பிரவீனா கணேஷன்
From Tamil Wiki
பிரவீனா கணேஷன் (ஹட்டன் பிரவீனா) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
பிரவீனா கணேஷன் இலங்கை ஹட்டனில் கணேஷன், அம்பிகா இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றார். ஆடை வடிவமைப்பாளர்.
இலக்கிய வாழ்க்கை
ஹட்டன் பிரவீனா எனும் புனை பெயரில் எழுதி வருகிறார். இவரின் முதல் நூல் ”தூவல்” எனும் கவிதைத் தொகுதி. இதில் நாற்பத்தைந்து கவிதைகளும் பதினாறு குறுங் கவிதைகளும் உள்ளது. கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதினார்.
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- தூவல்
உசாத்துணை
- ஆளுமை:பிரவீனா, கணேஷன்: noolaham
- பிரவீனா கணேஷன் அவர்களன் நேர்காணல்: வீரகேசரி டொட் எல்கே
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.