under review

முத்துலட்சுமி ராகவன்: Difference between revisions

From Tamil Wiki
m (Created/Updated by Je)
(Added display-text to hyperlinks)
Line 66: Line 66:


* [https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2015/apr/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-1097920.html https://www.dinamani.com/all-editions/eமுத்துலட்சுமி ராகவன்]
* [https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2015/apr/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-1097920.html https://www.dinamani.com/all-editions/eமுத்துலட்சுமி ராகவன்]
* https://www.sahaptham.com/2018/05/07/muthulakshmi-ragavan-interview/
* [https://www.sahaptham.com/2018/05/07/muthulakshmi-ragavan-interview/ காஃபி வித் கரேஜியஸ் கதாசிரியர் - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM]
*http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4474&id1=84&issue=20180101
*[http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4474&id1=84&issue=20180101  
*[https://www.sahaptham.com/2018/05/07/muthulakshmi-ragavan-interview/ சகாப்தம் முத்துலட்சுமி ராகவன் பேட்டி]
நீரோடு செல்கின்ற ஓடம் - Kungumam Tamil Weekly Magazine
]
*[[https://www.sahaptham.com/2018/05/07/muthulakshmi-ragavan-interview/ காஃபி வித் கரேஜியஸ் கதாசிரியர் - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM] சகாப்தம் முத்துலட்சுமி ராகவன் பேட்டி]


{{ready for review}}
{{ready for review}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:33, 14 April 2022

முத்துலட்சுமி ராகவன்
முத்துலட்சுமி ராகவன்2
முத்துலட்சுமி ராகவன் கணவருடன்

முத்துலட்சுமி ராகவன் (1967 -18 மே 2021 ) தமிழில் பொதுவாசிப்புக்கான நாவல்களை எழுதும் எழுத்தாளர். பெண்களின் வாழ்க்கையை முன்வைத்து பெண்வாசகர்களுக்காக எழுதப்படும் படைப்புகளை எழுதுகிறார்.

பிறப்பு, கல்வி

முத்துலட்சுமி ராகவன் மதுரையில் பிறந்தார். மதுரையில் பட்டப்படிப்பு முடிக்கும் முன்னரே திருமணம் ஆகியது. திருமணத்திற்குப்பின் எம்.ஏ படிப்பை முடித்தார்

தனிவாழ்க்கை

முத்துலட்சுமி ராகவன் திருமணத்திற்குப்பின் திண்டுக்கல்லில் தபால்துறையில் ஊழியராக பணிக்குச் சேர்ந்தார். மூளையில் காசநோய் தாக்கியதனால் நீண்டநாள் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அப்போதுதான் எழுத ஆரம்பித்தார். முத்துலட்சுமி ராகவனின் கணவர் ராகவன் உரம் தயாரிக்கும் தொழிலைச் செய்துவந்தார். பின்னர் லட்சுமி பாலாஜி பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை தொடங்கி முத்துலட்சுமி ராகவனின் நூல்களை வெளியிடுகிறார். அருண் பதிப்பகம் என்னும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர்களுடைய ஒரே மகன் பாலச்சந்தர் டாக்டராக இருக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

முத்துலட்சுமி ராகவன் தன் 24 ஆவது வயதில் தொடுவானம் என்னும் நாவலை எழுதி அதை பாக்கெட் நாவல் அசோகனுக்கு அனுப்பினார். அந்நாவல் நிராகரிக்கப்படவே 16 ஆண்டுகள் எழுதியவற்றை தன்னிடமே வைத்துக்கொண்டார்.நோயில் இருந்து மீண்டபின்னர் 2007ல் தன் நாவலொன்றை அருணோதயம் பதிப்பகத்துக்கு அனுப்பினார். நிலாவெளியில் என்னும் அந்நாவல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முத்துலட்சுமி ராகவன் தன் 200 நாவல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் என்னவென்று நான் சொல்ல என்பதே தனக்கு பிரியமான நாவல் என்று சொல்கிறார். முதுலட்சுமி ராகவனுக்கு பிடித்த நாவலாசிரியர் வாசந்தி.

மறைவு

முத்துலட்சுமி ராகவன் 18 மே 2021ல் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

இலக்கிய இடம்

லக்ஷ்மி , ரமணி சந்திரன் என தமிழில் பெண்களால் பெண்களுக்காக எழுதப்படும் குடும்பப்பின்னணி கொண்ட கற்பனாவாத நாவல்களின் வரிசையில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி ராகவன். லக்ஷ்மியின் கதைகள் அவருக்கு முன்னர் எழுதப்பட்ட இலக்கியப்படைப்புக்களின் எளிய வடிவங்கள். ஜேன் ஆஸ்டன்,எமிலி புரோண்டே போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் மேலோட்டமான செல்வாக்கு கொண்டவை. ரமணி சந்திரனின் நாவல்கள் மேலும் எளிமையானவை, மில்ஸ் ஆண்ட் பூன் நாவல்களை முன்மாதிரியாகக் கொண்டவை. முத்துலட்சுமி ராகவனின் நாவல்கள் மேலும் எளிமையானவை. கதைக்கருக்களை அவை தமிழ்சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து எடுத்துக்கொண்டு வெவ்வேறு வகையில் கூறிப்பார்க்கின்றன. வேறுபட்ட வாழ்க்கைப்புலங்களோ நிகழ்வுகளோ இருப்பதில்லை. காதல், குடும்பப்பூசல்ல் சதிகள், திருப்பங்கள், மெல்லுணர்வுகள், நாடகீய நிகழ்வுகள் என அமைந்துள்ளன. ஏற்கனவே வாசகர்கள் அறிந்த சினிமா, தொலைகாட்சி கதைக்கருக்களை கொண்டவை என்பதனால் முன்பு எதையும் படித்திராத வாசர்களை கவர்பவை.

நூல்கள்

  1. அகல்விளக்கு
  2. அக்கினிப் பறவை.
  3. அந்திமழை பொழிகிறது..
  4. அம்மம்மா.. கேளடி தோழி…!
  5. ஆசையா.. கோபமா…?
  6. உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..
  7. உன்னோடு ஒரு நாள்…
  8. உன்னோடு நான்
  9. எங்கிருந்தோ ஆசைகள்…
  10. ஒற்றையடிப்.. பாதையிலே..
  11. கடாவெட்டு
  12. கண்ணாமூச்சி.. ரே.. ரே..
  13. கல்யாணமாம் கல்யாணம்
  14. கல்லூரிக் காலத்திலே..
  15. கை தொட்ட கள்வனே…!
  16. சிறுகதைகள்
  17. சொல்லாமலே பூப்பூத்ததே ..
  18. தஞ்சமென வந்தவளே
  19. தன்னந் தனிமையிலே
  20. தூரத்தில் நான் கண்ட உன் முகம்..!
  21. தென்னம்பாளை
  22. தேடினேன்.. வந்தது..
  23. தொடுவானம்
  24. நதி எங்கே போகிறது…?
  25. நிலாச் சோறு
  26. நிலாவெளியில்
  27. நீங்காத நினைவுகள்.
  28. பனித்திரை
  29. புலர்கின்ற பொழுதில்
  30. மகராசி
  31. மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்…
  32. முகங்கள் -part -II
  33. முகில் மறைத்த நிலவு.
  34. மூரத்தியின் பக்கங்கள்
  35. மௌனமான நேரம்..
  36. ராக்கெட்
  37. ராதையின் நெஞ்சமே..
  38. ரூப சித்திர மாமரக்குயிலே…!
  39. வந்தாள் மகாலட்சுமியே…
  40. வாங்க பேசலாம்
  41. வார்த்தை தவறியது ஏ

உசாத்துணை

நீரோடு செல்கின்ற ஓடம் - Kungumam Tamil Weekly Magazine ]



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.