ம.ரா.போ.குருசாமி

From Tamil Wiki
Revision as of 20:40, 25 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ம.ரா.போ.குருசாமி ( 1022- ) தமிழறிஞர். சங்க இலக்கியங்களுக்கு உரையெழ்தியவர். கல்வியாளர். இதழாளர் பிறப்பு, கல்வி ம.ரா.போ.குருசாமி இராம. இராக்கப்பருக்கும் அன்னம்மைக்கும் விருதுநகர் மாவட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ம.ரா.போ.குருசாமி ( 1022- ) தமிழறிஞர். சங்க இலக்கியங்களுக்கு உரையெழ்தியவர். கல்வியாளர். இதழாளர்

பிறப்பு, கல்வி

ம.ரா.போ.குருசாமி இராம. இராக்கப்பருக்கும் அன்னம்மைக்கும் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் 15-ஜூன் 1922ல் பிறந்தார். இளங்கலை இலக்கியம் (பி.ஓ.எல்) முதுகலை (எம்.ஏ) முதுகலை இலக்கியம் (எம்.லிட்) படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெற்றார். ம.ரா.போ.குருசாமி பேராசிரியர் மு. வரதராசனை தன் ஆசிரியராக கொண்டவர்.

தனிவாழ்க்கை

ஆசிரியர் பணி

ம.ரா.போ.குருசாமி தூய யோவான் கல்லூரி பாளையங்கோட்டை, அரசினர் கலைக்கல்லூரி கோவை, அரசினர் விக்டோரியா கல்லூரி பாலக்காடு ஆகிய கல்விநிலையங்களில் தமிழ் விரிவுரையாளராகவும் , பூ.சா.கோ. கலைக்கல்லூரி கோவையில் முதுநிலைப்பேராசிரியராகவும் பணியாற்றினார். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னையில் பேராசிரியராகவும், சாந்தலிங்க அடிகளார் கல்லூரி, கோவையில் துணைமுதல்வராகவும் பணியாற்றினார்

இதழியல்

ம.ரா.போ.குருசாமி இரண்டு இதழ்களை நடத்தியவர்

  • கலைக்கதிர் இதழை முதல் 12 ஆண்டுகள் பொறுப்பாசிரியராக அமர்ந்து நடத்தினார்.
  • சர்வோதயம் இதழை 10 ஆண்டுகள் பொறுப்பாசிரியராக நடத்தினார்

அமைப்புப் பணிகள்

ம.ரா.போ.குருசாமி பல்வேறு கல்வி இலக்கிய அமைப்புகளின் உறுப்பினராகவும், தலைவராகவும் பணியாற்றினார்

  • கோவை கம்பன் கழகத்தின் உறுப்பினராகவும் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.
  • கோவை நன்னெறிக் கழகத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார்.
  • கோவை வடக்கு சரிவோதய சன்ங்கத்தின் தலைவராக பணியாற்றினார்
  • சென்னை பல்கலையின் செனெட் உறுப்பினராக இருந்தார்
  • காந்தி கிராமப் பல்கலைக் கழகம் திண்டுக்கல்லில் கல்விக்குழும உறுப்பினராக இருந்தார்
  • காந்தி கிராமப் பல்கலைக் கழகம் திண்டுக்கல்லில் பாடநூற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தார்
  • சென்னை பல்கலைக் கழக பாடநூல்குழு உறுப்பினர் பணியாற்றினார்
  • காந்திய முதியோர் இலக்கியப் பண்ணை மதுரை அமைப்பின் இயக்குநராக இருந்தார்.
  • தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இலக்கியத்துறைக்குழு உறுப்பினர் பணியில் இருந்தார்..
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அகாடெமிக் கௌன்சில் உறுப்பினர் பணியாற்றினார்.

இலக்கியப் பணிகள்