first review completed

ந.ச.பொன்னம்பலம் பிள்ளை

From Tamil Wiki

ந.ச.பொன்னம்பலம் பிள்ளை (1836 -1897) இலங்கையைச் சேர்ந்த புராண சொற்பொழிவாளர், தமிழாசிரியர் மற்றும் உரையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள நல்லூரில் 1836-ல் பிறந்தார். தந்தை சரவணமுத்து செட்டியார், ஆறுமுக நாவலரின் மருகன். தந்தையிடமும், நல்லூர் கார்த்திகேய உபாத்தியாயரிடமும் தமிழ்க்கல்வி கற்றார்.

ஆறுமுகநாவலரிடம் நன்னூல் காண்டிகையுரை, திருவிளையாடல் புராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை, கந்தபுராணம், பாரதம், கம்ப ராமாயணம், தொல்காப்பியம் , இலக்கண கொத்து, இலக்கண விளக்க சூறாவளி முதலான நூல்களைக் கற்றார்.

சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் கல்லூரியில் தமிழாசிரியராக பணிபுரிந்தார். திருமணம் செய்துகொள்ளவில்லை.

1897-ல் காலமானார்.

இலக்கியப் பங்களிப்பு

மயூரகிரி புராணம், வில்லிபுத்தூரார் பாரதத்தின் ஆதிபர்வம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார்.

உசாத்துணை

  • தமிழ்ப் புலவர் வரிசை எட்டாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1955
  • மயூரகிரி புராணம், வேதாந்த சுப்ரமணிய பிள்ளை, யாழ்ப்பாணம் சைவப்பிரகாச இயந்திர சாலை, 1937


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.