புதுக்குரல்கள்

From Tamil Wiki
Revision as of 21:56, 15 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "புதுக்குரல்கள் (1962) சி.சு.செல்லப்பா தொகுத்த புதுக்கவிதைகளின் தொகுதி. தமிழில் தொகுக்கப்பட்ட முதல் புதுக்கவிதை தொகுதி இது. தமிழில் புதுக்கவிதைகள் நிலைகொள்வதற்கான அடித்தளம் அமை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

புதுக்குரல்கள் (1962) சி.சு.செல்லப்பா தொகுத்த புதுக்கவிதைகளின் தொகுதி. தமிழில் தொகுக்கப்பட்ட முதல் புதுக்கவிதை தொகுதி இது. தமிழில் புதுக்கவிதைகள் நிலைகொள்வதற்கான அடித்தளம் அமைத்தது. 1973ல் இதன் இரண்டாவது பதிப்பு வெளிச்சம் என்ற பெயரில் கல்லூரிகளுக்குப் பாடமாக அமைந்தது. அது புதுக்கவிதை இயக்கத்தை கல்வித்துறை ஏற்பு பெறச்செய்தது,