being created

நாடி ஜோதிடம்

From Tamil Wiki
Revision as of 23:08, 23 September 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நடைமுறை வாழ்வில் ரேகை ஜோதிடம், எண்கணித ஜோதிடம், கிளி ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், முகக்குறி பார்த்துப் பலன் சொல்லுதல், மூச்சு ஜோதிடம், பிரமிடு ஜோதிடம், கோடங்கி பார்த்தல், சோழி பார்த்தல் எனப் பல்வேறு முறைகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் தொன்மையான ஓலைச்சுவடிகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கப்படும் ஜோதிடமே நாடி ஜோதிடம்.

நாடி ஜோதிடம் பெயர் விளக்கம்

‘நாடி' என்பதற்கு அணுகுதல், தேடுதல், விரும்புதல் எனப் பல பொருள்களுண்டு. ‘நாடி ஜோதிடம்' என்பதற்கு ‘நாடி வந்து பார்க்கக் கூடிய ஜோதிடம்' என்று பொருள் கொள்ளப்படுகிறது.

காண்டங்கள்

நாடி ஜோதிடம் பார்ப்பதற்கு காண்டங்கள் உதவியாக இருக்கின்றன. காண்டங்கள் என்றால் உட்பிரிவுகள் என்பது பொருள். நாடியில் மொத்தம் பன்னிரண்டு காண்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் எதிர்காலப் பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவற்றை அறிய, முதலில், முதல் காண்டமான பொதுக்காண்டத்தினைப் பார்க்க வேண்டும். பொதுக்காண்டத்தில் ஒருவரைப் பற்றிய பொதுவான செய்திகள் காணப்படும். அதாவது ஒருவரது பெயர், தொழில், மற்றும் குடும்ப விபரங்கள் அதில் இருக்கும். விரிவான பலன்களை அறிய அதற்கென உள்ள தனித்தனிக் காண்டங்களைப் பார்க்கவேண்டும். இவ்வாறு மொத்தம் 12 காண்டங்கள் உள்ளன. அவை தவிர்த்து மேலும் சில நாடி காண்டங்களும் உள்ளன.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.