under review

பேய்மகள் இளவெயினி

From Tamil Wiki
Revision as of 17:13, 11 October 2022 by Siva Angammal (talk | contribs)

பேய்மகள் இளவெயினி, சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை  நூலான புறநானூறுவில் 11- வது பாடலாக  இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பேய்மகள் இளவெயினி, பரணர் காலத்தைச் சேர்ந்த பெண் புலவர் ஆவார். குறவர் சமுதாயத்தில் பிறந்த. இவர் இளவெயினி என்று அழைக்கப்படுகிறார். பேய்மகள் என்பது தேவராட்டி, பூசாரிச்சியைக் குறிக்கும் சொல்லாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  இவர் இயற்றிய பாடல் ஒன்று புறநானூற்றில் காணப்படுகிறது

பாடலால் அறியவரும் செய்திகள்

புறநானூறு 11
  • பாடப்பட்டோன்: சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ.
  • திணை: பாடாண்.
  • துறை: பரிசில் கடாநிலை.
  • பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடலால் புகழ் பெற்ற வஞ்சி நகர வேந்தன். இந்த வஞ்சி தண்பொருநை ஆறு பாயும் நகரம். வானளாவிய புகழும் வெற்றியும் உடைய நகரம்.
  • பொருநை ஆற்று மணலில் பாவை செய்து பூப் பறித்துவந்து சூட்டி மகளிர் விளையாடுவர்.
  • இவர்கள் மென்மையான மயிர் கொண்ட தம் திரண்ட கைகளையும், வெண்ணிற இழையணியும் கொண்டவர்கள். பாவைக்குப் பூச்சூட்டிய பின்னர் பொருநை ஆற்றுப் புனல்நீரில் பாய்ந்து விளையாடுவர்
  • சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, தான் விரும்பிய கோட்டைகளையெல்லாம் வென்றவன். வலிமை மிக்க பெரியவர்களைப் புறங்கண்டவன். இவ்வாறு இவன் புறங்கண்ட வீரச் செருக்கைப் பாடினாள் ஒரு பாடினி
  • அதற்காக இவன் கழஞ்சு நிறைக்கு மிகுதியாக ஏரழகும், சீர்சிறப்பும் உடைய அணிகலன்களைப் பாடினிக்குப் பரிசாக வழங்கினான்.
  • பாடினிக்கு உடன் குரல் கொளைப்பண் தந்த பாணனுக்கு வெள்ளிநாரால் தொடுத்த தங்கத் தாமரைப் பூவைப் பரிசாக வழங்கினான்

பாடல் நடை

புறநானூறு 11


அரி மயிர்த் திரள் முன்கை

வால் இழை, மட மங்கையர்

வரி மணற் புனை பாவைக்குக்

குலவுச் சினைப் பூக் கொய்து

தண் பொருநைப் புனல் பாயும்

விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்

பாடல் சான்ற விறல்வேந் தனும்மே

வெப் புடைய அரண் கடந்து,

துப்புறுவர் புறம்பெற் றிசினே:

புறம் பொற்ற வய வேந்தன்

மறம் பாடிய பாடினி யும்மே,

ஏர் உடைய விழுக் கழஞ்சின்,

சீர் உடைய இழை பெற்றிசினே!

இழை பெற்ற பாடி னிக்குக்

குரல் புணர்சீர்க் கொளைவல்பாண்

மகனும்மே. என ஆங்கு,

ஒள்அழல் புரிந்த தாமரை

வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.