being created

முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

This page is being created by User:Arulj7978

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை என்னும் ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் பெயர் சூலபாணி. ஆலய வளாகத்தில் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு தனி கோவில்கள் உள்ளது. பன்னிரண்டு ஆலயங்களில் முதல் ஆலயம் ஆகும்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள ஊர் முஞ்சிறை. நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய சாலையில் மார்த்தாண்டத்தில் இருந்து பிரிந்து தேங்காய்பட்டணம் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது முஞ்சிறை. முஞ்சிறை மேல்நிலை பள்ளியின் எதிரே உள்ள சாலையில் 40 அடி உயர பாறை மேல் உள்ளது ஆலயம்.

மூலவர்

ஆலயத்தின் மூலவர் பெயர் சூலபாணி. மூலவர் லிங்க வடிவில் உள்ளார். சூலத்தை கையில் ஏந்தியவர் என்ற பொருளில் சூலபாணி என்று அழைக்கப்படுகிறார். கி.பி. 1435 காலத்திய கல்வட்டு மூலவரை மகாதேவர் என்று குறிப்பிடுகிறது. பிற்கால கல்வெட்டுகளிலும் சூலபாணி என்ற பெயர் காணப்படவில்லை.

தொன்மம்

முஞ்சிறை திருமலை ஆலயம் குறித்து இரண்டு தொன்மக்கதைகள் உள்ளன.

ராமாயண கதை : ராவணன் சீதையை கவர்ந்து செல்கையில் விமானம் பழுதடைந்து தரை இறங்கியது. சீதையை இங்கு தான் முதலில் சிறை வைத்தான் ராவணன். விமானம் பழுது நீக்கப்பட்ட பின்பு சீதையை கொண்டு சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான் ராவணன். சீதை முதலில் சிறை வைக்க பட்ட இடம் முஞ்சிறை என்றானது.

முருகன் கதை : பிரணவத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனை முருகன் சிறை பிடித்து வைத்த இடம் முஞ்சிறை என்றானது. அப்போது பிரம்மனின் முன் தோன்றிய வடிவம் தான் சூலப்பாணி ஆனது.

கோயில் அமைப்பு

கோயில் தரைமட்டத்தில் இருந்து 38 படிகளுக்கு மேல் பாறையில் உள்ளது.

கோவிலின் கிழக்கு வாசல் முன் அரங்கில் செம்பு கொடிமரம், பலிபீடம் மற்றும் ஐந்தடுக்கு பித்தளை விளக்கு அகியவை உள்ளது. அரங்கு 5 தூண்கள் கொண்ட ஓட்டு கூரையால் ஆனது.

வடமேற்க்கு வெளிபிராகாரத்தில் பரிவார தெய்வமாக அய்யப்பன் உள்ளார். சிறிய நாகர் சிற்ப்பங்களும் உடன் உள்ளன. தென்மேற்க்கில் நாகர் பரிவார தெய்வமும் உள்ளது. பக்தர்கள் , பூசகர்கள் குளிக்க தனி குளங்கள் உள்ளன.

சுற்றி மதிலால் சூழ்ந்துள்ள ஒரு ஏக்கர் பரப்புள்ள ஆலய வளாகத்தில் சிவன் மற்றும் விஷ்ணு இருவருக்கும் கோவில்கள் உள்ளன.

கல் மண்டபம் : முன் அரங்கு தாண்டி 4 தூண்கள் கொண்ட சிறிய கல் மண்டபம் தாண்டி தெற்க்கு வடக்காக உள்ளது. சிவன் கோவிலுக்கும் விஷ்ணு கோவிலுக்கும் செல்ல இரண்டு பதைகள் உள்ளன. இரண்டு பக்கங்களிலும் 22 தூண்கள் உள்ளன. அர்ஜுனன் தபசு, மேகத்தில் முனிவர், மூக்கில் விரல் வைக்கும் நிர்வாண பெண், மல்லர்கள் சண்டை காட்சி, அகலமாய் கால்களை விரித்து குனிந்த நிலையில் நிற்க்கும் முனிவர், கைகளால் சிவலிங்கத்தை அழுத்தும் மனிதர் என சிற்பங்கள் உள்ளன.

வரலாறு

கல்வெட்டுகள்

உசாத்துணை