under review

நிலாப் பள்ளிக்கூடம்: Difference between revisions

From Tamil Wiki
(category & stage updated)
No edit summary
Line 1: Line 1:
{{being created}}
 
தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் குரு-சிஷ்ய முறைப்படி ஆசிரியர் மாணவர்களுக்கு புராணங்களையும் பண்டைய இலக்கியங்களையும் கற்பிக்கும் முறை. திண்ணைப் பள்ளிக்கூடம் என்னும் அமைப்பின் இன்னொரு பெயர். தமிழறிஞர்கள் பலரும் தங்கள் ஆரம்பக் கல்வியை நிலாப் பள்ளிக்கூடம் வழியாகவே கற்றிருக்கின்றனர்.

Line 13: Line 13:
[[அ.கா. பெருமாள்]]: “தமிழறிஞர்கள்” புத்தகம்
[[அ.கா. பெருமாள்]]: “தமிழறிஞர்கள்” புத்தகம்

<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->
{{ready for review}}
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:03, 30 January 2022

தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் குரு-சிஷ்ய முறைப்படி ஆசிரியர் மாணவர்களுக்கு புராணங்களையும் பண்டைய இலக்கியங்களையும் கற்பிக்கும் முறை. திண்ணைப் பள்ளிக்கூடம் என்னும் அமைப்பின் இன்னொரு பெயர். தமிழறிஞர்கள் பலரும் தங்கள் ஆரம்பக் கல்வியை நிலாப் பள்ளிக்கூடம் வழியாகவே கற்றிருக்கின்றனர்.

வரலாறு

யாழ்ப்பாணம் ஹாலந்தின் காலனியாக 150 ஆண்டுகள் இருந்தபோது பள்ளிக்கூடக் கல்வி பரவலானது. 1769 வரை ஹாலந்து ஆட்சிக் காலத்தில் ஈழத்தமிழ் இலக்கியங்கள் செழித்திருந்தன.

ஈழத்தில் தந்தையிடமோ உறவினரிடமோ திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியரிடமோ தமிழ் படிக்கும் வழக்கம் இருந்தது. ஈழத்துத் தமிழ் அறிஞர்களான பொன்னம்பலம், கணேசய்யர் சுன்னாகம் குமாரசாமி, சி.வை. தாமோதரம்பிள்ளை போன்றோர் இப்படித்தான் படித்தார்கள். 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் பரவலாக இருந்த முறை இதுவாகும்.

கல்வி முறை

ஏடு தொடங்குதல் என்ற வழக்கம் தமிழகத்தைப் போலவே யாழ்ப்பாணத்திலும் பரவலாக இருந்தது. விஜயதசமியில் மட்டுமல்ல தைப்பூச நாளிலும் ஏடு தொடங்குதல் நடக்கும். யாழ்ப்பாணம் குடா நாட்டில் ஏடுகளுக்குப் புல்லுக்குப் பதில் பனை ஓலையைக் கொடுக்கும் வழக்கம் உண்டு. பனை ஓலையை நார்நாராகக் கிழித்துத் துண்டுகளாக்கி மாட்டுக்குப் போடுவார்கள். நிலாக் காலத்தில் இந்த வேலை நடக்கும். அப்போது ஆசிரியரோ தந்தையோ பனை ஓலையைக் கிழித்துக்கொண்டே தன் மாணவர்களுக்கு இராமாயண, பாரதக் கதையைச் சொல்வார்கள். இப்படிக் கேட்பதை நிலாப்பள்ளிப் படிப்பு என்று சொல்லிக் கொள்வார்கள். 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் புராணப் பாடம் பழகுதல் என்ற சொற்றொடர் வழக்கில் இருந்தது. இராப்பள்ளியில் புராணங்களைக் கற்றல் என்பது இதன் பொருள்.

உசாத்துணைகள்

அ.கா. பெருமாள்: “தமிழறிஞர்கள்” புத்தகம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.