பரிதிமாற்கலைஞர்

From Tamil Wiki
Revision as of 16:03, 31 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பரிதிமாற்கலைஞர் (பரிதிமால்கலைஞர்) (வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி) தமிழறிஞர், ஆய்வாளர், தனித்தமிழியக்கத்தின் முன்னணி கோட்பாட்டளர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பரிதிமாற்கலைஞர் (பரிதிமால்கலைஞர்) (வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி) தமிழறிஞர், ஆய்வாளர், தனித்தமிழியக்கத்தின் முன்னணி கோட்பாட்டளர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர்.

பிறப்பு, கல்வி

மதுரை மாவட்டத்தில் விளாச்சேரியில் 6 ஜூலை 1870 கோவிந்த சிவன் சாஸ்திரிக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார். தந்தையிடமிருந்து வேதக்கல்வி பெற்றார். மதுரையை அடுத்த பசுமலையில் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது பாலகிருஷ்ண நாயுடு என்பவரிடம் சிலம்பம், மற்போர் கற்றார். மதுரையில் 1885 சேர்ந்து மகாவித்துவான் க. சபாபதி முதலியாரிடம் தமிழ்ப் பாடம் பயின்றார்.

தனிவாழ்க்கை

சூரிய நாராயண சாஸ்திரி தனது பத்தொன்பதாவது வயதில் 1889ல் முத்துலட்சுமியை ஒரு பெண் குழந்தையும், இரு ஆண் குழந்தைகளும் பிறந்தனர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ படித்தார். அங்கே முதல்வராக இருந்த வில்லியம் மில்லர் சூரியநாராயண சாஸ்திரியில் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தினார். ஒருமுறை முனைவர் வில்லியம் மில்லர் டென்னிசன் எழுதிய ‘ஆர்தரின் இறுதி நாள்’ என்ற கவிதையிலுள்ள துடுப்புகள் இருபுறமும் நீரைப் பின்னோக்கித் தள்ள நீரில்மிதந்து போகும் படகு பறவை தன் சிறகுகளை விரித்துச் செல்வது போல் உள்ளது என்ற உவமையைக் கூறி இதைப்போல் உவகை எங்குமில்லை என்றபோது சூரியநாராயண சாஸ்திரி கம்பராமாயணத்தில் அயோத்திக் காண்டத்தில் குகப் படலத்தில் வரும்

“விடுநனி கடிது”என்றான் மெய்உயிர் அனையானும்

முடுகினன் நெடுநாவாய்; முரிதிரை நெடுநீர்வாய்;

கடிதினின், மடஅன்னக் கதியது செலநின்றார்

இடருற மறையோரும் எரியுறு மெழுகானார்”

என்ற பாடலை ஆங்கிலத்தில் சொன்னார். மில்லரின் அன்புக்குரியவரானார்.

பி.ஏ தமிழ், பி.ஏ லாஜிக் இரண்டிலும் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். வில்லியம் மில்லரின் அழைப்பின்பேரில் சென்னை கிறித்தவக் கல்லூரியிலேயே தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

மறைவு

2 நவம்பர்1903ல் பரிதிமாற்கலைஞர் மறைந்தார்

நினைவகங்கள், வரலாற்றுநூல்கள்

மதுரை மாவட்டம், விளாச்சேரியில் பரிதிமாற்கலைஞர் பிறந்து வாழ்ந்த இல்லத்தை, தமிழ்நாடு அரசு 31 அக்டோபர் 2007 அன்று அவருடைய நினைவில்லமாக திறந்து வைத்தது.

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில்6 ஜூலை நாள் பரிதிமாற்கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


ஆசிரியப் பணிக்கு வருவதற்கு முன் கலாவதி (1898), ரூபாவதி (1899) என்னும் நாடக நூல்களை எழுதி நடித்தார்.


உரூபாவதி,

கலாவதி,

மான விசயம்

தனிப்பாசுரத் தொகை,

பாவலர் விருந்து,

மதிவாணன்,

நாடகவியல்,

தமிழ் விசயங்கள்,

சித்திரக் கவி விளக்கம்,

சூர்ப்பநகை – புராண நாடகம்


பதிப்பித்த நூல்கள்

சயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி,

மகாலிங்க ஐயர் எழுதிய இலக்கணச் சுருக்கம்,

புகழேந்திப் புலவரின் நளவெண்பா,

உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத் தமிழ்,

தனிப் பாசுரத் தொகை

தனித்தமிழியக்கம்

தமிழிலுள்ள வடமொழிச் செல்வாக்கை அகற்றும் நோக்குடன் உருவான தனித்தமிழியக்கத்தில் தீவிரமான ஈடுபாடுகொண்ட சூரியநாராயண சாஸ்திரி தன்பெயரை பரிதிமால்கலைஞர் என நேரடித் தமிழாக்கம் செய்துகொண்டார்.