்துவத்தின் அனைத்துக் கூறும் கொண்டவையாக யுவனின் கதைகள் விளங்குகின்றன.வாழ்வை சற்றேனும் அங்கதச் சுவையுடன் அணுகும் போக்கு, எல்லா வகையான வட்டார வழக்குகளையும் கலந்து எழுதும் திறமை போன்றவை இவரது படைப்புகளில் காணலாம். பிரபல விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் தற்கால படைப்பாளிகளின் வரிசையில் யுவன் சந்திரசேகரும் முக்கியத்தும் தருகிறார்.

படைப்புக்கள்

கவிதை நூல்கள்
  • ஒற்றை உலகம்
  • வேறொருகாலம்
  • புகைச்சுவருக்கு அப்பால்
  • கை மறதியாய் வைத்த நாள்
நாவல்கள்
  • குள்ளச் சித்தன் சரித்திரம்
  • பகடையாட்டம்
  • கானல்நதி
  • மணல்கேணி
  • வெளியேற்றம்
  • பயணக்கதை
சிறுகதை தொகுப்புக்கள்
  • யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
  • ஒளிவிலகல்
  • ஏற்கனவே
மொழிபெயர்ப்புகள்
  • பெயரற்ற யாத்ரீகன் (ஜென் கவிதைத்தொகுப்பு)
  • எனது இந்தியா(ஜிம் கார்பெட்)

உசாத்துணை