being created

பதிற்றுப்பத்து: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
No edit summary
Line 1: Line 1:
பதிற்றுப்பத்து சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். சங்க இலக்கிய தொகை நூல்களில் புறத்திணை சார்ந்த இரு நூல்களில் ஒன்று.
பதிற்றுப்பத்து சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். சங்க இலக்கிய தொகை நூல்களில் புறத்திணை சார்ந்த இரு நூல்களில் ஒன்று.
== பொருண்மை ==
== பொருண்மை ==
Line 287: Line 286:
* [https://www.tamilvu.org/ta/library-l1240-html-l1240ind-124193 பதிற்றுப்பத்து தமிழ் இணைய கல்விக் கழகம்]  
* [https://www.tamilvu.org/ta/library-l1240-html-l1240ind-124193 பதிற்றுப்பத்து தமிழ் இணைய கல்விக் கழகம்]  
* பதிற்றுப்பத்து மூலமும் விளக்க உரையும், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, பூம்புகார் பதிப்பகம்
* பதிற்றுப்பத்து மூலமும் விளக்க உரையும், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, பூம்புகார் பதிப்பகம்
}
{{Being created}
}


{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:24, 14 July 2023

பதிற்றுப்பத்து சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். சங்க இலக்கிய தொகை நூல்களில் புறத்திணை சார்ந்த இரு நூல்களில் ஒன்று.

பொருண்மை

பதிற்றுப்பத்து நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளும் கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித் தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூன்று சேர மன்னர்களும் ஆக மொத்தம் எட்டு பேர் பற்றிய வரலாற்றையே நமக்குக் கிடைக்கப்பெற்ற பதிற்றுப்பத்து 80 பாடல்கள் வாயிலாகப் பெறமுடிகிறது. இந்நூல் சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.

வகை

பதிற்றுப்பத்து நூலின் பாடல்கள் அகவாழ்வோடு இணைந்த புறப்பொருள் பற்றியவை ஆகும். எட்டுத்தொகை நூல்களில் புறப்பொருள் பற்றிய நூல்கள் இரண்டினுள் பதிற்றுப்பத்தும் ஒன்றாகும். மற்றொன்று புறநானூறு. சேர மன்னர்களின் குடிகளைக் காக்கும் முறை, படை வன்மை, போர்த்திறம், பகையரசர் மேல் பரிவு, காதல் சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர்களைக் காக்கும் சிறப்பு ஆகிய பண்புகளையும், கவிஞரைக் காக்கும் பண்பு, பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சித் திறன்களையும் சித்திரிக்கின்றன.

காலம்

பதிற்றுப்பத்து நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவோரும் உண்டு. ஆயினும் அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் எனலாம்.

பதிற்றுப்பத்துப் பதிகங்கள்

பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும் அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன. இவை நூலின் காலத்துக்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. பதிற்றுப்பத்தின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. இப்பதிகங்களுக்குக் கட்டமைப்புச் சிறப்பு உண்டு. பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் (colophon) உள்ளன. கவிதைப் பகுதி நூலின் பாடல்களைப் போன்று ஆசிரியப்பா நடையில் உள்ளது. இந்தப் பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.

இப்பதிகங்கள் சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன. முதன்முதலாக கி.பி.989- ஆம் ஆண்டில் கல்வெட்டு அமைத்த மன்னன் முதலாம் இராஜராஜசோழன் என்று டி.வி. சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவைகள் கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் குறிப்பிடுகிறார்.

பதிற்றுப்பத்துப் பதிகங்களை நோக்கும்போது சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெரிகிறது. இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும் மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துகளின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பதுவும் தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது. ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன. காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

தொகுப்பு முறை

பதிற்றுப்பத்து நூல் பாடல்கள் 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இம்முறைமை ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். ஐங்குறுநூறு மற்றும் திருக்குறள் நூல்களில் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு இடம்பெற்றுள்ளது.

நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன.ஒரு பாட்டின் கடைசி அடி அடுத்த பாட்டின் முதல் அடியாக வருவதே அந்தாதியாகும். எடுத்துக்காட்டாக நான்காம் பத்தின் முதற்பாடல் கடைசி அடி போர்மிகு குருசில் நீ மாண்டனை பலவே. இப்பத்தின் அடுத்த பாடல் அதாவது 32-வது பாடல் முதல் அடி மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ. இவ்வாறான அந்தாதித் தொடை இப்பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.

ஆசிரியர்கள்

பதிற்றுப்பத்து நூலின் பாடல்களை தலா பத்துப் பாடல்கள் என பத்துப் புலவர்கள் எழுதியிருக்க வேண்டும். ஆனால் கிடைத்தவை எட்டுப் பத்துகள்தான். முதல் பத்தும் பத்தாம் பத்தும் கிடைக்காததால் அதை எழுதிய புலவர்கள் பெயரையும் அறியமுடியவில்லை. மற்ற எட்டு ஆசிரியர்களைப் பற்றிய சிறு குறிப்பு;

குமட்டூர்க் கண்ணனார்

குமட்டூர்க் கண்ணனார் பெயரிலுள்ள குமட்டூர் என்பது இவரது ஊர். கண்ணனார் என்பது இவரது இயற்பெயர். இவர் பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம்பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியுள்ளார். இமயவரம்பனைப் பாடி, உம்பற்காடு என்ற பகுதியில் ஐநூறு ஊர்களைப் பிரமதாயமாகவும், அவனது தென்னாட்டு வருவாயுள் பாகமும் பெற்றாரென இரண்டாம் பத்தின் பதிகம் கூறுகிறது. இவ்விரண்டாம் பத்தினைத் தவிர இவர் பாடியனவாக வேறு பாடல்கள் கிடைக்கவில்லை.

பாலைக்கோதமனார்

கோதமனார் என்னும் பெயரையுடைய இப்புலவர் பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடுபவராவர். ஆதலால் இவர் பாலைக்கோதமனார் எனச் சான்றோரால் குறிக்கப்படுகின்றார். இவர் இமயவரம்பன் தம்பியான பல்யானைச் செல்கெழு குட்டுவனை பதிற்றுப்பத்து நூலின் மூன்றாம் பத்தில் பாடிச் சிறப்பித்திருக்கின்றார். அவர் வேந்தனை பாடியதற்கு பரிசாக "யானும் என் சுற்றமும் துறக்கம் புகும்படி பொருந்திய அறங்களை முடித்துத் துறக்கத்தைத் தருக" என்று வேண்டினார். சேரவேந்தன் அவர் விரும்பிய வண்ணமே வேள்வி பல செய்து "நீ விழையும் துறக்கத்தின்கண் நீடு வாழ்க" என கூறினான். டாக்டர் உ.வே. சாமிநாதையர், பாலைக்கோதமனாரே கோதமனாரெனச் சில‌ ஏடுகளில் குறிக்கப் பெற்றனரெனவும், பதிற்றுப்பத்து மூன்றாம்பத்து பாடியவரும் "விழுங்கிக் பறைந்த" எனத் தொடங்கும் புறப் பாட்டைப் பாடியவரும் ஒருவரேயெனவும் கருதுகின்றார்.

காப்பியாற்றுக்காப்பியனார்

இவர் காப்பியாறு என்னும் ஊரினர்; காப்பியன் என்னும் பெயரினர். பண்டைக்காலத்தும் இடைக்காலத்தும் நம் தமிழகத்தில் காப்பியன் என்ற பெயருடையார் பலர் இருந்துள்ளனர். காப்பியஞ் சேந்தனார், தொல்காப்பியனார் , எனப் பழங்காலத்திலும், காப்பியன் ஆதித்தன் கண்டத்தடிகள் என இடைக்காலத்தும் காணப்படுகிறது. காப்பியன் என்போர் பலர் இருந்ததால் அவர்களிடமிருந்து வேறுபடுத்தவே இவர் ஊரொடு சேர்த்துக் காப்பியாற்றுக்காப்பியனார் எனச் சான்றோர் வழங்கினர். காப்பியாற்றுக்காப்பியனார், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேரவேந்தனை, பதிற்றுபத்தின் நான்காம் பத்தைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றார்.

பரணர்

ஆசிரியர் பரணர் சங்ககாலச் சான்றோர் கூட்டத்தில் சிறப்புடைய ஒருவர். இவர் பாடிய பாடல்ககள், பல சங்க இலக்கியங்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் மாமூலனார் முதலிய சான்றோர் போலத் தம் காலத்தும் தம்முடைய முன்னோர் காலத்தும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டி பண்டைய தமிழ்நாட்டு வரலாற்றை தன் பாடல்களில் எழுதிய புலவர் பரணராவர். இவர் பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்தாக கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனை பாடி சிறப்பித்துள்ளார். இதன் பதிகம், இச்செங்குட்டுவனே வடவரை வென்று கண்ணகிக்கு கல் கொணர்ந்த சேரன் செங்குட்டுவன் என்று கூறுகிறது. இப்பத்தின்கண் அச்செய்தி யொன்றும் குறிக்கப்படாமைகொண்டு , திரு.கா.சு. பிள்ளை முதலியோர் , இக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் சிலப்பதிகாரச் செங்குட்டுவனுக்கு முன்னோன் என்பர். செங்குட்டுவனுடைய அறச்செயல் நலமும் மறச்செயல்‌ மாண்பும் இவர் பாடல்களில் பாடப்பட்டுள்ளன.

காக்கை பாடினியார் (நச்செள்ளையார்)

செம்மை யென்பது இப் புலவர்பெருமாட்டியின் இயற்பெயர். செந்தமிழ் புலமையாற் பெற்ற சிறப்புக்குறித்து இவர் பெயர், முன்னும் பின்னும் சிறப்புணர்த்தும் இடைச்சொற்கள் சேர்ந்து நச்செள்ளையாரென வழங்குவதாயிற்று. விருந்து வரக் கரைந்த காக்கையைக் காதலன் பிரிவால் வேறுப்பட்டு வருந்தும் தலைமகளொருத்தி கூற்றில்வைத்து இவர் ஒரு பாட்டைப் பாடினார். அப் பாட்டுக் குறுந்தொகையுள் சான்றோரால் சேர்க்கப்பட்டுள்ளது. அப்பாட்டின் நலங்கண்டு வியந்த செந்தமிழ்ச் சான்றோர் நச்செள்ளையாரைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் எனப் பாராட்டுவாராயினர். அது முதல் அவரும் காக்கைபாடினியார் நச்செள்ளையாரென வழங்கப்பெறுகின்றனர். பதிற்றுப்பத்து நூலின் ஆறாம் பத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றார். அவர் பாட்டையேற்று மகிழ்ந்த சேரலாதன் அவர்க்கு அணிகலனுக்கென ஒன்பது கால்பொன்னும், நூறாயிரம் பொற்காசும் வழங்கியதோடு, அவரை, அரசவைப் புலவராகத் தன் பக்கத்தே இருத்தல் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான்.

கபிலர்

சங்கத் தொகை நூல்களில் காணப்படும் சான்றோர்களுள், பல புலவர்களும் புகழும் சிறப்புக்குரியவர் கபிலர். "மானே பரிசிலன் மன்னும் அந்தணன்" எனத் தாமே தம்மை அந்தணனென்று கூறுவதும், மாறோக்கத்து நப்பசலையார் "புலனழுக்கற்ற அந்தணாளன்" என்பதும் நோக்குவார். இவர் பறம்பு நாட்டு வாதவூரிற் பிறந்தவர். வாதவூர்க் கல்வெட்டுகளே அதனைத் "தென் பறம்பு நாட்டுத் திருவாதவூர்" என்று குறிக்கின்றன. இந்நாட்டு வேந்தனான வேள்பாரிக்குக் கபிலர் உயிர்த்துணைவராவர். அவன் இறந்தபின் அவன் மகளிரைக் கபிலர் தன் மக்களாகக் கொண்டு சென்று திருகோவலூரில் மலையமான் மக்களுக்கு மணம் செய்துவைத்தார். இவர் பதிற்றுப்பத்து நூலின் ஏழாம்பத்தால் செல்வக் கடுங்கோ வாழியாதனைச் சிறப்பித்துள்ளார். இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களுள் பரிபாடல் ஒன்றைத் தவிர ஏனைய எல்லாவற்றினும் பல‌ பாடல்கள் உண்டு.

அரிசில் கிழார்

இந்தப் புலவரது இயற்பெயர் தெரியவில்லை. அரிசில் என்பது சோழநாட்டு ஊர்களுள் ஒன்று. இவ்வூரருகே காவிரியினின்றும் பிரித்து சென்ற ஒரு கிளை அரிசிலாறு என வழங்குவதாயிற்று. சான்றோர் இவர் இயற்பெயரை விடுத்து அரிசில் கிழார் என்ற சிறப்புப்பெயரையோ பெரிதெடுத்து வழங்கியமையின், நாளடைவில் இயற்பெயர் மறைந்து போயிற்று. அரிசில் கிழார் வையாயவிக்கோப் பெரும் பேகனையும் , அதியமான் எழினியையும் பாடியுள்ளார். பதிற்றுப்பத்து நூலின் எட்டாம்பத்தைப் பாடித் தகடூர் எறிந்த பெரும் சேரல் இரும் பொறையைச் சிறப்பித்துள்ளார்.

பெருங்குன்றூர்கிழார்

பெருங்குன்றூர் எனப் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அதனால் இச்சான்றோரது பெருங்குன்றூர் இந்த இடத்தில் உள்ளதென அறுதியிட்டுக் கூறுவது இயலாததாயிற்று. மலைப்படுகடாம் பாடிய ஆசிரியரது பெருங்குன்றூர், இப் பெருங்குன்றூர்கிழாரது ஊரின் வேறுபட்டது என்பதற்காகவே, அவர் ஊரை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் எனச் சான்றோர் தனித்து மொழிந்தனர். வையாவிக் கோப்பெரும்பேகனை அவன் மனைவி காரணமாகப்‌ பாடிய சான்றோருள் இவரும் ஒருவராவர். இவர் பாடியனவாகப் பல பாடல்கள் பிற தொகை நூல்களிலும் உள்ளன. பதிற்றுப்பத்து நூலின் ஒன்பதாம் பத்தால் இவர் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையைச் சிறப்பித்துள்ளார்.

பாடல் தொகுதிகளின் பட்டியல்

பதிற்றுப்பத்து நூலில் உள்ள பாடல்களை பாடியவர்கள், பாடப்பட்ட மன்னர்கள் மற்றும் பாடியவர்கள் பெற்ற பரிசுகளின் விவரம்:

பகுதி பாடியவர் பாடப்பட்ட சேர மன்னன் பாடியவர் பெற்ற பரிசுகள்
முதல் பத்து - - -
இரண்டாம் பத்து குமட்டூர்க் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உம்பற்காடு, 500 ஊர்கள்
மூன்றாம் பத்து பாலைக் கௌதமனார் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் வேள்விகள் செய்ய உதவி வழங்கப்பட்டது
நான்காம் பத்து காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 40 நூறாயிரம் பொன், சேர நாட்டின் ஒரு பகுதி
ஐந்தாம் பத்து பரணர் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் உம்பற்காட்டு வாரி
ஆறாம் பத்து காக்கை பாடினியார் (நச்செள்ளையார்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 9 துலாம் பொன், நூறாயிரம் பொன்
ஏழாம் பத்து கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதன் நூறாயிரம் பொன்
எட்டாம் பத்து அரிசில் கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஒன்பது நூறாயிரம் காணம்
ஒன்பதாம் பத்து பெருங்குன்றூர் கிழார் குடக்கோ இளஞ் சேரலிரும் பொறை முப்பத்தேழாயிரம் பொன்
பத்தாம் பத்து - -

அரசர்களும் ஆட்சிக்காலமும் (ஆண்டுகள்)

பதிற்றுப்பத்து நூலில் பாடப்பெற்ற அரசர்களின் ஆட்சிகாலம்.

வஞ்சி நகரில் இருந்து ஆண்டவர்கள்
  • இமையவரம்பன் (58)
  • இவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் (25)
  • இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த மூத்தமகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (25)
  • இமையவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் (55)
  • இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (38)
கருவூர் நகரில் இருந்து ஆண்டவர்கள்
  • செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் (25)
  • தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (17)
  • குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (16)

பதிற்றுப்பத்து பதிகம் தரும் செய்திகள்

பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். இந்தப் பதிகங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை.

இரண்டாம் பத்து

பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;

  • இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பாடியது
  • இமையத்தில் வில் பொறித்தான். இச்செய்தியைப் பத்துப்பாட்டு நூல்களுல் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படையில் அதன் ஆசிரியர் புகழ்ந்து கூறுகிறார்.
  • ஆரியரை அடக்கினான்
  • யவனரை அரண்மனைத் தொழிலாளியாக்கிக் கட்டுப்படுத்தினான்
  • பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டுமக்களுக்கு வழங்கினான்
மூன்றாம் பத்து

பதிற்றுப்பத்து நூலின் மூன்றாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;

  • பல்யானைச் செல்கெழு குட்டுவனை பாலைக்கோதமனார் பாடியது
  • உம்பற் காட்டைக் கைப்பற்றினான்
  • அகப்பா நகரின் கோட்டையை அழித்தான்
  • முதியர் குடிமக்களைத் தழுவித் தோழமையாக்கிக் கொண்டான்
  • அயிரை தெய்வத்துக்கு விழா எடுத்தான்
  • நெடும்பார தாயனாருடன் துறவு மேற்கொண்டான்
நான்காம் பத்து

பதிற்றுப்பத்து நூலின் நான்காம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;

  • களங்காய்ப் கண்ணி நார்முடிச் சேரலை காப்பியாற்றுக்காப்பியனார் பாடியது
  • பூழி நாட்டை வென்றான்
  • நன்னனை வென்றான்
ஐந்தாம் பத்து

பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;

  • கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை பரணர் பாடியது
  • ஆரியரை அடக்கினான்
  • கண்ணகி கோட்டம் அமைத்தான்
  • கவர்ந்துவந்த ஆநிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்
  • வியலூரை அழித்து வெற்றி கண்டான்
  • கொடுகூரை எறிந்தான்
  • மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான்
  • கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான்
  • சோழர் ஒன்பதின்மரை வென்றான்
  • படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான்
ஆறாம் பத்து

பதிற்றுப்பத்து நூலின் ஆறாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;

  • ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது
  • தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான்.
  • பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான்.
  • வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான்
  • மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான்
  • கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.
ஏழாம் பத்து

பதிற்றுப்பத்து நூலின் ஏழாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;

  • கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)
  • செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது
  • பல போர்களில் வென்றான்
  • வேள்வி செய்தான்
  • மாய வண்ணன் என்பவனை நண்பனாக மனத்தால் பெற்றான்
  • அந்த மாயவண்ணன் கல்விச் செலவுக்காக ஒகந்தூர் என்னும் ஊரையே நல்கினான்
  • பின்னர் அந்த மாயவண்ணனை அமைச்சனாக்கிக் கொண்டான்
எட்டாம் பத்து

பதிற்றுப்பத்து நூலின் எட்டாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;

  • பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழார் பாடியது
  • கொல்லிக் கூற்றத்துப் போரில் அதிகமானையும், இருபெரு வேந்தரையும் வென்றான்
  • தகடூர்க் கோட்டையை அழித்தான்
ஒன்பதாம் பத்து

பதிற்றுப்பத்து நூலின் ஒன்பதாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;

  • இளஞ்சேரல் இரும்பொறையை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது
  • கல்லகப் போரில் இருபெரு வேந்தரையும் விச்சிக்கோவையும் வீழ்த்தினான். அவர்களின் 'ஐந்தெயில்' கோட்டையைத் துகளாக்கினான்.
  • பொத்தியாரின் நண்பன் கோப்பெருஞ்சோழனை வென்றான்.
  • வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனை வென்றான்
  • வென்ற இடங்களிலிருந்து கொண்டுவந்த வளத்தை வஞ்சி நகர மக்களுக்கு வழங்கினான்.
  • மந்திரம் சொல்லித் தெய்வம் பேணச்செய்தான்
  • தன் மாமனார் மையூர் கிழானைப் புரோசு மயக்கினான்
  • சதுக்கப் பூதர் தெய்வங்களைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து நிலைகொள்ளச் செய்தான்
  • அந்தப் பூதங்களுக்குச் சாந்திவிழா நடத்தினான்

பாடல் தலைப்புகள்

பதிற்றுப்பத்து நூலில் பாடல்களின் தலைப்பாக அப்பாடல்களிலேயே காணப்படும் அழகான சொற்றொடர்களே விளங்குகின்றன.

இரண்டாம் பத்திலுள்ள முதற்பாடலின் தலைப்பு புண்ணுமிழ் குருதியாகும். இத்தொடர் இப்பாட்டின் எட்டாம் அடியில் உள்ளது. பாடல் எண் பன்னிரண்டினுடைய, அடுத்த பாடலின், தலைப்பு மறம் வீங்கு பல்புகழ் என்பதாகும். இத்தொடர் இப்பாடலின் எட்டாவது அடியில் காணப்படுகிறது. இது போன்று இந்நூல் முழுவதும் ஆங்காங்கே காணப்படும் அருஞ் சொற்றொடர்கள் பாக்களின் தலைப்பாக விளங்குவது இதன் தனிச்சிறப்பாகும். அதற்கு அடுத்த பாடலின் தலைப்பு பூத்த நெய்தல் ஆகும். இத்தொடர் பதின்மூன்றாம் பாடலின் மூன்றாம் அடியில் காணப்படுகிறது. 14-ஆம் பாடலின் தலைப்பு சான்றோர் மெய்ம்மறை. இதற்கு அடுத்த பாடலின் தலைப்பு நிரைய வெள்ளம். இத்தகைய அழகான தலைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவரும் வண்ணம் தீட்டிய சித்திரம் போல் கருத்தின் முத்தாய்ப்பாக விளங்குகின்றன.

பதிற்றுப்பத்து நூலிலுள்ள பாடல்களின் தலைப்புகள் கீழ்காணுமாறு வைக்கப்பட்டுள்ளன;

இரண்டாம் பத்து
  1. புண்ணுமிழ் குருதி
  2. மறம்வீங்கு பல்புகழ்
  3. பூத்த நெய்தல்
  4. சான்றோர் மெய்ம்மறை
  5. நிரைய வெள்ளம்
  6. துயிலின் பாயல்
  7. வலம்படு வியன்பணை
  8. கூந்தல் விறலியர்
  9. வளனறு பைதிரம்
  10. அட்டுமலர் மார்பன்
மூன்றாம் பத்து
  1. அடுநெய் யாவுதி
  2. கயிறுகுறு முகவை
  3. ததைந்த காஞ்சி
  4. சீர்சால் வெள்ளி
  5. கானுணங்கு கடுநெறி
  6. காடுறு கடுநெறி
  7. தொடர்ந்த குவளை
  8. உருத்துவரு மலிர்நிறை
  9. வெண்கைமகளிர்
  10. புகன்ற வாயம்
நான்காம் பத்து
  1. கமழ்குரற் றுழாய்
  2. கழையமல் கழனி
  3. வரம்பில் வெள்ளம்
  4. ஒண்பொறிக் கழற்கால்
  5. மெய்யாடு பறந்தலை
  6. வாண்மயங்கு கடுந்தார்
  7. வலம்படு வென்றி
  8. பரிசிலர் வெறுக்கை
  9. ஏவல் வியன்பணை
  10. நாடுகா ணவிர்சுடர்
ஐந்தாம் பத்து
  1. சுடர்வீ வேங்கை
  2. தசும்பு துளங்கிருக்கை
  3. ஏறா வேணி
  4. நோய்தபு நோன்றொடை
  5. ஊன்றுவை யடிசில்
  6. கரைவாய்ப் பருதி
  7. நன்னுதல் விறலியர்
  8. பேரெழில் வாழ்க்கை
  9. செங்கை மறவர்
  10. வெருவரு புனற்றார்
ஆறாம் பத்து
  1. வடுவடு நுண்ணயிர்
  2. சிறு செங்குவளை
  3. குண்டுகண் ணகழி
  4. நில்லாத் தானை
  5. துஞ்சும் பந்தர்
  6. வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
  7. சில்வளை விறலி
  8. ஏவிளங்கு தடக்கை
  9. மாகூர் திங்கள்
  10. மரம்படு தீங்கனி
ஏழாம் பத்து
  1. புலாஅம் பாசறை
  2. வரைபோ லிஞ்சி
  3. அரு வி யாம்பல்
  4. உரைசால் வேள்வி
  5. நாட்களில் ழிருக்கை
  6. புதல் சூல் பறவை
  7. வெண்போழ்க் கண்ணி
  8. ஏம வாழ்க்கை
  9. மண்கெழு ஞாலம்
  10. பறைக்குர லருவி
எட்டாம் பத்து
  1. குறுந்தாண் ஞாயில்
  2. உருத்தெழு வெள்ளம்
  3. நிறம் திகழ் பாசிழை
  4. நலம்பெறு திருமணி
  5. தீஞ்சேற்றி யாணர்
  6. மாசித றிருக்கை
  7. வென்றாடு துர்க்கை
  8. பிறழ நோக்கியவர்
  9. நிறம்படு குருதி
  10. புண்ணுடை யெறுழ்த்தோள்
ஒன்பதாம் பத்து
  1. நிழல்விடு கட்டி
  2. வினை நவில் யானை
  3. பஃறோற் றொழுதி
  4. தொழில் நவில் யானை
  5. நாடுகா ணெடுவரை
  6. வெந்திறற் றடக்கை
  7. வெண்டலைச் செம்புனல்
  8. கல்கால் தவணை
  9. துவராக் கூந்தல்
  10. வலிகெழு தடக

உரையாசிரியர்கள்

பதிற்றுப்பத்துக்கு பழைய உரை ஒன்று உண்டு. இந்த உரையாசிரியர் யார் என்பதை அறிய இயலவில்லை. இவ்வுரையாசிரியர் நேமிநாதம் இயற்றிய குணவீர பாண்டியருக்கு காலத்தால் பிற்பட்டவர் என்பது இவ்வுரையில் காணப்படும் குறிப்பிலிருந்து தெரிகிறது. இந்த பழையவுரை குறிப்புரைக்கும் பொழிப்புரைக்கும் அளவில் இடைப்பட்டதாக கருதப்படுகிறது. இவ்வுரை பாடல்களின் தலைப்புப் பொருத்தம் குறித்து பேசுகின்றது. முக்கியமான இலக்கணக் குறிப்புகளும் இதில் காணப்படுகின்றன். 1904- ஆம் ஆண்டு டாக்டர் உ. வே. சாமிநாதையர் பழைய உரையுடன் தன் குறிப்புகளையும் சேர்த்து வெளியிட்டார். இதன் பிறகு பதிற்றுப்பத்து தூலிற்கு ஔவை துரைசாமிப்பிள்ளை (1950-ல் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் வெளியீடு), யாழ்ப்பாணம் அருளம்பலவாணர் ( 1960-ல் அ. சிவானந்தநாதன் வெளியீடு), புலியூர் கேசிகன் (1974-ல் சென்னை பாரி நிலையம் வெளியீடு) மற்றும் பலர் உரை எழுதியுள்ளனர்.

நடை

பதிற்றுப்பத்து நூலில் நோய்தபு நோன்றோடை என்ற தலைப்பிடப்பட்ட 44-ஆம் எண் பாடலில் காணப்படும் சில சொற்களின் பயன்பாடுகள்: (அடைப்புக் குறிக்குள் அடி எண்)

கசடு = சேறு, வஞ்சகம் 'கசடு இல் நெஞ்சம்' (6)

காணியர் காணலியரோ = பார்க்கட்டும் அல்லது பார்க்காமல் போகட்டும் 'ஆடுநடை அண்ணல் நிற் பாடுமகள் காணியர் காணலியரோ நிற் புகழ்ந்த யாக்கை' (7)

துளங்கு = ஆடு, துள்ளிக் குதித்து ஆடும் நீர், அலைமோது. 'துளங்குநீர் வியலகம்'(21)

நுடங்கல் = அசைதல் , 'கொடி தேர்மிசை நுடங்க' (2)

பதிப்பு வரலாறு

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1904-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.