being created

பூமணி

From Tamil Wiki
Revision as of 04:14, 31 January 2022 by SathishKorea (talk | contribs)
பூமணி.jpg


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


// இப்பக்கத்தை SathishKorea உருவாக்குகிறார்//

பூமணி (மே 12, 1947) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களை அதன் முழுமையோடு தனது எழுத்தில் கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. அங்காடி நாவலுக்காக 2014 ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். இவரது படைப்புகள் வறண்ட கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு, ஒன்றாக பரவி கிடக்கும் கதைகளை அடிநாதமாக கொண்டவைகள்.

பிறப்பு, கல்வி

பூமணி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல்  அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். பெற்றோர் பூலித்துறை, தேனம்மாள்.

பூமணி,  இளையரசனேந்தலில் தன் தொடக்ககால பள்ளிப்படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார்.   

தனிவாழ்க்கை

பூமணி அவர்களின் மனைவியின் பெயர் செல்லம். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். எழுத்தாளர் சோ. தர்மன் இவரின் மருமகன். தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், சென்னையில் கூட்டுறவு துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்கு பிறகு இப்போது கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.

இலக்கியவாழ்க்கை

பூமணி கல்வி அறிவும் இலக்கிய அறிவும் பெற்றதற்கு அவர் அம்மாவே முதன்மை காரணம். சிறு வயதில் தன் அம்மாவிடம் கேட்டறிந்த நூற்றுக்கணக்காண மாயமந்திர கதைகள்தான் அவரின் கற்பனையை வளர்த்து இலக்கியத்திற்கு ஆட்படுத்தின. எது சாராம்சமானதோ, எது  சுவாரஷ்யமானதோ அதையே கதையாக சொல்லவேண்டும் என்ற தெளிவை தன் அம்மாவிடமிருந்தே அடைந்தார். நிகழ்ச்சிகளை சிறிய சிறிய தகவல்களாகக் கோர்த்து கதையை கட்டமைக்கும் கலையை அம்மாவிடமிருந்து கற்று அதையே தன் இலக்கிய அழகியலாக அமைத்துக்கொண்டார்.

பூமணியின் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாவது வழிகாட்டி, கல்லூரியில் அவருக்கு ஆசிரியராக வந்த விமர்சகர் சி.கனகசபாபதி. பூமணி, விமர்சகர் சி. கனகாபதியுடன் தொடர் உரையாடலில் ஈடுபட்டு இலக்கிய அடிப்படைகளையும், நவீன இலக்கியத்தையும், யதார்த்த இலக்கிய அழகியலையும் கற்றுக்கொண்டார்.