பரணர் பாட்டியல்

From Tamil Wiki
Revision as of 11:48, 10 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பரணர் பாட்டியல் (பொயு 9 ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் பாட்டியல் நூல்களில் ஒன்று. பன்னிரு பாட்டியல் நூலில் இதன் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. == ஆ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பரணர் பாட்டியல் (பொயு 9 ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்கும் பாட்டியல் நூல்களில் ஒன்று. பன்னிரு பாட்டியல் நூலில் இதன் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

ஆசிரியர்

இதன் ஆசிரியர் பரணர். சங்ககாலப் பரணரின் பெயரை கொண்டவர். பரணர் என்பது ஒரு குலப்பெயர் அல்லது ஆசிரியர் மரபின் பெயராகவும் இருக்கலாம்.

நூல்

பரணர் பாட்டியல் பொயு 9 ஆம்நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். இந்நூலில் இருந்து எடுக்கப்பட்ட 34 பாடல்கள் பன்னிருபாட்டியல் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. எழுத்து பகுதியில் 20 பாடல்கள், சொல் பகுதியில் ஒருபாடல், இனம் பகுதியில் 13 பாடல்கள். பிள்ளைத்தமிழ் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கும் இவர் முடி சூடிய அரசன் மீது பிள்ளைத்தமிழ் பாடக்கூடாது என்கிறார். (பன்னிரு பாட்டியல் 178)

இவரது நூலுக்கு வழங்கிய வேறு பெயர்கள் பருணர் பாட்டியல், வாருணர் பாட்டியல் என்ற பெயர்களும் உள்ளன

உசாத்துணை

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, 2005