மாலதி மைத்திரி

From Tamil Wiki
Revision as of 17:11, 28 August 2022 by Ramya (talk | contribs) (Created page with "மாலதி மைத்திரி (பிறப்பு: 1968) தமிழில் எழுதி வரும் கவிஞர். இதழாசிரியர், பதிப்பாளர். தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். == வாழ்க்கைக் குறிப்பு == மாலதி மைத்திரி புதுச்சேரி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மாலதி மைத்திரி (பிறப்பு: 1968) தமிழில் எழுதி வரும் கவிஞர். இதழாசிரியர், பதிப்பாளர். தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

மாலதி மைத்திரி புதுச்சேரியில் 1968இல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மாலதி மைத்திரியின் முதல் கவிதைத்தொகுப்பு ’சங்கராபரணி’ 2001இல் வெளிவந்தது. 'அணங்கு' எனும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார். பறத்தல் அதன் சுதந்திரம், அணங்கு ஆகிய இரு தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்.

'Wild Girls, Wicked Words' என்ற கவிதைத்தொகுப்பு குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி, மாலதி மைத்ரி ஆகியோர் இரு மொழியில் எழுதி லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் முன்னுரையுடன் வெளிவந்தது.

பதிப்பாளார்

மாலதி மைத்திரி அணங்கு பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். மீனா கந்தசாமி ஆங்கில நாவலை தமிழில் 'குறத்தியம்மன்' என்ற பெயரில் பிரேம் மொழிபெயர்ப்பில் வெளியிட்டார். ப.சிவகாமியின் 'உயிர்', 'இடதுகால் நுழைவு'; ஆனி ஜைதியின் 'குலாப்' ஆகிய நூல்களை வெளியிட்டார். ஆப்பிரிக்க கறுப்பின எழுத்தாளர் சிமாமந்தா எங்கோசி அடிச்சி எழுதிய 'ஊதாநிறச் செம்பருத்தி' நாவலை பிரேம் மொழிபெயர்ப்பில் கொணர்ந்தார். அவுஸ்திரேய ஆதிகுடிகளின் பெண்ணிய கவிதைகள், 'பூலகைக் கற்றலும் கேட்டலும்' என்ற தலைப்பில் ஆழியாள் மொழிபெயர்ப்பில் கொணர்ந்தார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • சங்கராபரணி (2001)
  • நீரின்றி அமையாது உலகு (2003)
  • நீலி (2005)
  • எனது மதுக்குடுவை (2012)
  • முள்கம்பிகளால் கூடு பின்னும் பறவை (2017)
  • கடல் ஒரு நீலச்சொல் (2019)
  • பேய் மொழி (2022)
கட்டுரை
  • விடுதலையை எழுதுதல் (2004)
  • நம் தந்தையரைக் கொல்வதெப்படி (2008)
  • வெட்டவெளி சிறை (2014)
தொகுப்பு நூல்கள்
  • பறத்தல் அதன் சுதந்திரம் (2004)
  • அணங்கு (2005)

இணைப்புகள்

  • மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு: சொல்வனம்