being created

பன்மணிமாலை

From Tamil Wiki
Revision as of 20:57, 10 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created page with "''பன்மணிமாலை''' என்பது, பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகையில் ஒருபோகு, அம்மானை, ஊசல் என்னும் மூன்று உறுப்புக்களு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பன்மணிமாலை' என்பது, பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகையில் ஒருபோகு, அம்மானை, ஊசல் என்னும் மூன்று உறுப்புக்களும் நீங்கலாக ஏனைய இலக்கணங்கள் அனைத்தும் அமையப் பெற்றதே பல்மணிமாலை எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன[1].

அம்மானை, ஊசல், ஒருபோகு, இன்றி வெண்பா வெள்ளொத்தாழிசையும், ஆசிரியப்பா ஆசிரியத்தாழிசையும் கலிப்பா கலித்தாழிசையும், வஞ்சிப்பா வஞ்சித்தாழிசையும் அந்தாதியாகப் பாடிக் கடைமுடிவிலே வெள்ளை விருத்தம் ஆசிரிய விருத்தம் கலிவிருத்தம் வஞ்சிவிருத்தம் இப்படி நூறு பாடப்படுவது பன்பணிமாலையென்று வழங்கப்படும்[2].

இதில் புயவகுப்பு, மதங்கம், காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, என்னும் பதினாறு பொருட் கூற்று உறுப்புக்கள் அமைந்திருக்கும்

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல் பக். 174
  2. நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 39 ஆம் பாடல்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.