மக்கள் சக்தி இயக்கம்

From Tamil Wiki
Revision as of 23:25, 4 September 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மக்கள் சக்தி இயக்கம் - சின்னம்

மக்கள் சக்தி இயக்கம் சுய வளர்ச்சி, சுயப் பொருளாதார மேம்பாடு, சமுதாய ஈடுபாடு ஆகியவற்றை முன்னோடிக் கொள்கையாகக் கொண்டு, எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களால், 1988-ல் தொடங்கப்பட்டது. நதி நீர் இணைப்பு , கிராம சுயாட்சி, கல்வித்தர மேம்பாடு, சுயப் பொருளாதார மேம்பாடு, சிறுதொழில் வளர்ச்சி, பெண்களின் நலவாழ்வு, தொழில் முன்னேற்றம், சமுதாய விழிப்புணர்வு, இளைஞர் முன்னேற்றம் போன்றவற்றை லட்சியமாகக் கொண்டு மக்கள் சக்தி இயக்கம் செயல்பட்டது.