under review

பிரபந்த தீபிகை

From Tamil Wiki
Revision as of 08:26, 2 November 2023 by Logamadevi (talk | contribs)

To read the article in English: Prabandha Deepigai. ‎


பிரபந்த தீபிகை (பொ.யு 19-ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் சொல்லும் பாட்டியல் நூல்களில் ஒன்று. ஆசிரியர் வேம்பத்தூர் முத்துவேங்கட சுப்பைய நாவலர்.

நூல் அமைப்பு

பிரபந்த தீபிகை பதினான்கு சீர் விருத்தப் பாடல்கள் 200 கொண்டது. சதகம் என்னும் நூல்வகையைச் சார்ந்தது.

உள்ளடக்கம்

பிரபந்த வகைகளும், பொருத்த வகைகளும் தவிர பல செய்திகள் இந்நூலில் கூறப்படுகின்றன. பிற்கால பக்தி இயக்கத்தைச் சார்ந்த செய்திகள் பல உள்ளன. ஆழ்வார்கள் பிறப்பு, சைவ அடியார் ஆகிய செய்திகளுடன் கலியுக மன்னர்கள், நாயக்கர், நவாப்புகள் ஆகியோர் குறித்தும் தாள, ராக முறைகள் பற்றியும் வேதம், ஸ்மிருதி, உபநிடதம், சிவாகமம், தீட்சை ஆகியவற்றைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது

உசாத்துணை


✅Finalised Page