under review

புஷ்பதந்தர்

From Tamil Wiki
Revision as of 19:43, 27 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "புஷ்பதந்தர் (சுவிதிநாதர்) சமண சமயத்தின் ஒன்பதாவது தீர்த்தங்கர். சமண சமய நம்பிக்கையின்படி புஷ்பதந்தர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராகி அருகர் நிலைக்கு உயர்ந்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

புஷ்பதந்தர் (சுவிதிநாதர்) சமண சமயத்தின் ஒன்பதாவது தீர்த்தங்கர். சமண சமய நம்பிக்கையின்படி புஷ்பதந்தர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராகி அருகர் நிலைக்கு உயர்ந்தார்.

புராணம்

புஷ்பதந்தர், சுக்ரீவன் - சுப்பிரியா இணையருக்கு, தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோரியாவில் உள்ள குக்குந்தூ எனுமிடத்தில் பிறந்தவர். புஷ்பதந்தர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தவர்.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: வெண்நிறம்
  • லாஞ்சனம்: முதலை
  • மரம்: பவழமல்லி
  • உயரம்: 100வில் (300 மீட்டர்)
  • முக்தியின் போது வயது: 200000 பூர்வ வருடங்கள்
  • முதல் உணவு: ஷாலிப்பூரின் புஷ்பமித்ரா வழங்கிய கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 88 (விதர்ப்)
  • யட்சன்: அஜிதன்
  • யட்சினி: மகாகாளி

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.