under review

முத்துவேலுக் கவிராசர்

From Tamil Wiki
Revision as of 10:16, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முத்துவேலுக் கவிராசர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். மயில் விடு தூது முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

முத்துவேலுக் கவிராசர் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் தம்பிப்பட்டியில் (தற்போதைய விருதுநகர் மாவட்டம்) பிறந்தார். வாலசரஸ்வதி என்பது சிறப்புப் பெயர். சங்கரலிங்க முனிவரை அறிவாசிரியராகக் கொண்டு அருளுரை பெற்றார். வேதாந்த நூல்களைக் கற்றார். பெரு நிலக்கிழாரான மருதுபாண்டியனின் அவைக்களப் புலவராக இருந்தார். மருதுபாண்டியன் கவிராசருக்கு பூலாங்குண்டு எனும் ஊரை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை அளித்தார்.

இலக்கிய வாழ்க்கை

முத்துவேலுக் கவிராசர் இலக்கண இலக்கியங்களைக் கற்றவர். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் ஆகிய நான்கு பாக்களைப் பாடுவதில் வல்லவர். சென்னையில் அஷரத் நவாபின் அமைச்சராக இருந்த ராமசாமிப் பிள்ளையைச் சந்தித்து அவர் மேல் சீட்டுக்கவி பாடினார். நான்கு ஆண்டுகள் சென்னையில் இருந்தார். புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை மீது' மயில் விடு தூது' பாடினார். மருதுபாண்டியர் மீது செய்யுள்கள் பாடி பரிசில் பெற்றார். தனிப்பாடல்கள் பல பாடியுள்ளார்.

பாடல்

மருதுபாண்டியர் மீது பாடிய செய்யுள்

ஞாலமதில் உயர்கின்ற சிவகங்கை அரசநிலை
நாட்டிய கிரீடி யான
ராசேந்தி ராசெயம் செயம்விசயம் மேவுரகு
ராம செயஞ் செயங்கன்
னாமருது பாண்டியது ரையேசெயஞ் செயமெனது
நலமகிழ்ந்தினிது கேண்மோ

நூல் பட்டியல்

  • மயில் விடு தூது

உசாத்துணை


✅Finalised Page