மனோகரா

From Tamil Wiki
Revision as of 07:12, 8 August 2022 by Ramya (talk | contribs) (Created page with "மனோகரா(நாடகம்) பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகம். மனோகரா நாடகம் 70 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக மேடையில் தன் செல்வாக்கினைச் செலுத்தியது == நூல் பற்றி == 1895இல் பம்மல் சம்பந்த ம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மனோகரா(நாடகம்) பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகம். மனோகரா நாடகம் 70 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடக மேடையில் தன் செல்வாக்கினைச் செலுத்தியது

நூல் பற்றி

1895இல் பம்மல் சம்பந்த முதலியார் எழுதி, பதிப்பித்த ஆறாவது நாடகம். 1907இல் முதன்முதலில் அச்சிடப்பட்டது.

நாடகம்

1895 முதல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முறை அனுமதியுடன் மேடையேறிய நாடகம். தொழில் முறை நாடக சபையினர் அனைவரும் இந்த நாடகத்தை அரங்கேற்றினர்.

கதாப்பாத்திரங்கள்
  • புருஷோத்தமன் - சோழநாட்டரசன்
  • மனோஹரன் - புருஷோத்தமன் புதல்வன்
  • சத்தியசீலர் - சோழதேசத்து பிரதான மந்திரி
  • ராஜப்பிரியன் - மனோஹரன் தோழன்
  • பெளத்தாயனன் - ஒரு மந்திரி
  • ரணவீரகேது - சோழசேனாதிபதி
  • விகடன் - அரண்மனை விதூஷகன்
  • அமிர்தகேசரி - ஒரு வைத்தியன்
  • வசந்தன் - கேசவர்மனுக்கும் வசந்தசேனைக்கும் பிறந்தவன்
  • பத்மாவதி - புருஷோத்தமன் பத்னி
  • விஜயா - மனோஹரன் மனைவி
  • வசந்தசேனை - அரண்மனை தாசி
  • நீலவேணி - தாதி

மதிப்பீடு

மனோகரா, இரண்டு நண்பர்கள் ஆகிய இரு நாடகங்களும் உலகத் தரம் வாய்ந்த நாடகங்கள் என்று அவ்வை தி.க. சண்முகம் மதிப்பிடுகிறார்.

மனோகரா (திரைப்படம்)

மனோகரா நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு 1954இல் திரைப்படம் எடுக்கப்பட்டது. எல். வி. பிரசாத் இயக்கத்தில், மு. கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதினார். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், டி. ஆர். ராஜகுமாரி, கிரிஜா, காகா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர்.

இணைப்புகள்