being created

நாகராஜா கோவில்

From Tamil Wiki

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் நகரில் உள்ள நாக வழிபாட்டு ஆலயம். மூலவர் நாகராஜர். ஆலயத்தில் அனந்த கிருஷ்ணனுக்கு சந்நிதி உள்ளது. அனந்த கிருஷ்ணன் பெயரிலேயே திருவிழா மற்றும் தேரோட்டம் நடக்கிறது. நாகர்கோவில் ஊர் பெயர் நாகராஜா கோவில் காரணமாக உருவானது .

இடம்

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் நகரில் ஒழுகினசேரி என்னும் பகுதியில் உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பெயர்

நாகர்கோவில் என்னும் பெயர் பழங்காலத்தில் நாகராஜா கோவிலை குறிப்பதாகவே இருந்துள்ளது. பின்னர் கோவிலை சுற்றி உள்ள ஊர் பெயராகவும் அவ்வூர் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலை நகராகவும் மாறியுள்ளது. நாகர்கோவில் என்னும் பெயர் வழங்கப் பட்டிருந்தாலும் கோட்டாறு என்னும் பெயரே பெருவழக்காக இருந்துள்ளது. கி.பி. 1800 க்குப் பின் புரட்டஸ்டாண்டுக் கிறிஸ்த்தவர்கள் வருகைக்குப் பின்னர் நாகர்கோவில் என்னும் பெயர் பெருவழக்காக மாறியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மூலவர்

கோவில் மூன்று கருவறைகளைக் கொண்டது. மூலக்கருவறை நாகராஜா அல்லது நாகரம்மன் கருவறை என அழைக்கப்படுகிறது. மூலக்கருவறை காலத்தால் பழையது. இக்கருவறை மண்சுவரால் எழுப்பப்பட்டு மூங்கில் கம்புகளில் தென்னை ஓலைகளால் வெயப்பட்ட கூரைக் கொண்டது. கருவறை முன்பாக வாகனம், பலிபீடம் இல்லை. கருவறைக்குள் இருக்கும் மூல கற்சிலை நான்கு தலைகள் கொண்டது. இச்சிலை ஐந்து தலைக்கொண்ட உலோக அங்கியால் பொதியப்பட்டுள்ளது. ஐந்தாவது தலை அறுபட்ட நிலையில் காணப்படுகிறது.

சிவன் கருவறையில் மூலவர் ஆவுடையாரில் லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவன் கருவறையின் முன் அறையில் நந்தி சிலை உள்ளது.

அனந்த கிருஷ்ணன் கருவறையில் அனந்த கிருஷ்ணனன் சிலையும் அதன் இருபுறங்களிலும் பாமா மற்றும் ருக்மிணி சிற்ப்பங்கள் உள்ளன.

தொன்மம்

நாகராஜா கோவிலுக்கு எழுதப்பட்ட தலவரலாறு கிடையாது. செவிவழி கதைகளே உள்ளன.

கோவில் இப்போது இருக்கும் இடம் ஒரு காலத்தில் புல்லும் புதறுமாக இருந்துள்ளது. ஒரு இளம்பெண் புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென ரத்தம் கண்டு அஞ்சி பார்த்த போது ஐந்து தலை நாகம் ஒன்றின் தலையில் அறிவாள் வெட்டி ரத்தம் வருவதை காண்கிறாள். அவள் பக்கத்திலிருந்த தன் ஊர் மக்களிடம் நடந்ததை கூற அவர்கள் அங்கு வந்து பார்த்து பரிகாரமாக அவ்விடத்தில் சிறு கோவில் ஒன்றை கட்டினர்.

களக்காட்டு மன்னர் ஒருவர் காட்டுப்பகுதிகளை சீர்செய்து நாடாக்க அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அதிகாரிகள் மக்களை அழைத்துக் கொண்டு காடுகளை சீர்திருத்தினர். அப்போது ஓரிடத்தில் கல் ஒன்று சேதப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. அதைப்பார்த்தவர்களுக்கு நாகப்பிம்பம் தெரிந்துள்ளது. அன்று இரவு களக்காடு மன்னர் கனவில் தோன்றிய நாகர் உன் ஆட்கள் தன்னை சிதைத்ததாகவும் உன்னை பீடித்துள்ள தொழுநோய் தீர எனக்கு ஆலய்ம எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி மன்னர் நாகர்க்கு கோவில் எழுப்பினார்.

நாகவழிபாடு

நாகவழிபாடு மிகத் தொன்மையானது. விஷத்தினல் எதிரிகளைக் கொல்லும் சக்த்தியை பாம்புகள் கொண்டிருப்பதால் அவற்றுக்கும் கடவுளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பி வழிப்பட்டனர். நாட்டுப்புறத் தெய்வங்காளின் கூறுகளை உள்ளடக்கிய வழிபாட்டு முறை. புராணங்கள் அதிக அளவில் உள்வாங்கி கொண்டிருக்கின்றன. கேரளத்திலும் குமரி மாவட்டத்திலும் சர்ப்ப(பாம்பு)க் காவுகள் அதிகமாக ஊள்ளன.

நாகராஜா கோவிலில் நாகவழிபாடு மிகப் பழங்காலத்திலே இருந்துள்ளது. நாகரம்மன் அல்லது நாகராஜா என்னும் இக்கொவில் மூல தெய்வத்திற்க்கு நேர்ச்சை செய்வதன் மூலம் சரும வியாதிகளைப் போக்கி நலம் பெறலாம் என்னும் நம்பிக்கை இங்கு பல காலமாக இருந்து வருகிறது.

கோவில் அமைப்பு

கோவில் வளாகத்தை சுற்றி உயர்ந்த மதில் சுவர் கல் நாகர் உருவங்களுடன் இருக்கிறது. கோவில் சதுரவடிவில் அமைந்துள்ளது. கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் வளாகத்தின் கிழக்கிலும் தெற்க்கிலும் வாசல்கள் உள்ளன. அனந்த கிருஷ்ணன் சந்நிதியின் எதிரிலும், நாகராஜர் சந்நிதி எதிருலுமாக வாசல்கள் உள்ளன. கோவில் முகப்பு நுழைவாயில் கேரளபாணியில் அமைந்துள்ளது.

கோவில் வளாகம்

பக்தர் குளம்: கோவில் முன்புறம் இருக்கிற பிரதான வாயில் கிழக்கு வாயில் அல்லது உமை பங்கனேரி வாயில் என அறியப்படுகிறது. கிழக்கு வாயிலின் இருபுறம் தொங்கும் மாலை மற்றும் போக்களின் ஓவியங்களுடன் கேரள பாணி ஓட்டுகூரையுடன் உள்ளது. கிழக்கு வாயில் வழி உள்ளே நுழைந்ததும் வலதுப்பக்கம் வடகிழக்கு மூலையில் நீராழி என அழைக்க்ப்படும் சதுர வடிவ பக்தர் குளம் உள்ளது. பக்தர் குளம் 8 சென்ட் பரப்பளவில் சுற்றி வடக்கிலும் கிழக்கிலும் தென்னை, வேம்பு முதலிய மரங்கள் உள்ளன. குளத்தை சுற்றியமைந்துள்ள மதில்சுவரில் நாக சிற்பங்கள் அதிகம் காணப்படுகிறது.

அரசடி விநாயகர்: கிழக்கு வாயில் வழியாக கோவில் இருப்பிடத்திற்க்குள் நுழைந்ததும் இடப்புறம் அரச மரத்தின் அடியில் அமைக்க்ப்பட்ட மேடையில் மேற்கு நோக்கி விநாயகர் சிற்பம் உள்ளது. சுற்றிலும் நிறைய நாக சிற்ப்பங்களும் உள்ளன.

கோயில் முகப்பு: அரசமரத்தின் மேற்க்கு திசையில் கொட்டாரம்(அரண்மனை) வடிவில் அமைந்துளள கோவில் முகப்பு உள்ளது. தெற்கு வாயிலின் வடக்கும் தெற்க்கும் இரு தூண்களுடன் கூடிய இரண்டு திண்ணைகள் உள்ளன. கேரள பாணியில் ஓட்டுகூரையுடன் கோவில் முகப்பு அமைந்துள்ளது. முகப்பின் வலப்புற வாயிலில் ஐந்து தலை நாகச் சிலையும் இடப்புற வாயிலில் ஐந்து தலை நாகக் குடையின் கீழ் கிருஷ்ணன் பாமா ருக்குமணியுடன் நிற்கும் சிற்ப்பமும் உள்ளன. வாயில்களுக்கு நடுவில் மேல் பகுதியில் சங்குச் சிற்ப்பமும் தெற்கு வாயிலின் தெற்கு மேற்ப் பகுதியில் சக்கரச் சிற்ப்பமும் அதன் தென் பகுதியில் காவல் தெய்வ சிலையும் உள்ளன. முன்னர் சிலைகள் இருக்கும் மேல் பகுதி சாரளங்களுடன் இருந்துள்ளது, 2006 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது இப்போதுள்ள சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

அலுவலகம்: கோவிலின் தென்புறம் வடக்கு நோக்கி அறநிலையதுறையின் கோவில் அலுவலகம் உள்ளது. இரு வாயில்கள் கொண்ட அலுவலகத்தில் கிழக்கு வாயில் பகுதியில் அறநிலையத்துறை அலுவல் பணிகள் நடைப்பெறுகிறது. திருப்பணிக்குழு அலுவலகம் என்று அழைக்கப்படும் மேற்க்கு வாயிலில் திருப்பணிக் குழுவின் அலுவல்கள் நடைபெறுகிறது. இப்போது அலுவலகம் உள்ள பகுதியும் அதனை ஒட்டி கிழக்கு தெற்காக உள்ள பகுதியும் முன்னர் கல்வெட்டுகள் குறிப்பிடும் குணவீர பண்டிதன் மற்றும் கமலவாகன பண்டிதன் ஆகியோரின் வீடுகளாக இருந்துள்ளது. அவ்வீட்டினர் கோவிலை நிர்வகித்து வந்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது அவை இடிக்கப்பட்டு அதன் சிறுப்பகுதி அலுவலகமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபம்: கோவிலின் தென்புறம் தெற்க்கு நோக்கு ஒரு திருமண மண்டபம் உள்ளது.

மகாமேரு மாளிகை(தெற்கு வாயில்): மேரு என்றால் மேரு மலையைக் குறிக்கும். மேரு மலை சிவபெருமானால் தனுவாக தாங்கப் பெற்ற பொன்னிற ஆயிரம் தலைகளுடைய மலை என்னும் தொன்மம் கொண்டது. இத்தொன்மப் பின்னணியில் கோவிலின் பிராதான வாயிலான தெற்கு வாயில் மகாமேரு மாளிகை என அழைக்கப்படுகிறது. மகாமேரு மாளிகை நாகர்கோவில் நகராட்சியின் முத்திரையாக உள்ளது. தெற்க்கு வாயில் மிகப் பெரிய மரத்திலான கதவுகள் கொண்ட அரண்மனை வாசல் போன்ற உயரமான வாயில். வாயிலின் மேற்புறம் மூன்று கும்ப கலசங்களுடன் ஒட்டுக்கூரை வேயப்பட்ட ஓர் அறை உள்ளது. தெற்கு நோக்கி ’அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக் கோவில்’ என்னும் பெயர் பலகை உள்ளது. வாயிலின் இருபுறமும் அறைகள் உள்ளன. வாயிலின் அடியில் நாகராஜா கோவிலின் தேருக்கான மரப் பொருள்கள் பாதுகாக்கப்படும் பாதாள அறை உள்ளது. வாயிலின் மேற்கு பகுதியில் மலபார் கட்டடக்கலை பாணியிலான முழுக்க தேக்கு மரத்தால் ஆன மாளிகை உள்ளது.

வெளிச்சுற்றுச் சுவர்: நாகராஜா கோவில் 73 செண்ட் பரப்பளவு கொண்டது. கோவிலைச்சுற்றி செவ்வக வடிவில் பெரிய கற்களை கொண்டு கட்டப்பட்ட சுற்றுச் சுவர் உள்ளது. சுவரின் உச்சியில் அதிக எண்ணிக்கையில் நாகச்சிலைகள் உள்ளன. சுவரில் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது.

தெற்குச் சுவர் வாயில்கள்: தெற்குச் சுவரில் திருவிழா காலங்களில் மட்டும் திறக்கப்படும் இரண்டு வாயில்கள் உள்ளன. மகாமேரு மாளிகைக்கு நேராக அமைந்துள்ள பெரியவாயில் வழியாக திருவிழா காலங்களில் வாகனங்கள் எடுத்துச் செல்லப்படும். வாயிலின் மேற்பகுதியில் இரண்டு ஐந்து தலை நாகங்கள் மற்றும் அவற்றின் நடுவே பாமா ருக்குமணியுடன் இருக்கும் அனந்த கிருஷ்ணன் ஆகிய சிலைகள் உள்ளன. வாயிலின் இருபுறங்களிலும் பூக்கள், பூததின் முகங்கள், அன்னவால் கருக்கு, மாலைகள் ஆகியவற்றின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பெரியவாயிலுக்கு கிழக்காக சிறிய வாயில் ஒன்று உள்ளது. சிறிய வாயிலின் மேற்புறம் மூன்று தலை நாகமும் அதன் மேல் விரிந்த இதள்களைக் கொண்ட பூவும் அதனைச்சுற்றி பூமாலை கொண்டு அலங்காரம் செய்ய்ப்பட்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. வாயில்களின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் 1992-ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது அமைக்கப்பட்டதாகும்.

வடக்கு வாயில்: நாகராஜா கோவிலின் முன்பு வடக்கு திசையில் தெற்க்கு நோக்கி வடக்கு வாசல் உள்ளது. வாயிலின் இருபுறமும் விளக்கு பாவைச் சிற்ப்பங்கள் மற்றும் சைவ சமய அடியவர்களின் சிற்பங்கள் உள்ளன. வளைந்த அமைப்புடைய வாயிலின் மேற்பகுதியில் இருபுறமும் ஐந்து தலை நாகத்தின் சிலைகளும் நடுவே இந்து தெய்வங்களின் சிற்பங்கள் பலவும் உள்ளன. அவற்றின் கீழே கையில் கதையுடன் வாயில் காவலர் சிற்பங்கள் உள்ளன. 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்ட வடக்கு வாயில் கோபுரத்தில் பூக்கள், குலை தள்ளிய வாழை ஆகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இடும்பன் சந்நிதி: நாகராஜா கோயில் முன்பக்கம் உள்ள வடக்கு வாயில் உள்ளே இடது பக்கம் இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் பீமனிடம் சண்டையிட்டு மாண்ட அரக்கன் என்றும் முருகனோடு சண்டையிட்டு தோற்று பின்னர் அவன் மனைவி இடும்பியின் வேண்டுகோளை ஏற்று முருகன் அவனை உயிர்ப்பித்து தனது பூத கணங்களோடு சேர்த்துக் கொண்டான் என்னும் தொன்மங்கள் உள்ளன. நாகராஜா கோவிலில் முருகனின் கணங்களின் தலைவனாக முருகனுக்கு காவலாக இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் சந்நிதி 4 அடி நீளமும் 4.1 அடி அகலமும் 6.5 அடி உயரமும் கொண்டது.

ஆஞ்சநேயர் சந்நிதி: நாகராஜா கோவிலின் வடக்குச் சுவரில் தெற்க்கு நோக்கி ஆஞ்சனேயர் சந்நிதி உள்ளது. ஆஞ்சனேயர் சிலை ஒரு காலை மடக்கி அமர்ந்திருப்பதாக உள்ளது. இரு கைகளில் இசைக்கருவிகளும் தலையில் கிரீடமும் கழுத்தில் மாலைகளும் உள்ளன.

துர்கையம்மன் சந்நிதி: நாகராஜா கோவிலின் வடக்கு வாயில் வழியாக செல்கையில் மேற்க்கு திசையில் கிழக்கு நோக்கி மூன்று சந்நிதிகள் உள்ளன அவற்றில் வடக்கில் துர்க்கையம்மன் சந்நிதி உள்ளது. நாக்ரம்மன் கோவிலை தோற்றுவித்து வணங்கி வந்த கன்னிமேட்டுச் சேரிப் பெண்ணின் சமாதியின் மேல் இச்சந்நிதி அகட்டப்பட்டுள்ளாதாக வாய்மொழித் தொன்மம் உள்ளது. துர்க்கையம்மன் சந்நிதி 5.3 அடி நீளமும் 4 அடி அகலமும் 10 அடி உயரமும் கொண்டது. துர்க்கையம்மன் சிலை சங்கு சக்கரம் தாங்கி திருமாலின் பெண் வடிவமாக காட்சியளிக்கிறது.

பாலமுருகன் சந்நிதி: துர்கையம்மன் சந்நிதிக்கு தெற்க்கில் கிழக்கு நோக்கி பாலமுருகன் சந்நிதி உள்ளது. இங்கு முருகன் சிலை வாகனமான மயில் இல்லமல் வேலுடன் காட்சியளிக்கிறார். முருகன் சிலையுடன் மயில் சிலை பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட போது மயிலின் தலை உடைந்து விழ அதை குளத்தில் போட்டு விட்டனர் என்றும் அதற்கு காரணமாக நாகத்திற்க்கு எதிரியான மயில் கோவிலில் இருக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. சந்நிதியின் உள்ளே அமர்ந்த நிலையில் விநாயகர் சிலையும் உள்ளது. பாலமுருகன் சந்நிதி 6 அடி நீளமும் 6.8 அடி அகலமும் கொண்டது. சந்நிதியின் வெளி முகப்பில் வீர மகேஸ்வரரும் வீரபாகுவும் வாயில் காவலர்களாக உள்ளனர். 1979 ஆம் ஆண்டு மில் அதிபரான செங்கோட முதலியாரால் இந்த சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணன்: முருகன் சந்நிதிக்கு தெற்கில் செவ்வக வடிவ பீடத்தில் புல்லங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. கிருஷ்ணனின் சிலை மயிற்பீலி கொண்ட கிரீடத்துடன் காதுகளில் குண்டலமும் கழுத்தில் மாலையுடனும் உள்ளது. விரிந்த குடையின் கீழ் மூன்றடி உயரத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

புஷ்பக்குளம்: நாகராஜா கோவிலின் வடப்புறம் துர்க்கை சந்நிதிக்கு பின்புறம் சிறிய புஷ்ப்பகுளம் என்று அழைக்கப்படும் சிறியக்குளம் உள்ளது. குளத்தில் கோவில் அர்ச்சகர்களான நம்பூதிரிகள் மற்றும் தந்திரிகள் மட்டுமே நீராட அனுமதி உள்ளது பக்த்தர்களுக்கு அனுமதி கிடையாது.

அர்ச்சகர் வீடு: புஷ்பக்குளத்தின் மேற்குப்பக்கம் கிழக்கு நோக்கி அர்ச்சகர் வீடு உள்ளது. 1960 ஆம் ஆண்டுக்கு பின்னரே அர்ச்சகர் வீடு மற்றும் துர்க்கை, பாலமுருகன், கிருஷ்ணன் சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் இப்பகுதி நந்தவனமாக இருந்துள்ளது.

வெளி பிரகாரம்

நாகராஜா கோவிலின் முன்புள்ள இரண்டு வாயில்களில் நாகரம்மன் சந்நிதிக்கு முன்னுள்ள வாயில் உள்ளே செல்வதற்கும் அனந்த கிருஷ்ணன் சந்நிதிக்கு முன்னுள்ள வாயில் வெளியே வருவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. முன்வாயில் வழியாக உள்ளே செல்கையில் காணப்படும் வெளிப்பிரகாரத்தின் வலது பக்கம் திண்ணை அமைந்துள்ளது. திண்ணையில் விளக்குப்பாவை சிற்பங்களுடன் கூடிய கல்தூண்கள் உள்ளன.

மணிக்கூண்டு:


கொடிமரம்:

பலிபீடம்:

நாகமணி பூதத்தான் சந்நிதி:

தெற்கு வாயில்கள்:

வாகன அறைகள்:

நந்தவனம்:

தொட்டில் மரம்:

சாஸ்தா சந்நிதி:

கற்பலகைகள்:

நாகதுவாரபாலகர்கள்:

உள் பிரகாரம்
கருவறைகள்

சிற்பங்கள்

கல் சிற்பங்கள்
உலோகச் சிற்பங்கள்
மரச் சிற்பங்கள்

வாகனங்கள்

திருவிழாக்கள்

வரலாறு

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.