under review

பொன்னியின் செல்வன் (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:
[[File:Ponni1.jpg|thumb|நந்தினி ஓவியர் மணியம்]]
[[File:Ponni1.jpg|thumb|நந்தினி ஓவியர் மணியம்]]
[[File:Ponni5.jpg|thumb|பொன்னியின் செல்வன் தொடர்கதைச் சித்தரிப்பு]]
[[File:Ponni5.jpg|thumb|பொன்னியின் செல்வன் தொடர்கதைச் சித்தரிப்பு]]
பொன்னியின் செல்வன் (1951 1954) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருண்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . ‘பொன்னியின் செல்வன்’ என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர்காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் ராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்ற நாவலாக இந்நூல் உள்ளது.தமிழ்ப் பதிப்புலகத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல் வகையில் பொன்னியின் செல்வன் நாவல்தான் முதலிடத்தில் உள்ளது.  
பொன்னியின் செல்வன் (1950 1955) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருண்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . ‘பொன்னியின் செல்வன்’ என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் ராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்ற நாவலாக இந்நூல் உள்ளது. தமிழ்ப் பதிப்புலகத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல் வகையில் பொன்னியின் செல்வன் நாவல்தான் முதலிடத்தில் உள்ளது.  
== பதிப்பு ==
== பதிப்பு ==
[[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 1950 ஆண்டு முதல் 1955 ஆண்டு வரை [[கல்கி (வார இதழ்)|கல்கி வார இதழில்]] தொடர்கதையாக வெளியிடப்பட்டது. பின்னர் நான்குமுறை மீண்டும் தொடராக வெளிவந்தது. வானதி பதிப்பகம் இதை நூலாக வெளியிட்டது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின் ஏராளமான பதிப்பகங்கள் வெளியுட்டுள்ளன
[[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 1950 ஆண்டு முதல் 1955 ஆண்டு வரை [[கல்கி (வார இதழ்)|கல்கி வார இதழில்]] தொடர்கதையாக வெளியிடப்பட்டது. பின்னர் நான்குமுறை மீண்டும் தொடராக வெளிவந்தது. வானதி பதிப்பகம் இதை நூலாக வெளியிட்டது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின் ஏராளமான பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

பொன்னியின் செல்வன் ஐந்து பகுதிகளை உடையது. 1. புதுவெள்ளம், 2. சுழற்காற்று, 3. கொலைவாள், 4. மணிமகுடம், 5. தியாக சிகரம்.  
பொன்னியின் செல்வன் ஐந்து பகுதிகளை உடையது. 1. புதுவெள்ளம், 2. சுழற்காற்று, 3. கொலைவாள், 4. மணிமகுடம், 5. தியாக சிகரம்.  
== வரலாற்றுப் பின்னணி ==
== வரலாற்றுப் பின்னணி ==
[[File:பொன்னியின் செல்வன்.jpg|thumb|பொன்னியின் செல்வன்]]
[[File:பொன்னியின் செல்வன்.jpg|thumb|பொன்னியின் செல்வன்]]
எழுத்தாளர் கல்கி K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும் T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை எழுதினார். இந்நாவல் நிகழும் காலம் பொ.யு. 957 முதல் 973 வரை ஆட்சி செய்த சுந்தரசோழரின் இறுதி ஆண்டுகள். இவர் அரிஞ்சய சோழருக்கும் அன்பில் பட்டயங்களில் பெயர் குறிப்பிடப்படும் அரசியான வைதும்பை நாட்டு கல்யாணிக்கும் பிறந்தவர். இவர் இரண்டாம் பராந்தக சோழர் என அழைக்கப்பட்டார். இவருடைய மகன் ஆதித்த கரிகாலன் தலைமையில் சோழர்கள் சேவூர் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் வீரபாண்டியனை தோற்கடித்து கொன்றார்கள் என லெய்டன் பட்டயங்கள், கரந்தை பட்டயங்கள், திருவாலங்காடு பட்டயங்களில் குறிப்பு உள்ளது. ஆதித்த கரிகாலன் ‘வீரபாண்டியன் தலைகொண்ட’ என்னும் பெயர் பெற்றார். இப்போரில் பாண்டியர்களுக்கு ஈழ மன்னர் நான்காம் மகிந்தர் உதவிசெய்தார் என இலங்கை வரலாற்று நூல் மகாவம்சம் குறிப்பிடுகிறது.
எழுத்தாளர் கல்கி, K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும் T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை எழுதினார். இந்நாவல் நிகழும் காலம் பொ.யு. 957 முதல் 973 வரை ஆட்சி செய்த சுந்தரசோழரின் இறுதி ஆண்டுகள். இவர் அரிஞ்சய சோழருக்கும் அன்பில் பட்டயங்களில் பெயர் குறிப்பிடப்படும் அரசியான வைதும்பை நாட்டு கல்யாணிக்கும் பிறந்தவர். இவர் இரண்டாம் பராந்தக சோழர் என அழைக்கப்பட்டார். இவருடைய மகன் ஆதித்த கரிகாலன் தலைமையில் சோழர்கள் சேவூர் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் வீரபாண்டியனை தோற்கடித்து கொன்றார்கள் என லெய்டன் பட்டயங்கள், கரந்தை பட்டயங்கள், திருவாலங்காடு பட்டயங்களில் குறிப்பு உள்ளது. ஆதித்த கரிகாலன் ‘வீரபாண்டியன் தலைகொண்ட’ என்னும் பெயர் பெற்றார். இப்போரில் பாண்டியர்களுக்கு ஈழ மன்னர் நான்காம் மகிந்தர் உதவி செய்தார் என இலங்கை வரலாற்று நூல் மகாவம்சம் குறிப்பிடுகிறது.

ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட செய்தியை உடையார்குடி கல்வெட்டு கூறுகிறது. ஆதித்தகரிகாலனை கொன்ற குற்றத்திற்காக அரசன் ஆணைப்படி வேதியர் சிலருக்கு திருவீரநாராயண சதுர்வேதிமங்கலச் சபை தண்டனை அளித்ததை ராஜராஜ சோழன் பதவி ஏற்ற இரண்டாம் ஆண்டு வெளியிடப்பட்ட இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுந்தர சோழருக்கு பிறகு பதவியேற்ற மதுரந்தகன் உத்தமசோழன் என்னும் பெயருடன் பதினாறாண்டுகள் ஆட்சி செய்தான். அந்தப்பதினாறு ஆண்டுகளிலும் கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதில் இருந்து உத்தமசோழனே கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கருதுகிறார். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் அருண்மொழி தேவர் என்னும் ராஜராஜசோழன் தன் சிறியதந்தை உத்தமசோழர் எனும் மதுராந்தகருக்கு அரசுப்பதவியை மனமுவந்து அளித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. இச்செய்திகளின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் புனையப்பட்டுள்ளது.
ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட செய்தியை உடையார்குடி கல்வெட்டு கூறுகிறது. ஆதித்த கரிகாலனை கொன்ற குற்றத்திற்காக அரசன் ஆணைப்படி வேதியர் சிலருக்கு திருவீரநாராயண சதுர்வேதிமங்கலச் சபை தண்டனை அளித்ததை ராஜராஜ சோழன் பதவி ஏற்ற இரண்டாம் ஆண்டு வெளியிடப்பட்ட இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுந்தர சோழருக்கு பிறகு பதவியேற்ற மதுரந்தகன் உத்தமசோழன் என்னும் பெயருடன் பதினாறாண்டுகள் ஆட்சி செய்தான். அந்தப்பதினாறு ஆண்டுகளிலும் கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதில் இருந்து உத்தமசோழனே கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கருதுகிறார். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் அருண்மொழி தேவர் என்னும் ராஜராஜசோழன் தன் சிறியதந்தை உத்தமசோழர் எனும் மதுராந்தகருக்கு அரசுப்பதவியை மனமுவந்து அளித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. இச்செய்திகளின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் புனையப்பட்டுள்ளது.
== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
வாணர் குல வீரரான 'வல்லவரையன் வந்தியதேவன்' சோழச்சக்ரவர்த்தி சுந்தரசோழனின் மூத்த மகனான காஞ்சியிலிருக்கும் இளவரசன் ஆதித்த கரிகால சோழனிடமிருந்து தஞ்சையில் இருக்கும் 'சுந்தர சோழ' சக்கரவர்த்திக்கும், அவரின் மகளான பழையாறையில் இருக்கும் இளவரசி 'குந்தவை' பிராட்டியாருக்கும் ஓர் ஓலையை கொண்டுசெல்கிறான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் இளவரசராக பட்டம்கட்டப்பட்ட ஆதித்த கரிகாலனை விடுத்து, சுந்தர சோழனின் பெரியப்பா கண்டராதித்தரின் மகனான மதுராந்தகச் சோழரைச் சோழ பேரரசுக்குச் சக்ரவர்த்தியாக்க சதி நடபதைக் காண்கிறான். சுந்தர சோழ சக்ரவர்த்தியின் நண்பரும் சோழர்களுக்கு பல நூற்றாண்டுகளாகப் போர்த்தளபதியாக இருந்து வந்தவருமான பழுவூர் சிற்றரசர் பெரிய பழுவேட்டரையர் இந்தச் சதியைச் செயல்படுத்துகின்றனர். அதில் பல சிற்றரசர்களும் தளபதிகளும் பங்குகொள்கின்றனர்.  
வாணர் குல வீரனான 'வல்லவரையன் வந்தியதேவன்' சோழச்சக்கரவர்த்தி சுந்தரசோழனின் மூத்த மகனான காஞ்சியிலிருக்கும் இளவரசன் ஆதித்த கரிகால சோழனிடமிருந்து தஞ்சையில் இருக்கும் 'சுந்தர சோழ' சக்கரவர்த்திக்கும், அவரின் மகளான பழையாறையில் இருக்கும் இளவரசி 'குந்தவை' பிராட்டியாருக்கும் ஓர் ஓலையை கொண்டு செல்கிறான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் இளவரசராக பட்டம் கட்டப்பட்ட ஆதித்த கரிகாலனை விடுத்து, சுந்தர சோழனின் பெரியப்பா கண்டராதித்தரின் மகனான மதுராந்தகச் சோழரைச் சோழ பேரரசுக்குச் சக்கரவர்த்தியாக்க சதி நடப்பதைக் காண்கிறான். சுந்தர சோழ சக்கரவர்த்தியின் நண்பரும் சோழர்களுக்கு பல நூற்றாண்டுகளாகப் போர்த்தளபதிகளாக இருந்து வந்த பழுவூர் சிற்றரசர் வம்சத்தை சேர்ந்தவருமான பெரிய பழுவேட்டரையர் இந்தச் சதியைச் செயல்படுத்துகிறார். அதில் பல சிற்றரசர்களும் தளபதிகளும் பங்குகொள்கின்றனர்.  

சுந்தர சோழரின் தந்தையான அரிஞ்சய சோழ தேவரின் இரண்டாவது மூத்த சகோதரரான கண்டராதித்தர் சிவபக்தியில் மூழ்கி வாழ்ந்தவர். கண்டராதித்தரின் மூத்த சகோதரனான இராஜாதித்தர் போரில் உயிர் துறக்கவே அடுத்த அரியணைக்கு உரியவராகக் கண்டராதித்தர் ஆனார். ஆனால், அரியணையில் அமர விருப்பம் இல்லாததாலும் போரினால் ஏற்பட்ட விளைவுகளை அவர் வெறுப்பதாலும், போரில் அனுபவ சாலியான தனது இளைய சகோதரரான அரிஞ்சய சோழ தேவரைச் சக்ரவர்த்தியாக்குகினார். அரிஞ்சய சோழரும் அடுத்த சில ஆண்டுகளில் போரில் உயிர் துறந்தவுடன் அவர் மகன் சுந்தரசோழர் அரசரானார். முறைப்படி கண்டராதித்தரின் மகனான மதுராந்தகர் ஏற வேண்டிய அரியணை அது. மதுராந்தகர் வயதில் சிறியவராக இருந்ததுடன், கண்டராதித்தரும் அவரது மனைவியுமான செம்பியன் மாதேவியும் தனது மகன் அரசனாகவேண்டாமென்றும் சிவபக்தன் ஆனால் போதும் என்றும் முடிவெடுத்திருந்ததும் அதற்குக் காரணம்  
சுந்தர சோழரின் தந்தையான அரிஞ்சய சோழ தேவரின் இரண்டாவது மூத்த சகோதரரான கண்டராதித்தர் சிவபக்தியில் மூழ்கி வாழ்ந்தவர். கண்டராதித்தரின் மூத்த சகோதரனான இராஜாதித்தர் போரில் உயிர் துறக்கவே அடுத்த அரியணைக்கு உரியவராகக் கண்டராதித்தர் ஆனார். ஆனால், அரியணையில் அமர விருப்பம் இல்லாததாலும், போரினால் ஏற்பட்ட விளைவுகளை அவர் வெறுப்பதாலும், போரில் அனுபவசாலியான தனது இளைய சகோதரரான அரிஞ்சய சோழ தேவரைச் சக்கரவர்த்தியாக்குகிறார். அரிஞ்சய சோழரும் அடுத்த சில ஆண்டுகளில் போரில் உயிர் துறந்தவுடன் அவர் மகன் சுந்தர சோழர் அரசரானார். முறைப்படி கண்டராதித்தரின் மகனான மதுராந்தகர் ஏற வேண்டிய அரியணை அது. மதுராந்தகர் வயதில் சிறியவராக இருந்ததுடன், கண்டராதித்தரும் அவரது மனைவியுமான செம்பியன் மாதேவியும் தனது மகன் அரசனாக வேண்டாமென்றும் சிவபக்தன் ஆனால் போதும் என்றும் முடிவெடுத்திருந்ததும் அதற்குக் காரணம்.
[[File:Ponni2.jpg|thumb|வந்தியத்தேவனும் குந்தவையும் (மணியம்)]]
[[File:Ponni2.jpg|thumb|வந்தியத்தேவனும் குந்தவையும் (மணியம்)]]
[[File:Ponni3.jpg|thumb|பொன்னியின்செல்வன் கல்கி விளம்பரம்]]
[[File:Ponni3.jpg|thumb|பொன்னியின்செல்வன் கல்கி விளம்பரம்]]
மதுராந்தகர் பெரியவரானதும், தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அரியணைக்கு ஆசை கொண்டபோது அதுவே முறை என எண்ணிய பெரிய பழுவேட்டரையர் அவரை ஆதரிக்கிறார். மதுராந்தகரின் மனத்திலும் அரியணை ஆசையைத் தூண்டியதும், அதற்கான சதிக்கு பின்னிருந்து இயக்கியதும் பழுவூர் இளையராணியாக அழைக்கப்படும் நந்தினி. முதியவரான பழுவேட்டரையரை மணந்து அவளை ஆட்டிப்படைக்கும் நந்தினி பாண்டியர்களால் அரசி என நினைக்கப்படுபவள், அவளுக்கு பின்னாலிருந்து பாண்டியர்களின் ஆபத்துதவிப்படையும் அதன் தலைவனான ரவிதாசனும் இயக்குகிறார்கள். பாண்டியர்களை போரில் தோற்கடித்து பாண்டிய அரசனை ஆதித்த கரிகாலன் கொன்றதனால் அதற்குப் பழிவாங்க எண்ணுகிறார்கள்.  
மதுராந்தகர் பெரியவரானதும், தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அரியணைக்கு ஆசை கொண்டபோது அதுவே முறை என எண்ணிய பெரிய பழுவேட்டரையர் அவரை ஆதரிக்கிறார். மதுராந்தகரின் மனத்திலும் அரியணை ஆசையைத் தூண்டியதும், அதற்கான சதிக்கு பின்னிருந்து இயக்கியதும் பழுவூர் இளைய ராணியாக அழைக்கப்படும் நந்தினி. முதியவரான பழுவேட்டரையரை மணந்து அவரை ஆட்டிப் படைக்கும் நந்தினி பாண்டியர்களால் அரசி என நினைக்கப்படுபவள். அவளுக்கு பின்னாலிருந்து பாண்டியர்களின் ஆபத்துதவிப்படையும் அதன் தலைவனான ரவிதாசனும் இயக்குகிறார்கள். பாண்டியர்களை போரில் தோற்கடித்து பாண்டிய அரசனை ஆதித்த கரிகாலன் கொன்றதனால் அதற்குப் பழிவாங்க எண்ணுகிறார்கள்.  

வந்தியதேவன் குந்தவையைச் சந்தித்து அவள் காதலுக்குரியவன் ஆகிறான். ஈழநாடு சென்று ஆதித்த கரிகாலனின் தம்பி அருண்மொழி வர்மனைச் சந்தித்து சதியைப் பற்றிச் சொல்கிறான். நாடு திரும்பும் அருண்மொழிவர்மன் கப்பல் தகர்க்கப்பட்டு கடலில் மூழ்கி உயிர்தப்பி நாகை சூடாமணி விகாரத்தில் படுத்திருக்கையில் தஞ்சைக்கு திரும்பும் ஆதித்த கரிகாலன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் மர்மமாக கொல்லப்படுகிறான். அவனை கொன்றது எவர் என்னும் வினாவுடன் நீளும் நாவல் நந்தினிக்கும் ஆதித்தகரிகாலனுக்கும் இருந்த பழையகாதல், திடீரென்று காணமாலான நந்தினியை பாண்டியன் ஒளிந்திருக்கும் குகையில் அவன் மனைவியாக கண்ட ஆதித்த கரிகாலன் அவள் கண்ணெதிரே பாண்டியனை கொன்றது ஆகிய செய்திகளைச் சொல்கிறது.  
வந்தியதேவன் குந்தவையைச் சந்தித்து அவள் காதலுக்குரியவன் ஆகிறான். ஈழநாடு சென்று ஆதித்த கரிகாலனின் தம்பி அருண்மொழி வர்மனைச் சந்தித்து சதியைப் பற்றிச் சொல்கிறான். நாடு திரும்பும் அருண்மொழிவர்மன் கப்பல் தகர்க்கப்பட்டு கடலில் மூழ்கி உயிர்தப்பி நாகை சூடாமணி விகாரத்தில் படுத்திருக்கையில் தஞ்சைக்கு திரும்பும் ஆதித்த கரிகாலன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் மர்மமாக கொல்லப்படுகிறான். அவனை கொன்றது எவர் என்னும் வினாவுடன் நீளும் நாவல் நந்தினிக்கும் ஆதித்தகரிகாலனுக்கும் இருந்த பழையகாதல், திடீரென்று காணாமலான நந்தினியை பாண்டியன் ஒளிந்திருக்கும் குகையில் அவன் மனைவியாக கண்ட ஆதித்த கரிகாலன் அவள் கண்ணெதிரே பாண்டியனை கொன்றது ஆகிய செய்திகளைச் சொல்கிறது.  
[[File:Ponniyin Selvan Vandhiyathevan.jpg|thumb|வந்தியத்தேவன், (மணியம்)]]
[[File:Ponniyin Selvan Vandhiyathevan.jpg|thumb|வந்தியத்தேவன், (மணியம்)]]
நந்தினியின் பின்னணியும் அவளுக்கும் சுந்தரசோழருக்குமான உறவும் நாவலில் விரிகிறது. சேந்தன் அமுதன் என்னும் பூகட்டும் இளைஞனுக்கும் பூங்குழலி என்னும் படகோட்டிக்கும் இடையேயான உறவு விவரிக்கப்படுகிறது. நாவல் பல முடிச்சுகளை அவிழ்த்துச் சென்று மதுராந்தகன் உண்மையில் கண்டராதித்தரின் மகன் அல்ல, சேந்தன் அமுதனே அந்த மகன் என காட்டுகிறது. எதிரிகளை வென்று சதிகளை அவித்து நாட்டை உரிமைகொள்ளும் அருண்மொழி தேவனே முடிசூட்டவேண்டுமென அனைவரும் எண்ணும்போது அருண்மொழி தேவன் குலமுறைப்படி மதுராந்தகனாகிய சேந்தன் அமுதனே அரசன் ஆகவேண்டும் என்று சொல்லி மணிமுடியை தியாகம் செய்கிறார். வந்தியதேவன் குந்தவையை மணக்கிறான். அருண்மொழி தேவன் வானதியை மணக்கிறார். பின்னாளில் அருண்மொழி தேவன் ராஜராஜ சோழன் என்ற பெயருடன் சோழ மன்னராக முடிசூட்டிக்கொண்டார் என நாவல் கூறிமுடிகிறது.  
நந்தினியின் பின்னணியும் அவளுக்கும் சுந்தர சோழருக்குமான உறவும் நாவலில் விரிகிறது. சேந்தன் அமுதன் என்னும் பூ கட்டும் இளைஞனுக்கும் பூங்குழலி என்னும் படகோட்டிக்கும் இடையேயான உறவு விவரிக்கப்படுகிறது. நாவல் பல முடிச்சுகளை அவிழ்த்துச் சென்று மதுராந்தகன் உண்மையில் கண்டராதித்தரின் மகன் அல்ல, சேந்தன் அமுதனே அந்த மகன் எனக் காட்டுகிறது. எதிரிகளை வென்று சதிகளை அவிழ்த்து நாட்டை உரிமை கொள்ளும் அருண்மொழி தேவனே முடிசூட வேண்டுமென அனைவரும் எண்ணும்போது அருண்மொழி தேவன் குலமுறைப்படி மதுராந்தகனாகிய சேந்தன் அமுதனே அரசன் ஆகவேண்டும் என்று சொல்லி மணிமுடியை தியாகம் செய்கிறார். வந்தியதேவன் குந்தவையை மணக்கிறான். அருண்மொழி தேவன் வானதியை மணக்கிறார். பின்னாளில் அருண்மொழி தேவன் ராஜராஜ சோழன் என்ற பெயருடன் சோழ மன்னராக முடிசூட்டிக் கொண்டார் என நாவல் கூறிமுடிகிறது.  
== கதைமாந்தர்கள் ==
== கதைமாந்தர்கள் ==
* அருள்மொழிவர்மன் - இராஜராஜ சோழன்
* அருண்மொழிவர்மன் - இராஜராஜ சோழன்
* வல்லவரையன் வந்தியதேவன்-இராஜராஜ சோழனின் நண்பன்
* வல்லவரையன் வந்தியதேவன் - இராஜராஜ சோழனின் நண்பன்
* குந்தவை -அருள்மொழிவர்மனின் தமக்கை
* குந்தவை - அருண்மொழிவர்மனின் தமக்கை
* நந்தினி - பழுவூர் இளையராணி
* நந்தினி - பழுவூர் இளைய ராணி
* ஆதித்த கரிகாலன் (இராஜராஜ சோழன் சகோதரன்)
* ஆதித்த கரிகாலன் - இராஜராஜ சோழனின் சகோதரன்
* வானதி (கொடும்பாளூர் இளவரசி) (இராஜராஜ சோழனின் முதல் மனைவி)
* வானதி - கொடும்பாளூர் இளவரசி. இராஜராஜ சோழனின் முதல் மனைவி
* ஆழ்வார்க்கடியான் (உளவு பார்ப்பவர்)
* ஆழ்வார்க்கடியான் - உளவு பார்ப்பவர்
* மந்தாகினி (வாய்பேச இயலாதராணி என்றழைக்கப்படுபவர்) (இராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனின் காதலி)
* மந்தாகினி - வாய்பேச இயலாத ராணி என்றழைக்கப்படுபவர். இராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனின் காதலி
* பெரிய பழுவேட்டரையர் (தஞ்சை கோட்டைத்தலைவன்) அரசனுக்கு அடுத்த ஸ்தானத்தில் வலிமையான அதிகாரித்தில் இருப்பவர்
* பெரிய பழுவேட்டரையர் - தஞ்சை கோட்டைத்தலைவன். அரசனுக்கு அடுத்த ஸ்தானத்தில் வலிமையான அதிகாரத்தில் இருப்பவர்
* செம்பியன் மாதேவி (கண்டராதித்த சோழனின் மனைவி) (உத்தம மதுராந்தக சோழ தேவரின் அன்னை)
* செம்பியன் மாதேவி - கண்டராதித்த சோழனின் மனைவி. உத்தம மதுராந்தக சோழ தேவரின் அன்னை
* சின்ன பழுவேட்டரையர் (பெரிய பழுவேட்டரையர் சகோதரன்)
* சின்ன பழுவேட்டரையர் - பெரிய பழுவேட்டரையரின் சகோதரன்
* அநிருத்த பிரமராயர் (முதன் மந்திரி)
* அநிருத்த பிரம்மராயர் - முதன் மந்திரி
* பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரி (சேனாதிபதி) கொடும்பாளூர் அரசன்
* பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரி - சேனாதிபதி. கொடும்பாளூர் அரசன்
* பூங்குழலி (ஓடக்கார பெண்) (உத்தம மதுராந்தக சோழரின் மனைவி)
* பூங்குழலி - ஓடக்காரப் பெண். உத்தம மதுராந்தக சோழரின் மனைவி
* சேந்தன் அமுதன் (உத்தம மதுராந்தக சோழ தேவர்)
* சேந்தன் அமுதன் - உத்தம மதுராந்தக சோழ தேவர்
* போலி மதுராந்தகர் (பாண்டிய நாட்டு இளவல்- அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்)
* போலி மதுராந்தகர் - பாண்டிய நாட்டு இளவல். அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்
* ரவிதாசன் (பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் - அதாவது தளபதி)
* ரவிதாசன் - பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுள் ஒருவர் (தளபதி)
* மணிமேகலை (சம்புவரையர் இளவரசி, வந்தியதேவனை விரும்பியவள்)
* மணிமேகலை - சம்புவரையர் இளவரசி. வந்தியதேவனை விரும்பியவள்
* கந்தமாறன் (சம்புவரையர் இளவரசன்)
* கந்தமாறன் - சம்புவரையர் இளவரசன்
* பார்த்திபேந்திர (பல்லவன் குளம், ஆதித்த கரிகாலனின் நண்பன்)
* பார்த்திபேந்திரன் - பல்லவ குலத்தவன். ஆதித்த கரிகாலனின் நண்பன்
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
பொன்னியின்செல்வன் அலெக்ஸாண்டர் டூமாவின் [[wikipedia:Milady_de_Winter|The Three Musketeers]] நாவலின் வலுவான செல்வாக்கு கொண்ட படைப்பு. வந்தியத் தேவனில் [[wikipedia:Charles_de_Batz_de_Castelmore_d'Artagnan#Portrayals_in_fiction|D'Artagnan]] நந்தினியில் [[wikipedia:Milady_de_Winter|Milady de Winter]] ஆகியோரின் சாயல் அழுத்தமாக உண்டு. ஆனால் நேரடித்தழுவலோ இலக்கியத் திருட்டோ அல்ல. சோழர்களின் வரலாற்றுப் பின்னணியிலும், அக்கால பண்பாட்டுப்பின்னணியிலும் நாவலை தெளிவாக கட்டமைக்க ஆசிரியரால் இயன்றுள்ளது. மிக இளமையிலேயே வாசிக்கத்தக்க எளிமையான மொழி கொண்ட நாவல். எதிர்மறைப் பண்புகள், காமம் போன்றவை அற்றது. எனவே இறுதிவரை இனிய வாசிப்புக்குரியது. கதாபாத்திரங்கள் சாகச நாவல்களுக்குரிய மிகை இல்லாமல் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வீரதீரச்செயல்கள், போர்கள் ஆகியவை மிகையாக காட்டப்படவில்லை. பெரும்பாலும் தனிமனித உணர்வுகள் மற்றும் அரண்மனைச்சதிகள் வழியாகவே செல்கிறது. தமிழகத்தின் பொற்காலம் எனப்படும் காலகட்டத்தையும், அதன் தலைமை ஆளுமை எனப்படும் ராஜராஜ சோழனின் இளமையையும் காட்டுவதனால் முக்கியமான படைப்பாக ஆகிறது. இலக்கியவகைமையில் வரலாற்றுக் கற்பனாவாதக் கதை என வரையறுக்கப்படுகிறது.
பொன்னியின்செல்வன் அலெக்ஸாண்டர் டூமாவின் [[wikipedia:Milady_de_Winter|The Three Musketeers]] நாவலின் வலுவான செல்வாக்கு கொண்ட படைப்பு. வந்தியத் தேவனில் [[wikipedia:Charles_de_Batz_de_Castelmore_d'Artagnan#Portrayals_in_fiction|D'Artagnan]] நந்தினியில் [[wikipedia:Milady_de_Winter|Milady de Winter]] ஆகியோரின் சாயல் அழுத்தமாக உண்டு. ஆனால் நேரடித் தழுவலோ, இலக்கியத் திருட்டோ அல்ல. சோழர்களின் வரலாற்றுப் பின்னணியிலும், அக்கால பண்பாட்டுப் பின்னணியிலும் நாவலை தெளிவாக கட்டமைக்க ஆசிரியரால் இயன்றுள்ளது. மிக இளமையிலேயே வாசிக்கத்தக்க எளிமையான மொழி கொண்ட நாவல். எதிர்மறைப் பண்புகள், காமம் போன்றவை அற்றது. எனவே இறுதிவரை இனிய வாசிப்புக்குரியது. கதாபாத்திரங்கள் சாகச நாவல்களுக்குரிய மிகை இல்லாமல் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வீரதீரச்செயல்கள், போர்கள் ஆகியவை மிகையாக காட்டப்படவில்லை. பெரும்பாலும் தனிமனித உணர்வுகள் மற்றும் அரண்மனைச் சதிகள் வழியாகவே செல்கிறது. தமிழகத்தின் பொற்காலம் எனப்படும் காலகட்டத்தையும், அதன் தலைமை ஆளுமை எனப்படும் ராஜராஜ சோழனின் இளமையையும் காட்டுவதனால் முக்கியமான படைப்பாக ஆகிறது. இலக்கிய வகைமையில் வரலாற்றுக் கற்பனாவாதக் கதை என வரையறுக்கப்படுகிறது.
== தொடர்ச்சிகள் ==
== தொடர்ச்சிகள் ==
பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக ராஜராஜ சோழனை முன்வைத்து பல படைப்புகள் எழுதப்பட்டுள்ளன.  
பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக ராஜராஜ சோழனை முன்வைத்து பல படைப்புகள் எழுதப்பட்டுள்ளன.  
* [[விக்ரமன்]] பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக [[நந்திபுரத்து நாயகி]] என்னும் நாவலை எழுதினார்
* [[விக்ரமன்]] பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக [[நந்திபுரத்து நாயகி]] என்னும் நாவலை எழுதினார்.
* [[அரு.ராமநாதன்]] [[ராஜராஜ சோழன்]] என்னும் நாடகத்தை எழுதினார்
* [[அரு.ராமநாதன்]] [[ராஜராஜ சோழன்]]என்னும் நாடகத்தை எழுதினார்.
* [[பாலகுமாரன்]] [[உடையார்]] என்னும் பெருநாவலை எழுதினார்
* [[பாலகுமாரன்]] [[உடையார்]]என்னும் பெருநாவலை எழுதினார்.
*[[சாண்டில்யன்]] எழுதிய [[மன்னன் மகள்]] ராஜேந்திர சோழனின் காலகட்டத்தைச் சித்தரிக்கிறது. அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரமாக வருகிறார்.   
*[[சாண்டில்யன்]] எழுதிய [[மன்னன் மகள்]] ராஜேந்திர சோழனின் காலகட்டத்தைச் சித்தரிக்கிறது. அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரமாக வருகிறார்.   
== மொழிபெயர்ப்பு ==
== மொழிபெயர்ப்பு ==
Line 56: Line 56:
பொன்னியின் செல்வன் இதுவரை நான்கு முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  
பொன்னியின் செல்வன் இதுவரை நான்கு முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  
== பிற வடிவங்கள் ==
== பிற வடிவங்கள் ==
* பொன்னியின் செல்வன் நாவலை முழுக்க முழுக்க 1,200 வண்ணப்படங்களுடன் 2017இல் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
* பொன்னியின் செல்வன் நாவலை முழுக்க முழுக்க 1,200 வண்ணப்படங்களுடன் 2017-ல் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
* ஓவியர் தங்கம் பொன்னியின் செல்வன் நாவலை 1,050 சித்திரங்களாக வரைந்து 10 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.   
* ஓவியர் தங்கம் பொன்னியின் செல்வன் நாவலை 1,050 சித்திரங்களாக வரைந்து 10 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.   
* சவுந்தர்யா ரஜினிகாந்த், ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரிஸாகத் தயாரிக்கிறார்.   
* சவுந்தர்யா ரஜினிகாந்த், ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரிஸாகத் தயாரிக்கிறார்.   
Line 67: Line 67:

* [https://www.youtube.com/watch?v=EJin2LeKmk4 பொன்னியின் செல்வன் நாடக வடிவம்] -  
* [https://www.youtube.com/watch?v=EJin2LeKmk4 பொன்னியின் செல்வன் நாடக வடிவம்] -  
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.youtube.com/watch?v=anrnXk6MHfA எழுத்தாளர் கல்கியின் வாழ்க்கை வரலாறு]
* [https://www.youtube.com/watch?v=anrnXk6MHfA எழுத்தாளர் கல்கியின் வாழ்க்கை வரலாறு]
* சோழர்கள், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி  
* சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://www.giriblog.com/ponniyin-selvan-book-review/ பொன்னியின் செல்வன்- அறிமுகம், கிரிபிளாக்.காம்]
* [https://www.giriblog.com/ponniyin-selvan-book-review/ பொன்னியின் செல்வன்- அறிமுகம், கிரிபிளாக்.காம்]

Revision as of 18:13, 27 May 2022

பொன்னியின் செல்வன் (நாவல்)
நந்தினி ஓவியர் மணியம்
பொன்னியின் செல்வன் தொடர்கதைச் சித்தரிப்பு

பொன்னியின் செல்வன் (1950 – 1955) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருண்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . ‘பொன்னியின் செல்வன்’ என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் ராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்ற நாவலாக இந்நூல் உள்ளது. தமிழ்ப் பதிப்புலகத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல் வகையில் பொன்னியின் செல்வன் நாவல்தான் முதலிடத்தில் உள்ளது.

பதிப்பு

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 1950 ஆண்டு முதல் 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. பின்னர் நான்குமுறை மீண்டும் தொடராக வெளிவந்தது. வானதி பதிப்பகம் இதை நூலாக வெளியிட்டது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின் ஏராளமான பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

பொன்னியின் செல்வன் ஐந்து பகுதிகளை உடையது. 1. புதுவெள்ளம், 2. சுழற்காற்று, 3. கொலைவாள், 4. மணிமகுடம், 5. தியாக சிகரம்.

வரலாற்றுப் பின்னணி

பொன்னியின் செல்வன்

எழுத்தாளர் கல்கி, K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும் T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை எழுதினார். இந்நாவல் நிகழும் காலம் பொ.யு. 957 முதல் 973 வரை ஆட்சி செய்த சுந்தரசோழரின் இறுதி ஆண்டுகள். இவர் அரிஞ்சய சோழருக்கும் அன்பில் பட்டயங்களில் பெயர் குறிப்பிடப்படும் அரசியான வைதும்பை நாட்டு கல்யாணிக்கும் பிறந்தவர். இவர் இரண்டாம் பராந்தக சோழர் என அழைக்கப்பட்டார். இவருடைய மகன் ஆதித்த கரிகாலன் தலைமையில் சோழர்கள் சேவூர் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் வீரபாண்டியனை தோற்கடித்து கொன்றார்கள் என லெய்டன் பட்டயங்கள், கரந்தை பட்டயங்கள், திருவாலங்காடு பட்டயங்களில் குறிப்பு உள்ளது. ஆதித்த கரிகாலன் ‘வீரபாண்டியன் தலைகொண்ட’ என்னும் பெயர் பெற்றார். இப்போரில் பாண்டியர்களுக்கு ஈழ மன்னர் நான்காம் மகிந்தர் உதவி செய்தார் என இலங்கை வரலாற்று நூல் மகாவம்சம் குறிப்பிடுகிறது.

ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட செய்தியை உடையார்குடி கல்வெட்டு கூறுகிறது. ஆதித்த கரிகாலனை கொன்ற குற்றத்திற்காக அரசன் ஆணைப்படி வேதியர் சிலருக்கு திருவீரநாராயண சதுர்வேதிமங்கலச் சபை தண்டனை அளித்ததை ராஜராஜ சோழன் பதவி ஏற்ற இரண்டாம் ஆண்டு வெளியிடப்பட்ட இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுந்தர சோழருக்கு பிறகு பதவியேற்ற மதுரந்தகன் உத்தமசோழன் என்னும் பெயருடன் பதினாறாண்டுகள் ஆட்சி செய்தான். அந்தப்பதினாறு ஆண்டுகளிலும் கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதில் இருந்து உத்தமசோழனே கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி கருதுகிறார். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் அருண்மொழி தேவர் என்னும் ராஜராஜசோழன் தன் சிறியதந்தை உத்தமசோழர் எனும் மதுராந்தகருக்கு அரசுப்பதவியை மனமுவந்து அளித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. இச்செய்திகளின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் புனையப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம்

வாணர் குல வீரனான 'வல்லவரையன் வந்தியதேவன்' சோழச்சக்கரவர்த்தி சுந்தரசோழனின் மூத்த மகனான காஞ்சியிலிருக்கும் இளவரசன் ஆதித்த கரிகால சோழனிடமிருந்து தஞ்சையில் இருக்கும் 'சுந்தர சோழ' சக்கரவர்த்திக்கும், அவரின் மகளான பழையாறையில் இருக்கும் இளவரசி 'குந்தவை' பிராட்டியாருக்கும் ஓர் ஓலையை கொண்டு செல்கிறான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் இளவரசராக பட்டம் கட்டப்பட்ட ஆதித்த கரிகாலனை விடுத்து, சுந்தர சோழனின் பெரியப்பா கண்டராதித்தரின் மகனான மதுராந்தகச் சோழரைச் சோழ பேரரசுக்குச் சக்கரவர்த்தியாக்க சதி நடப்பதைக் காண்கிறான். சுந்தர சோழ சக்கரவர்த்தியின் நண்பரும் சோழர்களுக்கு பல நூற்றாண்டுகளாகப் போர்த்தளபதிகளாக இருந்து வந்த பழுவூர் சிற்றரசர் வம்சத்தை சேர்ந்தவருமான பெரிய பழுவேட்டரையர் இந்தச் சதியைச் செயல்படுத்துகிறார். அதில் பல சிற்றரசர்களும் தளபதிகளும் பங்குகொள்கின்றனர்.

சுந்தர சோழரின் தந்தையான அரிஞ்சய சோழ தேவரின் இரண்டாவது மூத்த சகோதரரான கண்டராதித்தர் சிவபக்தியில் மூழ்கி வாழ்ந்தவர். கண்டராதித்தரின் மூத்த சகோதரனான இராஜாதித்தர் போரில் உயிர் துறக்கவே அடுத்த அரியணைக்கு உரியவராகக் கண்டராதித்தர் ஆனார். ஆனால், அரியணையில் அமர விருப்பம் இல்லாததாலும், போரினால் ஏற்பட்ட விளைவுகளை அவர் வெறுப்பதாலும், போரில் அனுபவசாலியான தனது இளைய சகோதரரான அரிஞ்சய சோழ தேவரைச் சக்கரவர்த்தியாக்குகிறார். அரிஞ்சய சோழரும் அடுத்த சில ஆண்டுகளில் போரில் உயிர் துறந்தவுடன் அவர் மகன் சுந்தர சோழர் அரசரானார். முறைப்படி கண்டராதித்தரின் மகனான மதுராந்தகர் ஏற வேண்டிய அரியணை அது. மதுராந்தகர் வயதில் சிறியவராக இருந்ததுடன், கண்டராதித்தரும் அவரது மனைவியுமான செம்பியன் மாதேவியும் தனது மகன் அரசனாக வேண்டாமென்றும் சிவபக்தன் ஆனால் போதும் என்றும் முடிவெடுத்திருந்ததும் அதற்குக் காரணம்.

வந்தியத்தேவனும் குந்தவையும் (மணியம்)
பொன்னியின்செல்வன் கல்கி விளம்பரம்

மதுராந்தகர் பெரியவரானதும், தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அரியணைக்கு ஆசை கொண்டபோது அதுவே முறை என எண்ணிய பெரிய பழுவேட்டரையர் அவரை ஆதரிக்கிறார். மதுராந்தகரின் மனத்திலும் அரியணை ஆசையைத் தூண்டியதும், அதற்கான சதிக்கு பின்னிருந்து இயக்கியதும் பழுவூர் இளைய ராணியாக அழைக்கப்படும் நந்தினி. முதியவரான பழுவேட்டரையரை மணந்து அவரை ஆட்டிப் படைக்கும் நந்தினி பாண்டியர்களால் அரசி என நினைக்கப்படுபவள். அவளுக்கு பின்னாலிருந்து பாண்டியர்களின் ஆபத்துதவிப்படையும் அதன் தலைவனான ரவிதாசனும் இயக்குகிறார்கள். பாண்டியர்களை போரில் தோற்கடித்து பாண்டிய அரசனை ஆதித்த கரிகாலன் கொன்றதனால் அதற்குப் பழிவாங்க எண்ணுகிறார்கள்.

வந்தியதேவன் குந்தவையைச் சந்தித்து அவள் காதலுக்குரியவன் ஆகிறான். ஈழநாடு சென்று ஆதித்த கரிகாலனின் தம்பி அருண்மொழி வர்மனைச் சந்தித்து சதியைப் பற்றிச் சொல்கிறான். நாடு திரும்பும் அருண்மொழிவர்மன் கப்பல் தகர்க்கப்பட்டு கடலில் மூழ்கி உயிர்தப்பி நாகை சூடாமணி விகாரத்தில் படுத்திருக்கையில் தஞ்சைக்கு திரும்பும் ஆதித்த கரிகாலன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் மர்மமாக கொல்லப்படுகிறான். அவனை கொன்றது எவர் என்னும் வினாவுடன் நீளும் நாவல் நந்தினிக்கும் ஆதித்தகரிகாலனுக்கும் இருந்த பழையகாதல், திடீரென்று காணாமலான நந்தினியை பாண்டியன் ஒளிந்திருக்கும் குகையில் அவன் மனைவியாக கண்ட ஆதித்த கரிகாலன் அவள் கண்ணெதிரே பாண்டியனை கொன்றது ஆகிய செய்திகளைச் சொல்கிறது.

வந்தியத்தேவன், (மணியம்)

நந்தினியின் பின்னணியும் அவளுக்கும் சுந்தர சோழருக்குமான உறவும் நாவலில் விரிகிறது. சேந்தன் அமுதன் என்னும் பூ கட்டும் இளைஞனுக்கும் பூங்குழலி என்னும் படகோட்டிக்கும் இடையேயான உறவு விவரிக்கப்படுகிறது. நாவல் பல முடிச்சுகளை அவிழ்த்துச் சென்று மதுராந்தகன் உண்மையில் கண்டராதித்தரின் மகன் அல்ல, சேந்தன் அமுதனே அந்த மகன் எனக் காட்டுகிறது. எதிரிகளை வென்று சதிகளை அவிழ்த்து நாட்டை உரிமை கொள்ளும் அருண்மொழி தேவனே முடிசூட வேண்டுமென அனைவரும் எண்ணும்போது அருண்மொழி தேவன் குலமுறைப்படி மதுராந்தகனாகிய சேந்தன் அமுதனே அரசன் ஆகவேண்டும் என்று சொல்லி மணிமுடியை தியாகம் செய்கிறார். வந்தியதேவன் குந்தவையை மணக்கிறான். அருண்மொழி தேவன் வானதியை மணக்கிறார். பின்னாளில் அருண்மொழி தேவன் ராஜராஜ சோழன் என்ற பெயருடன் சோழ மன்னராக முடிசூட்டிக் கொண்டார் என நாவல் கூறிமுடிகிறது.

கதைமாந்தர்கள்

  • அருண்மொழிவர்மன் - இராஜராஜ சோழன்
  • வல்லவரையன் வந்தியதேவன் - இராஜராஜ சோழனின் நண்பன்
  • குந்தவை - அருண்மொழிவர்மனின் தமக்கை
  • நந்தினி - பழுவூர் இளைய ராணி
  • ஆதித்த கரிகாலன் - இராஜராஜ சோழனின் சகோதரன்
  • வானதி - கொடும்பாளூர் இளவரசி. இராஜராஜ சோழனின் முதல் மனைவி
  • ஆழ்வார்க்கடியான் - உளவு பார்ப்பவர்
  • மந்தாகினி - வாய்பேச இயலாத ராணி என்றழைக்கப்படுபவர். இராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனின் காதலி
  • பெரிய பழுவேட்டரையர் - தஞ்சை கோட்டைத்தலைவன். அரசனுக்கு அடுத்த ஸ்தானத்தில் வலிமையான அதிகாரத்தில் இருப்பவர்
  • செம்பியன் மாதேவி - கண்டராதித்த சோழனின் மனைவி. உத்தம மதுராந்தக சோழ தேவரின் அன்னை
  • சின்ன பழுவேட்டரையர் - பெரிய பழுவேட்டரையரின் சகோதரன்
  • அநிருத்த பிரம்மராயர் - முதன் மந்திரி
  • பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரி - சேனாதிபதி. கொடும்பாளூர் அரசன்
  • பூங்குழலி - ஓடக்காரப் பெண். உத்தம மதுராந்தக சோழரின் மனைவி
  • சேந்தன் அமுதன் - உத்தம மதுராந்தக சோழ தேவர்
  • போலி மதுராந்தகர் - பாண்டிய நாட்டு இளவல். அமரபுஜங்கன் நெடுஞ்செழியன்
  • ரவிதாசன் - பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுள் ஒருவர் (தளபதி)
  • மணிமேகலை - சம்புவரையர் இளவரசி. வந்தியதேவனை விரும்பியவள்
  • கந்தமாறன் - சம்புவரையர் இளவரசன்
  • பார்த்திபேந்திரன் - பல்லவ குலத்தவன். ஆதித்த கரிகாலனின் நண்பன்

இலக்கிய இடம்

பொன்னியின்செல்வன் அலெக்ஸாண்டர் டூமாவின் The Three Musketeers நாவலின் வலுவான செல்வாக்கு கொண்ட படைப்பு. வந்தியத் தேவனில் D'Artagnan நந்தினியில் Milady de Winter ஆகியோரின் சாயல் அழுத்தமாக உண்டு. ஆனால் நேரடித் தழுவலோ, இலக்கியத் திருட்டோ அல்ல. சோழர்களின் வரலாற்றுப் பின்னணியிலும், அக்கால பண்பாட்டுப் பின்னணியிலும் நாவலை தெளிவாக கட்டமைக்க ஆசிரியரால் இயன்றுள்ளது. மிக இளமையிலேயே வாசிக்கத்தக்க எளிமையான மொழி கொண்ட நாவல். எதிர்மறைப் பண்புகள், காமம் போன்றவை அற்றது. எனவே இறுதிவரை இனிய வாசிப்புக்குரியது. கதாபாத்திரங்கள் சாகச நாவல்களுக்குரிய மிகை இல்லாமல் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். வீரதீரச்செயல்கள், போர்கள் ஆகியவை மிகையாக காட்டப்படவில்லை. பெரும்பாலும் தனிமனித உணர்வுகள் மற்றும் அரண்மனைச் சதிகள் வழியாகவே செல்கிறது. தமிழகத்தின் பொற்காலம் எனப்படும் காலகட்டத்தையும், அதன் தலைமை ஆளுமை எனப்படும் ராஜராஜ சோழனின் இளமையையும் காட்டுவதனால் முக்கியமான படைப்பாக ஆகிறது. இலக்கிய வகைமையில் வரலாற்றுக் கற்பனாவாதக் கதை என வரையறுக்கப்படுகிறது.

தொடர்ச்சிகள்

பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக ராஜராஜ சோழனை முன்வைத்து பல படைப்புகள் எழுதப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பு

பொன்னியின் செல்வன் (நாவல்) - ஆங்கில மொழிபெயர்ப்பு - வரலொட்டி ரெங்கசாமி

பொன்னியின் செல்வன் இதுவரை நான்கு முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பிற வடிவங்கள்

  • பொன்னியின் செல்வன் நாவலை முழுக்க முழுக்க 1,200 வண்ணப்படங்களுடன் 2017-ல் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
  • ஓவியர் தங்கம் பொன்னியின் செல்வன் நாவலை 1,050 சித்திரங்களாக வரைந்து 10 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
  • சவுந்தர்யா ரஜினிகாந்த், ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரிஸாகத் தயாரிக்கிறார்.
  • பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்தம் திரைப்படமாக எடுத்துள்ளார். அதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.

உசாத்துணை

இணைப்புகள்

✅Finalised Page