under review

மரபிலக்கிய இதழ்கள்

From Tamil Wiki
Revision as of 17:45, 23 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)

மரபிலக்கிய இதழ்கள்: தமிழ் மரபிலக்கியத்தை பேசும் இதழ்கள். தமிழில் தொன்மையான இலக்கியப் படைப்புகளையும் நெறிநூல்களையும் மீட்டு எடுக்கும் இயக்கம் அச்சுத்தொழில் நுட்பம் உருவானதுமே தோன்றியது. ஏட்டுச்சுவடிகளில் இருந்து இலக்கியங்களும் நெறிநூல்களும் சமயநூல்களும் அச்சுக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை பிழைநோக்குவது, பாடவேறுபாடு பார்ப்பது, பொருள்கொள்வது, உரையெழுதுவது, பொதுவாசகர்களுக்காக விளக்குவது ஆகியவை தொடர்ச்சியாக ஒருநூற்றாண்டுக் காலம் நிகழ்ந்தன. அதன்பொருட்டு ஏராளமான இதழ்கள் தோன்றின. இவை மரபிலக்கிய இதழ்கள் எனப்படுகின்றன. இவ்விதழ்கள் பின்னர் தமிழின் தொன்மை, தனித்தன்மை ஆகியவற்றை முன்வைத்து வாதிடும் தமிழ்த்தேசிய அரசியல் பேசுவனவாகவும் மாறின.

மரபிலக்கிய இதழ்கள் பட்டியல்


✅Finalised Page