பிரபு கங்காதரன்

From Tamil Wiki
Revision as of 16:20, 2 August 2022 by Ramya (talk | contribs) (Created page with "பிரபு கங்காதரன் (பிறப்பு: அக்டோபர் 27, 1982) கவிஞர். இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். == பிறப்பு, கல்வி == பிரபு கங்காதரன் அக்டோபர் 27, 1982இல் பே...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பிரபு கங்காதரன் (பிறப்பு: அக்டோபர் 27, 1982) கவிஞர். இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

பிரபு கங்காதரன் அக்டோபர் 27, 1982இல் பேபி, பாலகங்காதரன் இணையருக்கு சீர்காழியில் பிறந்தார். சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சீர்காழி வலிவலம் தேசிகர் பல்தொழில்நுட்பக்கல்லூரியில் இயந்திரவியலில்(R & Ac) இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பொறியாளர். 2010லிருந்து அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பிப்ரவரி 12, 2014இல் மருத்துவ அய்வக நுட்புனரான உஷாவை மணந்தார். மகள் அமிர்தா.

இலக்கிய வாழ்க்கை

பிரபு கங்காதரனின் முதல் படைப்பு அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகி 2018இல் சீரோ டிகிரி பதிப்பகத்தால் வெளியானது. தன் இலக்கிய ஆதர்சமாக சாரு நிவேதாவைக் குறிப்பிடுகிறார். 2022இல் ஊமத்தை நீலம் கவிதைத் தொகுப்பு வெளியானது.

நூல்கள்

கவிதைத்தொகுப்பு
  • அம்புயாதனத்துக்காளி - 2018
  • ஊமத்தை நீலம் - 2022

வெளி இணைப்புகள்

  • பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்

உசாத்துணை