second review completed

மய்யம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 17: Line 17:
* [https://www.dinamani.com/latest-news/2011/dec/01/%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-425477.html மையம் இணைய இதழ்: தினமணி]
* [https://www.dinamani.com/latest-news/2011/dec/01/%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-425477.html மையம் இணைய இதழ்: தினமணி]


{{First review completed}}
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:12, 11 January 2024

மய்யம் (இதழ்)

மய்யம் (இதழ்) (ஜூன் 15, 1987- ஆகஸ்ட் 1990) கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்காக ஆரம்பித்த இதழ். இந்த இதழில் சினிமா, இலக்கியம், சமூகம் சார்ந்த படைப்புகள் வெளியாகின. இதன் உள்ளடக்கத்தை தீர்மானிப்பதில் கவிஞர் புவியரசு பங்களிப்பாற்றினார்.

மய்யம் இதழ் வெளியீட்டு விழா

பிரசுரம், வெளியீடு

கமல்ஹாசன் மய்யம் எனும் இதழை ஜூன் 15, 1987-இல் தொடங்கினார். 1987-ல் 12 இதழ்களும், 1989-ல் 9 இதழ்களும் வெளியாகின. கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ஜி. நாகராஜன் இந்த இதழின் பதிப்பாளராக இருந்தார்.ராசி.அழகப்பன், கவிஞர் புவியரசு இதழாசிரியர்கள்.

உள்ளடக்கம்

தலையங்கம், ரசிகனுக்குக் கடிதங்கள், எனக்குப் பிடித்தவை, ரசனைப் பக்கங்கள், எதிர்த்துப் பார்க்கிறேன் பழைய கமலை (தன்வரலாற்றுத் தொடர்), கமல் கேள்வி-பதில், சிறுகதைகள், கவிதைகள், இரங்கல் குறிப்புகள் ஆகியவை இடம்பெற்றன. உலக சினிமா அறிமுகங்கள், சினிமா ரசனை, போன்ற அம்சங்களும், சமூகப் பிரச்னைகளில் கமல்ஹாசனின் கருத்துக்களும் உள்ளடக்கமாக இருந்தன.

பங்களிப்பாளர்கள்

இந்த இதழின் உள்ளடக்கத்தை தீர்மானிப்பதில் கவிஞர் புவியரசு பங்களிப்பாற்றினார். ரசிகர்களுக்கான பத்திரிகை என்றபோதும் அசோகமித்திரன், தி.ஜானகிராமன், ஆதவன், க.நா.சுப்ரமணியம், சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன.

இதழ் நிறுத்தம்

இருபத்தியிரண்டு இதழ்கள் வெளிவந்தபின் ஆகஸ்ட் 1990-இல் மய்யம் இதழ் நின்று போனது.

மதிப்பீடு

கமல்ஹாசன் தன் ரசிகர்களின் ரசனை மேம்பாட்டிற்காக ஏற்படுத்திய ஓர் இடைநிலை இதழ்.

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.