standardised

பல்சந்தமாலை

From Tamil Wiki

பல்சந்தமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பல்சந்தமாலையில் 10 முதல் 100 பாடல்கள் வரை இருக்கும். இவற்றில் ஒவ்வொரு பத்துப் பாடல்களும் ஒவ்வொரு சந்தத்தில் அமையும்[1][2]. பல சந்தங்களைக் கொண்டு அமைவதால் இதற்குப் பல்சந்தமாலை என்று பெயர்.

குறிப்புகள்

  1. பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையாம்

    - நவநீதப் பாட்டியல், பாடல் 37

  2. பத்து முதலாப் பப்பத்து ஈறா
    வைத்த வண்ண வகைபத் தாகப்
    பல்சந்த மாலை பகரப் படுமே

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 834

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.