பூதப்பாண்டி சிவன் கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தின் தலைநகரான பூதப்பாண்டியில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவில். மூலவர் பூதலிங்க சாமி.
இடம்
பூதபாண்டி என்னும் ஊர் தோவாளை வட்டத்தின் தலைநகர். நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வுரின் பழமை 2000 ஆண்டுகள் முன்பு வரை செல்கிறது. இவ்வுரைப்பற்றிய புராணக்கதைகள் கேரளோப்பத்தி, கேரளமகாத்மியம் போன்ற நூல்களில் உள்ளன. பூதப்பண்டி பழையாற்றின் கரையில் உள்ளது. இங்குள்ள சிறு குன்றின் அடிவாரத்தில் சிவன் கோவில் உள்ளது. கோவிலை அடுத்து தெப்பக்குளம் உள்ளது.
மூலவர்
கோவில் மூலவர் பூதலிங்க சாமி, மூலவருக்கு துணையாக சிவகாமி தேவி உள்ளார். இருவருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. கோவில் கவ்வெட்டு ஒன்று மூலவரை சாலியர்கண்ட திருமேனி என்று கூறுகிறது.
தொன்மம்
பூதராயப் பாண்டியப் பெருமாள் என்பவன் ஊர்சபை தேர்தல் நடத்த போது பிராமணர்களை ஒதுக்கி வைத்துள்ளான். கோபம் கொண்ட பிராமணர்கள் யாகம் செய்து ஒரு பூதத்தை உருவாக்கி பூதராய பாண்டியனைக் கொன்றனர். அவனை புதைத்த இடத்தில் சிவன் கோவில் ஒன்றை கட்டினர். இந்த தொன்ம கதை கேரளோப்பத்தி என்னும் நூலில் உள்ளது.
சாலியர் சாதியை சார்ந்த ஒருவரின் பசு புதரினுள் பால் சிந்துவதை கண்டு புதரை நீக்கி பார்த்தபோது இக்கோவில் மூலவரை அடையாளம் கண்டு கொண்டதாக வாய்மொழி கதை உள்ளது.
கோவில் அமைப்பு
வரலாறு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.