being created

முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki
Revision as of 01:57, 1 February 2022 by Arulj7978 (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

This page is being created by User:Arulj7978

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் சூலபாணி. ஆலய வளாகத்தில் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு தனி கோவில்கள் உள்ளது. பன்னிரண்டு ஆலயங்களில் முதல் ஆலயம் ஆகும்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள ஊர் முஞ்சிறை. நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய சாலையில் மார்த்தாண்டத்தில் இருந்து பிரிந்து தேங்காய்பட்டணம் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது முஞ்சிறை. முஞ்சிறை மேல்நிலை பள்ளியின் எதிரே உள்ள சாலையில் 40 அடி உயர பாறை மேல் உள்ளது ஆலயம்.

மூலவர்

ஆலயத்தின் மூலவர் பெயர் சூலபாணி. மூலவர் லிங்க வடிவில் உள்ளார். சூலத்தை கையில் ஏந்தியவர் என்ற பொருளில் சூலபாணி என்று அழைக்கப்படுகிறார். கி.பி. 1435 காலத்திய கல்வட்டு மூலவரை மகாதேவர் என்று குறிப்பிடுகிறது. பிற்கால கல்வெட்டுகளிலும் சூலபாணி என்ற பெயர் காணப்படவில்லை.

தொன்மம்

முஞ்சிறை திருமலை ஆலயம் குறித்து இரண்டு தொன்மக்கதைகள் உள்ளன.

ராமாயண கதை : ராவணன் சீதையை கவர்ந்து செல்கையில் விமானம் பழுதடைந்து தரை இறங்கியது. சீதையை இங்கு தான் முதலில் சிறை வைத்தான் ராவணன். விமானம் பழுது நீக்கப்பட்ட பின்பு சீதையை கொண்டு சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான் ராவணன். சீதை முதலில் சிறை வைக்க பட்ட இடம் முஞ்சிறை என்றானது.

முருகன் கதை : பிரணவத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனை முருகன் சிறை பிடித்து வைத்த இடம் முஞ்சிறை என்றானது. அப்போது பிரம்மனின் முன் தோன்றிய வடிவம் தான் சூலப்பாணி ஆனது.

கோயில் அமைப்பு

கோயில் தரைமட்டத்தில் இருந்து 38 படிகளுக்கு மேல் பாறையில் உள்ளது.

கோவிலின் கிழக்கு வாசல் முன் அரங்கில் செம்பு கொடிமரம், பலிபீடம் மற்றும் ஐந்தடுக்கு பித்தளை விளக்கு அகியவை உள்ளது. அரங்கு 5 தூண்கள் கொண்ட ஓட்டு கூரையால் ஆனது. கொடிமரத்தின் உச்சியில் நந்தி உருவம் உள்ளது.

வடமேற்க்கு வெளிபிராகாரத்தில் பரிவார தெய்வமாக அய்யப்பன் உள்ளார். சிறிய நாகர் சிற்ப்பங்களும் உடன் உள்ளன. தென்மேற்க்கில் நாகர் பரிவார தெய்வமும் உள்ளது. பக்தர்கள் , பூசகர்கள் குளிக்க தனி குளங்கள் உள்ளன.

சுற்றி மதிலால் சூழ்ந்துள்ள ஒரு ஏக்கர் பரப்புள்ள ஆலய வளாகத்தில் சிவன் மற்றும் விஷ்ணு இருவருக்கும் கோவில்கள் உள்ளன.

கல் மண்டபம் : முன் அரங்கு தாண்டி 4 தூண்கள் கொண்ட சிறிய கல் மண்டபம் தாண்டி தெற்க்கு வடக்காக உள்ளது. சிவன் கோவிலுக்கும் விஷ்ணு கோவிலுக்கும் செல்ல இரண்டு பதைகள் உள்ளன. இரண்டு பக்கங்களிலும் 22 தூண்கள் உள்ளன. மிக குறைவான சிற்ப்பங்கள் மட்டுமே உள்ளன.

மகாதேவர் கோவில் : முன்புற தூண்கள் இரண்டும் சிங்க முகப்பு கொண்டவை. கோவில் கருவறை, அர்த்தமண்டபம், நந்தி மண்டபம் என மூன்று பகுதிகளை கொண்டது. நந்தி மண்டபத்தின் மேற்கூரையில் வேலைப்பாடுள்ள சிற்ப்பங்கள் உள்ளன. இங்கு நந்தி வடபுறம் ஒதுங்கி உள்ளது. கருவறை சிவலிங்கம் ஆவுடையின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவருக்கு வெள்ளி கவசம் உண்டு.

விஷ்ணு கோவில் முன் பகுதியில் செப்பு தகடுகள் வேய்ந்த கொடிமரம் உள்ளது. உச்சியில் கருடன் உருவம் உள்ளது. முகப்பு மண்டபத்தின் மேல் மகா விஷ்ணுவின் உருவமும் இருபுறமும் பூதேவியும் ஸ்ரீதேவியும் உள்ளனர். கோவிலின் எதிரே உள்ள ஓட்டுக்கூரை மண்டபத்தில் கருடன் நின்ற கோலத்தில் உள்ளார்.

விஷ்ணு கோவில் : கருவறை அர்த்தமண்டபம் என இரண்டு பகுதிகள் கொண்டது. மூலவர் விஷ்ணுவின் கல் விக்கிரகம் 75 செ.மீ. உயரமுடையது. நான்கு கைகள் கொண்டது. மேல் கைகளில் சங்கு சக்கரமும் உள்ளன. வலது கீழ் கை அபாய முத்திரையுடனும் இடது கீழ் கை கதையுடனும் உள்ளன.

***********

வரலாறு

கல்வெட்டுகள்

உசாத்துணை