standardised

மணி எம்.கே.மணி

From Tamil Wiki
Revision as of 03:46, 7 September 2022 by Tamizhkalai (talk | contribs)
மணி எம்.கே.மணி

மணி எம்.கே.மணி (பிறப்பு: நவம்பர் 4, 1962) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், துறைசார் கட்டுரையாளர், திரைக்கதை ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

மணி எம்.கே.மணி குஞ்சன், யசோதா இணையருக்கு நவம்பர் 4, 1962-ல் சென்னையில் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி பயின்றார். மனைவி மனோன்மணி. மகன் கண்மணி யாழன். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

மணி எம்.கே.மணி

இலக்கிய வாழ்க்கை

மணி எம்.கே.மணியின் முதல் சிறுகதை தொகுப்பு 2017-ல் வெளியானது. சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். துறைசார் கட்டுரையாளர். தமிழ், மலையாள திரைக்கதை ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், திரை விமர்சன உரையாடல்கள் என துறைசார் எழுத்துக்களை எழுதியுள்ளார்.

நூல்கள்

சிறுகதை
மதுர விசாரம்?
  • மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் (பாதரசம் வெளியீடு)
  • டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல் (யாவரும் பதிப்பகம்)
  • ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் (யாவரும் பதிப்பகம்)
நாவல்
  • மதுர விசாரம்? (யாவரும் பதிப்பகம்)
  • புயா மின்னா இதி (குறுநாவல், யாவரும் பதிப்பகம்)
திரைக்கதைகள்
  • கடவுளே என்கிறான் கடவுள் - குறும்படங்களின் திரைக்கதைகள் (வாசகசாலை பதிப்பகம்)
கட்டுரை
  • மேலும் சில ஆட்கள் (சினிமா, பாதரசம் வெளியீடு)
  • எழும் சிறு பொறி பெருந் தீயாய் (சினிமா, பாதரசம் வெளியீடு)
  • பத்மராஜன் திரைக்கதைகள் (சினிமா, பாரதி புத்தகாலயம்)
  • உள்கடல் (சினிமா, வாசகசாலை பதிப்பகம்)
  • மேலும் நூறு படங்கள் (சினிமா அறிமுகங்கள், பாரதி புத்தகாலயம்)

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.